2- பூதம் தந்த பாடம்

குழந்தைகள் எல்லாம் அமர்ந்து கொண்டு தாத்தா சொல்லப்போகும் கதையைக் கேட்க ஆர்வமாக இருந்தார்கள்.

சோமு மட்டும் தூங்கி… தூங்கி பக்கத்தில் இருந்த பாபு மேல் விழுந்தான்.

இதை தாத்தா கவனித்து விட்டார்.

சோமு என அழைத்தார் தாத்தா.

தூங்கிக் கொண்டு இருந்ததால் சோமுவிற்கு காதில் விழவில்லை.

“எழுந்திருடா! தாத்தா கூப்பிடுகிறார்’ என எழுப்பிய பின்பு தான் எழுந்தான் சோமு.

சோம்பலால் கண்ணைக் கசக்கிய சோமு.

“சோம்பல் தான் சிக்கலுக்கு காரணம் வாழ்க்கையில் சோம்பலைப் போல் விரோதி வேறு யாருமில்லை” என்றார் தாத்தா.

“தாத்தா! சோம்பல் அவ்வளவு கொடுமையானதா” என்றனர் குழந்தைகள்.

ஆமாம்! என்ற தாத்தா அதை விளக்க ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.

சரி தாத்தா! என்று குழந்தைகள் கதை கேட்க ஆரம்பித்தார்கள்.

சோமுவும் தூக்கத்தை துரத்திவிட்டு கதை கேட்க ஆரம்பித்தான்.
                   *****
ஒரு ஊரில் ராமு என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு குமார் என்ற மகன் இருந்தான்.

ஒரே மகன் என்பதால் படிக்கவும் வைக்கவில்லை, உழைக்கவும் கற்றுக் கொடுக்கவில்லை.

குமாரும் நன்றாக சாப்பிடுவான், ஊர் சுற்றுவான், தூங்குவான் அவனுக்குத் தெரிந்த வேலை இதுதான்.

ராமுவிற்கு வயதாகி விட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மகனுக்கு குமுதா என்ற பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

மருமகள் குமுதாவை அருகில் அழைத்து, என் மகனுக்கு எதுவும் கற்றுக் கொடுக்காமல் வளர்த்து விட்டேன். உன் அறிவைக் கொண்டு வாழுங்கள் என்றவர் சில நாட்களில் இறந்து போனார்.

குமாரும் தந்தையில்லையே அவர் செய்த வேலைகளைச் செய்ய வேண்டுமே என்ற அக்கறை இல்லாமல் எப்போதும் போல் உழைக்காமல்உண்டு வாழ்ந்தான்.

உழைக்காமல் உண்ணும் செல்வம் கரைந்து போகும் என்பது குமாருக்கு அப்போது தெரியவில்லை.

மனைவி சொல்லியும் கேட்கவில்லை குமார்.

செல்வம் அனைத்தும் கரைந்த பின் வறுமை வாட்டியது அப்போதும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

பக்கத்து ஊரில் தங்கியிருந்த சாமியாரைப் பார்க்க போனான் குமார்.

சாமியாரின் காலில் விழுந்து “எனக்கு நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றான் குமார்.

“ உனக்கு என்ன வேண்டும் மகனே” என்றார் சாமியார்.

நான் வேலை செய்தே பழகவில்லை. எனவே, நான் சொல்லும் வேலையைச் செய்ய ஒரு ஆள் வேண்டும் என கேட்டான் குமார்.

“அப்படியா!” என்ற சாமியார் தாடியை தடவிக் கொண்டவர்.சரி என தலையை ஆட்டிக் கொண்டார்.

மகனே! நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை ஒரு மண்டலம் சொன்னால் நீ நினைப்பது போல் வேலையால் கிடைப்பான்.

அவனுக்கு நீ வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன்னை விழுங்கிவிடுவான் என்றார் முனிவர்.

“ஆகட்டும் சாமி அப்படியே செய்கிறேன்” என உத்தரவு வாங்கிக் கொண்டான் குமார்.

முனிவர் கூறிய மந்திரத்தை ஒரு மண்டலம் சொல்லி வந்தவன் கடைசி நாள் கண்களை மூடி உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அவன் முன் பளிச்சென ஒரு ஒளி வீசுவதை உணர்ந்த குமார் கண்களைத் திறந்து பார்த்தான்.

ஒரு பூதம் நின்று கொண்டு இருந்தது.

அதைக் கண்ட குமார் சந்தோசத்தில் பரவசமடைந்தான். அந்த சந்தோசம் அற்ப சந்தோசம் என்பதை அறியவில்லை அப்போது.

“எஜமானே! எனக்கு என்ன வேலை என கட்டளை இடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை ஒரு நிமிடம் கூட என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. நீங்கள் வேலை கொடுக்கவில்லை என்றால் உங்களையே விழுங்கி விடுவேன்” என்றது பூதம்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் எனது மூதாதையரின் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலம் பராமரிக்காமல் பாழ்பட்டு கிடைக்கிறது. அங்கு சென்று கிணற்றைத் தூர் எடுத்து படி அமைத்து வா! என்றான் குமார்.

சரி, என சென்ற பூதம் சில மணித்துளிகளில் வந்து நின்றது.

எஜமான்! துர் வாரி, படிக்கட்டுகள் அமைத்து விட்டேன். வேறு வேலை கொடுங்கள் என்றது பூதம்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply