76- நோய் கிடங்கொடேல் கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கியதும். பள்ளிக்கூடம் வந்த சில மாணவர்களுக்கு சளிப் பிடித்து காய்ச்சல், இருமல் என வந்துவிட்டது. இருமும் போது காற்றில் பரவி பக்கத்து மாணவன் என பலருக்கும் காய்ச்சல். வீட்டிற்குச் சென்று குணம் ஆவதற்குள் அம்மா, தம்பி, அப்பா என அடுத்தடுத்து சளி, காய்ச்சல், இருமல் பரவி போவதற்குள் இரண்டு வாரங்கள் ஆகி… அதன் சோர்வு போகி நல்லபடியாக செயல்பட மூன்று வாரமே ஆகிவிடும். இப்படி நோய் வராமல் தடுக்க தொட்டிச் செடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் தண்ணீரைச் சுத்தப் படுத்த வேண்டும். அதில் உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஊற்றினால் கொசு வராமல் இருக்கும். டெங்கு போன்ற நோய் வராமல் தடுக்கலாம் என மருத்துவ சிகிச்சைக்கு வந்தவரிடம் சமூக ஆர்வலர் சொல்லிக் கொண்டிருந்தார். “நோய் கிடங்கொடேல்” என்று புலவர் ஔவையார் கூட…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
கவலைகள் வந்தால் அவற்றை மனதில் பூட்டாதே! கடவுளிடம் ஒப்படை அமைதி உன்னைத் தேடி வரும்! நம்பிக்கையுடன் இரு! விடியல் நிச்சயமா வரும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
குடும்பம் ஒரு கோயில் அன்பு அதன் தீபம்! கடவுள் அன்புள்ள இல்லத்தில் வாழ்கிறார்! பொறுமையை வளர்த்துக் கொள்! மகிழ்ச்சி தானாகப் பெருகும்! வீடு சொர்க்கமாகும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
இன்று நீ எடுக்கும் நல்ல முடிவு! நாளைய வாழ்க்கையை மாற்றும்! கடவுளை நினைத்து தொடங்கு! நம்பிக்கையுடன் செயல் படு! உழைப்பைத் தொடர்! வெற்றி உன் துணையாகும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
காவலாளிகள் மன்னரிடம் விடைபெற்று யானையை அடக்கிய வீரனைத் தேடினார்கள். இரவு முழுவதும் யானையை அடக்கிய அசதியில் விடிந்தது கூடத் தெரியாமல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான் சங்குராஜா. “எழுந்திரு, ஐயா! எழுந்திரி! யார் நீ! எந்த ஊர்! புதிதாக இருக்கிறாயே” எனக் காவலாளிகள் எழுப்ப… நெளிந்து கொண்டு கண்களைத் திறக்க முடியாமல் கொட்டாவி போட்டபடி மெதுவாக எழுந்தான் சங்குராஜா. கைகளால் கண்களை கசக்கியபடி காவலாளிகளை சங்கராஜா பார்த்தான். எங்கிருந்து வருகிறாய்?இங்கு எப்போது வந்தாய்? யானையை இரவு அடக்கினாயா? எனக் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே போனார்கள். “நான் பக்கத்து நாட்டில் இருந்து வருகிறேன். இரவு நான் தான் யானையை அடக்கினேன்” என்றான் சங்குராஜா. அரசரிடம் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள். உங்கள் வீரம் தெரியாமல் இந்த சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். என மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். சங்குவைப் பார்த்த மன்னரும் மகிழ்ந்து சிம்மாசனத்தில் இருந்து எழுந்து வந்தவர் சங்குராஜாவை கட்டித் தழுவிக்…
உண்மையான வெற்றி மற்றவரை வெல்வதில் இல்லை! உன்னை நீ வெல்வதில் உள்ளது! கடவுள் உன் உள்ளத்தைப் பார்க்கிறார்! நல்ல மனிதனாக வளர்! அதுவே பெரிய சாதனை. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“மன்னருக்கு உடல்நிலை சரியில்லை’ வைத்தியர் பரிசோதித்து விட்டு இதயம் மிகப் பலகீனமாக இருக்கிறது என்கிறார் இளவரசே!” என்றார் மந்திரி.“ தந்தையே நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அமைதியாக இருங்கள்” என்றான் இளவரசன் முகுந்தன். “ஆம் மகனே! அவ்வாறுதான் இருக்க ஆசைப்படுகிறேன். அதற்காக நீ ஒரு உபயம் செய்ய வேண்டும்” என்றார் மன்னர். என்ன செய்ய வேண்டும் தந்தையே! என்றான் இளவரசன் முகுந்தன். “மகனே! ‘அரகரா என்ற மீனும் சிவசிவா’ என்கின்ற கொக்கும் இருக்கிறதாம். அதை நீ கொண்டு வந்தால் அந்த நாமத்தைக் கேட்டுக் கொண்டே அமைதியாக இருப்பேன்” என்றார் மன்னர். “அவ்வாறே செய்கிறேன் தந்தையே” என்ற இளவரசன் தனது பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான். முகுந்தன் பயணப்படுவதையும், தந்தைக்கு உடல்நலம் இல்லை என்பதையும் கேள்விப்பட்ட சங்குராஜா தனது அன்னையிடம் சென்று கூறினான். இதைக் கேள்விப்பட்ட ராணி காவேரி, மகனே சங்குராஜா உனது தந்தை நீதி நெறி தவறாதவர் அவருக்கு எந்த…
மற்றவர் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்ளாதே! அதை ஊக்கமாக மாற்று! கடவுள் ஒவ்வொருவருக்கும் தனி பாதை தந்துள்ளார்! உன் பாதையில் நட உன் நேரம் வரும்!நீயும் ஜொலிப்பாய். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
3- அரகரா மீனும் சிவசிவா கொக்கும் “தாத்தா இன்று எங்களுக்கு என்ன கதை சொல்லப் போகிறீர்கள்” என சிறுவர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். “அமைதி….. அமைதி” என்றார் தாத்தா. நாம் பிறருக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்கும் வகையில் கதை சொல்லப் போகிறேன். அதை கேட்கும் நீங்களும் பிறருக்காக நன்மைகள் செய்ய வேண்டும்” என்ற தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ***** குறுநில மன்னர்களில் ஒருவர் ராஜேந்திரன். காவேரி என்ற இளவரசியை திருமணம் செய்தார். எல்லா செல்வங்களும் இருந்தது. குழந்தை செல்வம் மட்டும் அந்த அரண்மனையில் தவழவில்லை. “தனக்கு ஒரு வாரிசு இல்லையே” என்ற ஏக்கம் மன்னர் ராஜேந்திரனிடம் இருந்தது. இதை அறிந்த ராஜேந்திரனின் தந்தை, மன்னருக்கு மறுமணம் செய்து வைத்தார். வாரிசு வேண்டுமே என்பதற்காக. இரண்டாவது மனைவி கோதைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் மன்னர் கவலையுற்றார். அந்த சமயத்தில் அந்நாட்டிற்கு முனிவர்…
புத்தகம் கையில் இருந்தால்! அறிவு மனதில் வளரும்! கடவுள் கொடுத்த அறிவை வளர்த்துக் கொள்!கற்றதை பகிர்ந்து கொள் அறிவு ஒளியாகும்! அது உன் பாதையைக் காட்டும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.