நல்ல பெயர் சம்பாதிப்பது பெரும் செல்வம் சேர்ப்பதை விட உயர்ந்தது! கடவுள் நேர்மையானவர்களை கை விடுவதில்லை! உண்மையோடு வாழ்ந்திரு மதிப்பு தானாக வரும்! உயர்வு நிலைத்து நிற்கும். இசை கலைமணிச.ம. பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
அறிவு தேடும் மனம் என்றும் இளமையாக இருக்கும்! கடவுள் கற்றலை விரும்புகிறார்! ஒவ்வொரு நாளும் புதிது கற்றுக்கொள்! அறிவு உன்னை காக்கும்! வெற்றியும் உன்னைத் தேடும்.இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
74- நைவினை நணுகேல் சங்கரியும், சங்கவியம் சோப்புத் தண்ணீரில் முட்டை விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சங்கவி ஊதும் போது வரும் பெரிய, சிறிய முட்டைகளை கையால் சங்கரி தட்டி விட்டு இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி தரையில் சோப்பு நீர் இருப்பது தெரியாமல் வழுக்கி விட்டு விடும் வெளியில் போய் விளையாடுங்கள் என்றார்கள்.அப்போது அங்கு வந்த அப்பா சொன்னார். இந்த நீர்க்குமிழி போன்ற சற்று நேரத்தில் அழியக்கூடிய வேலைகளைச் செய்யக் கூடாது என்று “நைவினை நணுகேல்” என்று கூறி இருக்கிறார் ஔவையார் என்றார். பாட்டியும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட… சரி என்ற சங்கவியம், சங்கரியும் வீட்டின் முன் உள்ள மணல் பகுதிக்கு சென்று விட்டார்கள் விளையாட.
தோல்வி கதவை மூடினால் முயற்சி ஜன்னலை திறக்கும்! கடவுளை நம்பு அவர் உனக்கான சாவியை தருகிறார்!மீண்டும் தொடங்கு! வெற்றி உன் அருகில் தான் உள்ளது முன்னேறு.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
உலகம் சந்தேகப்படலாம்! ஆனால் நீ உன்னை நம்பு! கடவுள் உன்னை வீணாக படைக்கவில்லை! உன் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு! தைரியமாக செயல்படு சாதனை உன்னை நாடும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
வாய்ப்புகள் வர காத்திருக்காதே! உன் உழைப்பால் உருவாக்கு! கடவுள் உன் முயற்சியை கைவிடமாட்டார்! தொடர்ந்து கற்றுக்கொள் தொடர்ந்து முன்னேறு! சிகரம் நிச்சயம் தொடுவாய். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
உன் மனம் சொல்வதைக் கேள் ஆனால் உண்மையை பின்பற்று! கடவுளின் நேர்மையான பாதையை விரும்புகிறார்! அதில் நடந்தால் நிம்மதி கிடைக்கும்! நம்பிக்கையுடன் செல் வாழ்க்கை மலரும்.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையை வெல்வான்! கடவுள் கொடுத்த நேரம் பொக்கிஷம்! அதை வீணாக்காதே பொன்னாக நேரத்தை செலவழி! பொக்கிஷமான வாழ்க்கையை வாழ்ந்திடு. இசை கலைமணிச. ம.பாலகிருஷ்ணன்.
சுபா அண்ணன்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு சந்தோசப்பட்டாள்.எல்லோருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு சுதாகருக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாள் சுபா. இப்படியே நாட்கள் ஓடின. சுதாகரும் அங்கே தங்கி விட்டான். இந்த காலகட்டத்தில் சுபா,சுதாகரை விரும்ப ஆரம்பித்துவிட்டாள். தங்கைக்கு வரன் தேட ஆரம்பித்தார்கள் அண்ணன்கள். அண்ணா! என்றாள் சுபா.என்னம்மா… ஏன் தயக்கம் சொல்லு எனக் கூறினர் அண்ணன்கள். அண்ணா! நான் வந்து…. வந்து…“வந்து…போயி என்று ஏன் இழுக்கிறாய். நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருவோம் சொல்லும்மா” என்றனர். நான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வீர்களா? என பீடிகை போட்டாள் சுபா. சரி சொல்லு என கூறினார்கள் அண்ணன்கள். சத்தியமா!திட்டக்கூடாது, சொன்ன பின் மாறக்கூடாது என்றாள்சுபா. “சத்தியம்… சத்தியம்” போதுமா! ஏன்? இன்று இப்படி நடந்து கொள்கிறாய் சுபா என கேட்டார்கள்.அண்ணா! வந்து நான் இந்த சுதாகரையே திருமணம் செய்து கொள்கிறேன் என நிறுத்தினாள். இந்த நொண்டியையா? என ‘இடி’ விழுந்தது போல் உட்கார்ந்து…
சுதாகரை உக்கார வைத்து குஞ்சுகளையும் அழைத்து பழங்களை சாப்பிட கொடுத்தன பட்சிகள். பசியுடன் இருந்த சுதாகர் களைப்பு தீர சாப்பிட்டான். தாகம் தீர தண்ணீர் குடித்தான். தான் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த சுதாகர்.பட்சிகளிடமும், குஞ்சுகளிடமும் சொல்லி விடை பெற முற்பட்டான் சுதாகர். நீ எங்கு செல்ல வேண்டும் என்று பட்சிகள் கேட்டன. சுதாகர் தன் கதையை சுருக்கமாகச் சொல்லி இப்போது சாமியாரிடம் போக வேண்டும் என்று சொன்னான். இதைக் கேட்ட பட்சிகள் “குழந்தாய் இந்த சாமியார் சுயநலம் பிடித்தவன்” “அவன் நலம் பெற உன்னை பலி கொடுக்க அழைத்துப் போகிறான்’ என்றன.உனக்கு சில யோசனைகள் சொல்கிறேன். அது போல் செய் என ரகசியமாக சொல்லிக் கொடுத்தன. பறவைகளிடமும், குஞ்சுகளிடமும் விடை பெற்றுக் கொண்டு சுதாகர் நடந்தான். வரும் வழியில் ஒரு முள்ளை எடுத்து காலில் குத்திக் கொண்டு நொண்டி… நொண்டி நடந்து சாமியார் முன் வந்தான். அவனைப் பார்த்த…