75- நொய்ய வுரையேல்
உமாவும், கலாவும் பக்கத்து… பக்கத்து வீடு.
உமா ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் போதே கவனமாகக் கேட்பாள்.
அதனால், அவளுக்கு படிக்கும் போது நன்றாகப் புரிந்து படிப்பாள்.
கலா ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் போது அவள் கவனம் கேட்பதில் இருக்காது.
பக்கத்தில் உள்ள மாணவிகளிடம் ஏதாவது கேட்டு பேச்சுக் கொடுப்பாள். வீணாக நேரத்தை போக்கி விடுவாள்.
வீட்டிற்கு வந்து பாடப் புத்தகத்தை எடுத்தால் ஒன்றும் புரியாது. மூடி வைத்துவிட்டு தம்பி கூட விளையாடப் போய் விடுவாள்.
உமா நல்ல மார்க்கு வாங்குவாள் கலா குறைவான மார்க்கு வாங்குவாள்.
கலா அம்மா, உமா அம்மாவிடம் வந்து குறை கூறினாள்.
கலா அம்மா சொல்வதை கண்டு கொள்ளாமல் அப்போதும் உமாவிடம் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
இதை கவனித்த உமாவின் அம்மா சொன்னார்கள்…
கலா எதையும் கவனிக்காமல் வீண் பேச்சில் கவனம் செலுத்துகிறாள் “நொய்ய வுரையேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார்கள். வீண் பேச்சை குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.
கலாவில் அம்மாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.