கூடுவிட்டு கூட பாயும் வித்தை தெரியாது முருகா பாடு பட்டு உழைக்கத் தான் தெரியும் முருகா மாடு போல உழைத்தேன் மாட்டுப் பெண் ஆனதனால் தோடு போட்ட காதுகளில் தேன் தமிழ் கேட்டேன் தெவிட்ட வில்லை முருகா தித்திப்பாய் இருந்த தனால் செவிக்கு இன்பம் கிடைத்தது பிறந்த பயன் அடைந்தது நவிழும் நல் நாவில் நல்ல தமிழ் தந்தாய் புவியில் பிறக்க வைத்து பிறவி பயன் தந்தாய் கசடு இல்லா மனம் கந்தன் அருளால் வந்தது அசதி வந்தால் கூட முருகா என்றால் போகும் பசப்பு வார்த்தை இல்லை முருகா உந்தன் அருளே வசந்த வாழ்வைத் தந்த வண்ண மயில் முருகா
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
உச்சி குளிர்ந்தது முருகா உன் பாதம் பணிந்ததால் குச்சி கோல் எடுத்து குதித்து ஆடி மகிழ்கிறோம் பச்சி பறவை எல்லாம் பழம் தின்னும் போது பிச்சி பூசூட்டி முருகா உன்னை வணங்கு கிறோம் காயாய் இருந்த மனம் கனிந்து இருக்கும் போது சேயாய் எம்மைக் காக்க நீ இருக்கும் போது மாய வலைகள் எல்லாம் அறுந்து தான் போகும் தூய துணை இருக்க துன்பம் எமக்கு இல்லை வேலனே வினைகள் போக்கி வேண்டும் வரம் தருபவனே உலகத்து மக்களைக் காத்து உளம் மகிழ வைப்பவனே கலம்பகம் மாலை தொடுத்து சூட்டி மகிழ வைப்போம் குலம் காக்கும் குருவே குடி காக்க வருவாய்.
இருமுடி !சுமைக்கிறோம்! திருவடி நாடி நடக்கின்றோம்! சரணமே ஐயப்பா! சாமி சரணமே ஐயப்பா! திருமுகம்! தரிசிக்க! விரதம் இருந்து வருகிறோம் !சரணமே ஐயப்பா! சாமி சரணமே ஐயப்பா! வருகின்றோம்! வருகின்றோம்! மலைகளைத் தாண்டி வருகின்றோம் !தடைகளை மீறி வருகின்றோம்! புலிக்காட்டுப் பாதையில் வழிகாட்டு நீயென்று வருகின்றோம்! வருகின்றோம்! தரிசனம் நாடி! ஐயப்பன் புகழ்னைப் பாடி !திருமுகம் நாடி !உமது திருவடித் தேடி !தரிசனம் கண்டு வரங்களை பெற்றோம். ( இரு)சரணம் -1தாயினைக் காக்க நோயினைப் போக்க புலியுடன் வந்தவனே! பக்தருக்காக நித்தமும் அருள காட்டினில் அமர்ந்தவனே ! ( 2)சுற்றிலும் காடு! மலையினில் வீடு !தனிமையில் அமர்ந்திருப்பாய்! நித்தமும் நாடி! வருகின்ற பேருக்கு !அருளினை நீ கொடுப்பாய்! திருவருள் புரியும் ஐயனே! உனது… புகழினைப் பாடி வந்திடும் பேருக்கு மலைகளின் மீதினில்அழகிய ஜோதியாய் அருளினைப் புரிந்திடு! (இரு)சரணம்- 2பக்தரின் நாமத்தில் நித்தமும் வாழ்ந்திடும் அழகிய ஐயப்பனே! சந்தன மேனியில் சங்கடம் போக்கிடும்…
இருபத்தொன்றாம் திங்களில் நிகழ்வது குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதலைத் தெரிவிக்கும் பருவம் 1-விருப்பு வெறுப்பற்று இறை சிந்தனையுடன் கடமை செய்ய காரியம் கைக்கூடும் நெருக்கம் அதிகரிக்க இறை அன்பால் நண்பனாய் பேசி அருகில் வருவான் மருவலர் இல்லா வாழ்வு பெற்று வளமை காணும் நற் சிந்தனையுடன் வருவான் வருவான் மணிகண்டன் சின்னஞ் சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர் 2-சாந்தி தியானத்தின் ஒரு நிலை சந்தனம் போல் மணம் இருந்தால் காந்தி கண்ட சாந்தம் கிடைக்கும் காமாரி காமுகன் கலந்த குழந்தை மாந்தளிர் போன்று நன்மை செய்வான் மாயன் கீதை உபதேசம் போல் சாந்தம் கிடைக்க சரண் அடைந்தோம் சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர் 3-சக்கர சுழற்சி வாழ்க்கை முறை நெறியுடன் வாழ ஆனந்தம் கிட்டும் அக்கறை கொண்ட வாழ்வே நிலைக்கும் அக்கன் அருள் கூட வளமாகும் உக்கிரம் கொண்டு கோபம் கொண்டால் உதவாமல் போகும் இல்லற வாழ்வு முக்கியம் தெரிந்து தெளிந்து…
பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வது குழந்தை சிறுபறை கொட்டுகின்ற பருவம்.1- பனிரெண்டு ஆண்டு ஒரு மாமாங்கம் புனித நீராடுவது மகர விழா பனிரெண்டு ஆண்டு கும்ப நீராடல் கோயில் குட முழுக்கு விழா பனிரெண்டு ஆண்டு வனவாசம் கானகத்தில் ராம காவிய இலங்கைப் போர் பனிரெண்டு ஆண்டுகள் அரண்மனை வாசம் மணிகண்டனுக்கு யெனசிறுபறை முழங்கீரோ செல்வா 2-பதினொட்டு அத்தியாயம் கிருஷ்ணரின் வாயிலிருந்து கீதையாக போர் களத்தில் பிறந்தது பதினெட்டு மெய் எழுத்துக்கள் தமிழ் மொழியில் மெய் எழுத்தாகப் பிறந்தது பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்த பூமியில் முக்கனி தித்திப்பு உண்டு வளர்ந்தவன் பதினொட்டுப் படியேறி அமரப் போவானென்று மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா 3-மஹிஷி முனியை சம்காரம் செய்ய பூமியில் உதிர்த்த சுடர் ஒளியே அகிலம் காக்க வந்த வரவே சந்தனம் போல் மணக்கப் பிறந்தாய் எகினன் படைப்பில் நீ அன்னம் தீமையகற்றி நல்லதைச் செய்ய வந்தாய் சகியாக்கி மஞ்ச மாதா வாக்கும் மணிகண்டனுக்கு…
(பதினேழாம் திங்களில் நிகழ்வது சிறுவர், சிறுவீடு கட்டி விளையாடுகின்ற போது அதனை சிறுவர்தம் காலால் சிதைத்துக் கெடுதலைக் கூறுகின்ற பருவம். சிறுமியர் என் வீட்டை அழிக்க வேண்டாம் என வேண்டுவதாகக் கூறுவது)1-சலசலக்கும் நீரோடை வானுயர்ந்த மரங்கள் இயற்கை இடமெல்லாம் இறைவன் இருப்பானாம் கலகலப்பாய் சிறுவர்தம் சிறுமியர் விளையாட குருமண்ணில் நீர்பட்டு கலந்த கலவையில் ஆலயம், சிறுவீடு கட்ட மண்குவித்து சிறுமிகள் சேர்ந்து வடிவமைத்த வீடு கலகம் செய்யும் சிறுவருடன் சேர்த்து மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா2- திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடல் தாலாட்ட ஓயாது உழைக்கும் அலைகடல் திருவாகிய மால் மருகன் திருச்செந்தூர் முருகன் வெற்றி கண்ட கடல் மருகி சீதை சிவலிங்கம் பிடித்து வணங்கி பூஜை செய்த கடல் உருகி தொழுது வணங்கி வழிபடுகிறோம் மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா 3-தாய் சேய் வளர்ச்சி கண்டு பூரித்து மகிழ்ந்து உச்சி முகர்வாள் நோய் வந்தால் தனக்கு வந்ததாக எண்ணி மருந்து…
பதினைந்தாம் திங்களில் நிகழ்வது (வானத்தில் உள்ள நிலவை குழந்தையுடன் விளையாடுவதற்கு தாயார் அழைக்கும் பருவம்)1- முழுநிலவின் ஒளி உலகுக்கு வெளிச்சம் உன் வருகையும் உலகுக்கு வெளிச்சம் புழு பூண்டு உயிர்கள் நிலவின் குளிர்ச்சியில் கண்டு களிப்புற்று விளையாடும் கழுமணியே மணிகண்டா வெண்நிலவு தூய்மை உள்ளம் கொண்ட அன்புக் குழந்தை அழல் கண்டு முற்றத்தில் விளையாடும் மணிகண்டனுடன் விளையாட அம்புளியே வாவா! 2-மேகத்தில் ஒளிந்து விளையாடும் நிலவே உன்னைப் பிடித்து விளையாட மனம் வேகமாக வானத்தில் வருகிறது குழந்தைக்கு கரு மேகத்துடன் தொட்டு விளையாண்டு அகலிடம் சுற்றும் நிலவே அம்புலியே விரைந்து இங்கு ஓடி வா அகம் மகிழவைக்க ஒளியுடன் குளிர்ச்சியுடன் மணிகண்டனுடன் விளையாட அம்புளியே வாவா! 3-வளர் பிறையாய் வளரும் நிலவே உன் வருகையால் மகிழ்ச்சிப் பெற்றோம் வளம் தரவே உலகைச் சுற்றுகிறாய் நீ காணாத இடமுண்டா நிலவே களம் மனைத்தும் காண வருவாய் உருமாறும் நிலவே முழு நிலவே குளம்…
1-தமிழ் கடவுள்:- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். இந்த நிலத்திற்கு உரிய கடவுள் முருகன். குறிஞ்சி நில மக்கள் பேசும் மொழி தமிழ்.தமிழ் கடவுள் முருகன். ஈசானம், வாமதேவம், அகோரம்,சத்தியோஜாய்தம் ,தட்புருசம் என்ற ஐந்து முகத்துடன். அடியவர்களுக்கு அருள் கொடுக்கும் கீழ்நோக்குப் பார்வையுடன் கூடிய ஆறாவது முகமாகிய திருவதனம் இணைந்து ஆறுமுகங்களில் இருந்து அனல் பொறி பிறக்கச் செய்தார் சிவன். 2-ஆறுமுகனாக பிறந்தார் முருகன். “அனலில் பிறந்து புனலில் வளர்ந்து” உருவாகிய காரணத்தினால் கந்தன் என்று பெயர் பெற்றார். “அழகு” என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு முருகன் வேறு அல்ல .முருகனுக்கு கண்கள் பன்னிரண்டு. தமிழுக்கு உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. முருகன் சிரமும், கரங்களும் பதினெட்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் பதினெட்டு. முருகனுக்கு ஆயிதம் வேல் ஒன்று. தமிழ் எழுத்துக்களில் ஆயுதம் ஒன்று. முருகனுக்கு முகங்கள் ஆறு. தமிழில் இன எழுத்துக்கள்…
(பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது நடக்கும் பருவக் குழந்தையை தன்பால் நடந்து வருமாறு தாய், தந்தையர் வேண்டுதல்)1- பம்பை ஆற்றங் கரையில் விட்டுவந்த மைந்தனை பந்தளம் மன்னன் இராஜசேரன் தம்பிரான் தன் குறைபோக்க தந்தார்யென எண்ணி மகிழ்ந்து அரண்மனையில் வளர்க்க எம்பிரான் அருளால் மணிகண்டன் எனப்பெயரிட்டு வளர்த்த மகனுக்கு வேதமும் வில்வித்தை கம்பு, குதிரை ஏற்றம் வாள்பயிற்சி கற்க வேண்டும் மகனே நடந்து வருக! 2-குரு போற்றும் மாணவனாய் ஆகி குரு மகனுக்கு பேசாத வாய் கருவிலே கேட்காத காதுஉடைய மகனை பேசவும் கேட்கவும் செய்து தட்சணைதரும் தருவே! அன்ன நடையாய் நடந்து நல்லவை செய்யப் பிறந்த மகனே திருவுள்ளம் கொண்ட மகனே மணிகண்டா தாய் தந்தையிடம் நடந்து வருக! 3-புல்லாங் குழல் இசைக்கு மயங்கி புல் பூண்டு மரம் மனிதர் செல்லாது கேட்டு ரசித்து கண்ணன் அருள் பெற பணிந்து வணங்க இல்லாம் மகிழவந்த மகனே மணிகண்டா உன் வரவால் பந்தலநாடு…
மந்திகள் மரம் தாவும்மலை. மலர்கள் பூத்தாடும் மலை உந்தி பறந்தாலும் மலை உணர்வில் நிலைத்தாடும் மலை சந்தி வேல்பிடித்த மலை சக்தி ஆற்றல் தந்தமலை முந்தி முடிவெடுத்த மலை முருகன் குடியிருக்கும் மலை குறத்தி குறிசொன்ன மலை வேடவர் வாழும் மலை குறவள்ளி திணைகாத்த மலை திகட்டாத தேனிருக்கும் மலை உறவாய் மனம்புரிந்த மலை உறுதியாய் கைபிடித்த மலை இறவியாய் இணைந்த மலை இன்பமாய் உலாவிய மலை குயில்கள் கூவும் மலை குருவிகள் பாடும் மலை மயில்கள் ஆடும் மலை மந்திகள் தாவும் மலை ஒயில் ஆடும் மலை ஒன்றாய் கூத்தாடும் மலை அயில் அழகான மலை அமர்ந்து வணங்கும் மலை.