இருமுடி !சுமைக்கிறோம்! திருவடி நாடி நடக்கின்றோம்! சரணமே ஐயப்பா! சாமி சரணமே ஐயப்பா!
திருமுகம்! தரிசிக்க! விரதம் இருந்து வருகிறோம் !
சரணமே ஐயப்பா! சாமி
சரணமே ஐயப்பா!
வருகின்றோம்! வருகின்றோம்! மலைகளைத் தாண்டி வருகின்றோம் !
தடைகளை மீறி வருகின்றோம்! புலிக்காட்டுப் பாதையில் வழிகாட்டு நீயென்று வருகின்றோம்! வருகின்றோம்! தரிசனம் நாடி! ஐயப்பன்
புகழ்னைப் பாடி !
திருமுகம் நாடி !உமது
திருவடித் தேடி !
தரிசனம் கண்டு வரங்களை பெற்றோம். ( இரு)
சரணம் -1
தாயினைக் காக்க நோயினைப் போக்க புலியுடன் வந்தவனே! பக்தருக்காக நித்தமும் அருள காட்டினில் அமர்ந்தவனே ! ( 2)
சுற்றிலும் காடு! மலையினில் வீடு !
தனிமையில் அமர்ந்திருப்பாய்! நித்தமும் நாடி! வருகின்ற பேருக்கு !
அருளினை நீ கொடுப்பாய்! திருவருள் புரியும் ஐயனே! உனது…
புகழினைப் பாடி வந்திடும் பேருக்கு
மலைகளின் மீதினில்
அழகிய ஜோதியாய் அருளினைப் புரிந்திடு! (இரு)
சரணம்- 2
பக்தரின் நாமத்தில் நித்தமும் வாழ்ந்திடும்
அழகிய ஐயப்பனே!
சந்தன மேனியில் சங்கடம் போக்கிடும்
சந்தன சச்சிதனே!
பக்தருக்காக நன்மையைக் காக்க
துணை வரும் என் ஐயனே! நம்பிக்கை கொண்ட பக்தருக் கெல்லாம்
நலம் தரும் என் ஐயனே!
மனம் உருகி நினைத்திடும் பேருக்கு
மனம் இறங்கி அருள்தர வா நீ! அனைத்திலும் இருப்பவன் ஜோதியில் சிரிப்பவன்
பத்தரை காத்திடு! (இரு)
இசை கலைமணி
ச.மா. பாலகிருஷ்ணன்