கூடுவிட்டு கூட பாயும்
வித்தை தெரியாது முருகா பாடு பட்டு உழைக்கத்
தான் தெரியும் முருகா
மாடு போல உழைத்தேன்
மாட்டுப் பெண் ஆனதனால் தோடு போட்ட காதுகளில்
தேன் தமிழ் கேட்டேன்

தெவிட்ட வில்லை முருகா
தித்திப்பாய் இருந்த தனால்
செவிக்கு இன்பம் கிடைத்தது
பிறந்த பயன் அடைந்தது நவிழும் நல் நாவில்
நல்ல தமிழ் தந்தாய் புவியில் பிறக்க வைத்து பிறவி பயன் தந்தாய்

கசடு இல்லா மனம்
கந்தன் அருளால் வந்தது அசதி வந்தால் கூட
முருகா என்றால் போகும் பசப்பு வார்த்தை இல்லை
முருகா உந்தன் அருளே வசந்த வாழ்வைத் தந்த
வண்ண மயில் முருகா

Share.

Leave A Reply