(பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது நடக்கும் பருவக் குழந்தையை தன்பால் நடந்து வருமாறு தாய், தந்தையர் வேண்டுதல்)
1- பம்பை ஆற்றங் கரையில் விட்டுவந்த
மைந்தனை பந்தளம் மன்னன் இராஜசேரன் தம்பிரான் தன் குறைபோக்க தந்தார்யென
எண்ணி மகிழ்ந்து அரண்மனையில் வளர்க்க எம்பிரான் அருளால் மணிகண்டன் எனப்பெயரிட்டு
வளர்த்த மகனுக்கு வேதமும் வில்வித்தை
கம்பு, குதிரை ஏற்றம்
வாள்பயிற்சி கற்க
வேண்டும் மகனே நடந்து வருக!
2-குரு போற்றும் மாணவனாய் ஆகி
குரு மகனுக்கு பேசாத வாய்
கருவிலே கேட்காத
காதுஉடைய மகனை
பேசவும் கேட்கவும் செய்து தட்சணைதரும்
தருவே! அன்ன நடையாய் நடந்து
நல்லவை செய்யப் பிறந்த மகனே
திருவுள்ளம் கொண்ட மகனே மணிகண்டா
தாய் தந்தையிடம் நடந்து வருக!
3-புல்லாங் குழல் இசைக்கு மயங்கி
புல் பூண்டு மரம் மனிதர் செல்லாது கேட்டு ரசித்து கண்ணன்
அருள் பெற பணிந்து வணங்க
இல்லாம் மகிழவந்த மகனே மணிகண்டா
உன் வரவால் பந்தலநாடு மகிழ்ந்தது
பல்லியம் வாசிப்பது கேட்டு மணிகண்டா
தாய் தந்தையுடம் நடந்து வருக!
4-நிறைமதியாய் தோன்றி ஒளி கொடுத்து
மனம் குளிர வைத்த மணிகண்டா
கறையில்லா கடமை ஆற்ற வந்தாய்
கருவிழி மலர காட்சி தந்தாய்
குறை போக்கி குடி காத்தவனே
குலக் கொடியாய் வந்த மகவே
இறை அருளாய் இன்னல் போக்கினாய்
தாய் தந்தையிடம் நடந்து வருக!
5-தெய்வீகத் தன்மை கொண்டு பிறந்து
மண்ணுலகில் ஆசை, அகங்காரம், மமகாரம் மாய்க்கப் பிறந்த மகனே மணிகண்டா
தியான சுகம் பரமனை அடையும்
தூய்மையான மனம் அமைதி தரும்
நெய் சோறு தருகிறோம் உண்டு
தாய்மை அன்பில் நெகிழ்ந்து நடந்து
தாய் தந்தையிடம் நடந்து வருக!
6-கடமையைச் செய்யும் மனிதர் எல்லாம்
தவம் செய்யாமல் உன்னை அடைவர்
மடமை போக்கவே மனிதராய் பிறந்தாய்
சம்சாரத்தில் இருந்து கொண்டே மணிகண்டா திடமன ஆற்றல் தந்து மக்கள்
நலமுடன் வாழச் செய்யும் மகனே
அடக்கம் உள்ள அன்பு மகனே
தாய் தந்தையிடம் நடந்து வருக!
7-முயற்சி செய்யும் செயல் யாவும்
இறைவனின் அருள் என்று எண்ணி
அயற்சி அடையாது செய்யும் செயலில்
வெற்றி தந்து ஆசிநல்கும் இறைவன்
இயற்கையுடன் என்றும் இயங்கி அருள்வான்
என்பதை நிரூபிக்க வந்த மணிகண்டா
தயவு காட்டிய கருணைக் கடலே
தாய் தந்தையிடம் நடந்து வருக!
8-மனம் போன போக்கில் நடக்காது
மனம் ஒருமுகப் படுத்தப் பட்டு
தினம் கடைப் பிடிப்பது யோகம்
படிப்படியாய் வாழ்வில் கடைப் பிடிக்க
சினம் குறைந்து அமைதி பிறக்கும்
ஆனந்தம் நிலைக்கும் தெளிவு வரும்
கனம் பொருந்திய மகனே மணிகண்டா
தாய் தந்தையிடம் நடந்து வருக!
9-எதிர்பார்ப்பு ஆசை மதிப்பைக் கடந்து
இரவு பகலாக
தாயையண்டிய சேயாய் கதியென சரணம் அடைந்த பக்தரை
கிருஷ்ணர் மிகவும் நேசித்து இன்புறுவர்
நதிபாயும் பக்கமெல்லாம் பசுமை தரும்
இறையருள் இருக்கும் இடம் ஆனந்தம்
விதியை வென்று வரவே
வந்தமகனே
தாய் தந்தையிடம் நடந்து வருக!
10-கர்மத்தின் பயனைத் தியாகம் செய்ய
யாகம் தானம் தவம் நற்காரியம்
தர்மத்தின் பலனாய் சோம்பல் அற்று
சக்திக்கு ஏற்ப செய்ய வேண்டும்
ஏர்போல் உழுது விதைக்கும் போது
உரிய காலத்தில் விளைவது போல
கூர்மம் போல் உறுபடக்கிய மகனே
தாய் தந்தையிடம் நடந்து வருக.