உச்சி குளிர்ந்தது முருகா
உன் பாதம் பணிந்ததால் குச்சி கோல் எடுத்து
குதித்து ஆடி மகிழ்கிறோம் பச்சி பறவை எல்லாம்
பழம் தின்னும் போது
பிச்சி பூசூட்டி முருகா
உன்னை வணங்கு கிறோம்
காயாய் இருந்த மனம்
கனிந்து இருக்கும் போது சேயாய் எம்மைக் காக்க
நீ இருக்கும் போது
மாய வலைகள் எல்லாம்
அறுந்து தான் போகும் தூய துணை இருக்க
துன்பம் எமக்கு இல்லை
வேலனே வினைகள் போக்கி
வேண்டும் வரம் தருபவனே உலகத்து மக்களைக் காத்து
உளம் மகிழ வைப்பவனே கலம்பகம் மாலை தொடுத்து
சூட்டி மகிழ வைப்போம் குலம் காக்கும் குருவே
குடி காக்க வருவாய்.