Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

(குழந்தை ஒன்பதாம் மாதத்தில் நிகழ்வது சப்பாணிப் பருவம் குழந்தை இரு கைகளையும் சேர்த்து தட்டுதல் கால்களை மடக்கி அமர்ந்து கொள்வது) 1-பாற்கடலை கடைந்த போது வந்த அமிர்தத்தைக் குடிக்க தேவரும் அசுரரும் சாற்றுதல் செய்த போது மோகினியாய் வேடமிட்ட திருமால் பெற்ற குழந்தை தாற்றுதல் பெருமாளுக்கு கைவந்த கலை ஒன்பது அவதாரம் எடுத்த திருமாலைப் போற்றி புகழ்ந்து தாலாட்டுப் பாடுகிறேன் கைதட்டி சப்பாணி கொட்டு வீரே! 2-தொங்கும் கொடி மல்லிகை நறுமணம் மலர் மாலை துளசி மாலை பாங்குடன் சூட்டி அழகு படுத்த பக்தர் கண்டு ஆனந்தம் கொள்ள சங்கு சக்கரம் கரம் தாங்கி தலை முடியில் கிரீடம் தாங்கி மாங்கன்று தழைக்கும் பிருந்தாவன கண்ணன் கைதட்டி சப்பாணி கொட்டு வீரே! 3-தேவகியின் மகனாய் சிறையில் பிறந்து யசோதை மகனாய் ஆயர்பாடியில் வளர்ந்து அவதார கண்ணன் அஞ்சா நெஞ்சன் மலையைத் தூக்கி இந்திரனை அடக்கினான் அவனி காக்க பூதகியைக் கொண்டான் காளிங்கனை…

Read More

(பதினோராம் திங்களில் நிகழ்வது குழந்தையை முத்தம் தரும்படி தாய் தந்தை அழைப்பது) 1-முதற்கால பூஜையில் பிரம்மா பூஜிக்க இரண்டாம் கால பூஜையில் விஷ்ணு பூஜிக்க இதம் தரும் இனிய மந்திரம் ஓதி மூன்றாம் கால பூஜை செய்த பார்வதி நாதன் திருவடி வணங்கிய தேவ ரிஷிகள் மனித உயிர்கள் நான்காம் பூஜை செய்து பாத விந்தனை பணிந்து வணங்கிய தந்தைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா!2-அடிமுடி இல்லாத சோதி லிங்கன் அடியவரை காத்து அருளும் லிங்கன் தடியடி பட்டு மண் சுமந்து தமிழைக் காத்த சொக்க நாதன் குடிகையில் குடிகொண்ட கூத்தன் நடராஜன் நாட்டியம் வளர்த்த தில்லை அம்பலத்தான் குடிகொண்ட கொண்டையில் கங்கையும் சந்திரனும் சூட்டியவனுக்கு முத்தம் தர வா வா மணிகண்டா 3-பக்தி செலுத்தும் உயிர்க்கு எல்லாம் சக்தி கொடுப்பவள் தாய் என்றால் முக்தி கொடுக்கும் மார்க்கம் காட்டும் சிவ ராத்திரி வழி பாடு பக்குவம் இல்லா மனிதரைக் கூட…

Read More

(குழந்தை ஏழாம் திங்களில்நாவசைத்து பேச முற்படும் அப்போது தாய் பாடும் தாலாட்டை கவனிக்கும் பருவம். பாட்டின் ஈற்றடி “தாலே தாலேலோ” என்று முடியும்.) 1-விண்ணவர் மண்ணில் வந்த வரவால் மண்ணவர் போற்றப் பிறந்த செல்லமே பண்ணவனே பணிந்து பதமலர் காண கல்லும் முள்ளும் தாண்டி வருவர் புண்ணியன் புண்டரிகன் பெற்ற மகனே புண்ணியம் செய்தோம் நாங்கள் காண மண்ணில் பூத்த புதுவரவே மணிகண்டா கண் வளர்வாய் தாலே தாலேலோ! 2-காலைப் பனியில் எழுந்து குளித்து கடவுள் உன்னை காண நடந்து மாலை போட கோயில் வந்து கார்த்திகை முதல் தேதியில் அணிந்து காலை மாலை குளித்து வணங்கி விரதம் இருந்து காண வருவர் பாலைக் குடிக்கும் குழந்தை மணிகண்டா கண் வளர்வாய் தாலே தாலேலோ! 3-புலன் அடக்கி மனம் அடக்கி புத்துணர்வு பெற உன்னைக் காண வலம் வந்து சாமியை வணங்கி தரிசனம் கண்டு மெய் மறந்து தலம் யாவும் சுற்றிச்…

Read More

(ஐந்தாம் மாதத்தில் குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கால்களை நீட்டி…. மடக்கி உந்தி நகர்ந்து தலை அசைய பார்த்து சிரித்து ஆடும் பருவம்)1-பாலமுதம் பலாச் சுளை சுவையுடன் முக்கண்ணன் கண்ணன் அருளும் வேலமுகன் புன்சிரிப்பு யானை முகன் அன்பும் பெற்ற செல்வமே மணிகண்டா பாலகன் மகனாய் வளர்ந்து சிறுபிள்ளை அன்புக்கு ஏங்கும் பிள்ளை தாலாட்டு கேட்டாலும் புரியாத குழந்தை செங்கீரை ஆடு வீரே! 2-பட்டத்து அரசரும் அரசியும் மக்களும் அன்புடனே வளர்த்து வந்தனர் கொட்டுதல் முழங்கி பெயர் வைத்தனர் கொழுமை அழகு வளரக் கண்டு சேட்டை செய்யும் அழகு கண்டு சுத்தியும் போடுவர் பணிப் பெண்கள் கோட்டை கோமான் வணங்கும் மணிகண்டா செங்கீரை ஆடு வீரே! தாய்க்கு தலைவலி என்று சொல்லி காட்டுப் புலிப் பால் வேண்டும் என்றார் உயிர்நிலை துச்சமாய் எண்ணிய மணிகண்டா வானகம் சென்றான் சிறு பிள்ளை செயிர் தீர்க்கப் புறப்பட்டான் மணிகண்டன் செல்லமாய் வளர்ந்த சிறு…

Read More

( மூன்றாம் மாதத்தில் பிள்ளையை காக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல்) விநாயகர் பூலோக மக்களின் முதல் கடவுளே புவி வாழ வாழ்த்தும் விநாயகா மேலோக மக்களும் உன்னையே வணங்குவர் விண்ணவர் போற்றும் விநாயகா கீலோக கடல்வாழ் காக்கும் கடவுளும் தாய் தந்தை சுற்றி வந்த மூலோக விநாயகா தம்பி ஐயப்பனை புவியோர் மகிழக் காத்திடுவாய். முருகன் தேவர்களைக் காக்கப் பிறந்த முருகா எளியோரைக் காக்கும் கருணைக் கடலே தேவர்கள் அமுது உண்ட போதும் அசுரர்கள் துயரம் தொடர்ந்தது காவல் தெய்வமாய் காக்க வந்தாய் குன்றில் நின்று மக்களைக் காப்பவனே சேவல் கொடியோனே தம்பி ஐயப்பனை கருணை கொண்டு காத்திடுவாய். பிரம்மா நான்முகனே வேதப் பொருளே பிரம்மா வேண்டும் வரம் தருபவனே நான்கு திசையில் தொழில் செய்பவனே நல்லவே நடக்க அருள்பவனே ஒன்றுதல் செய்தாய் சிவன் திருமலை மோகினி உருவில் ஒன்று சேர்த்தாய் நன்றாய் படைத்தாய் குழந்தை ஐயப்பனை என்றும் அன்புடன்…

Read More

மின்னும் ஒளிச் சுடரே மீனாட்சி சுந்தரேசர் மகனே குன்றக் குடியில் குடிகொண்ட சிறுகுன்றில் வாழும் முருகனே என்னை ஆளும் இறைவனே ஏதும் அறியா சிறுமினான் கன்று போல துள்ளியே காண வரும் கன்றுனான் பால் கொடுக்கும் பசு பாரா பட்சம் பார்க்காது மால் மருமகனே நீயும் பரந்த மனம் கொண்டு சால் பணிந்தவர்க்கு எல்லாம் சக்தி கொடுக்கும் முருகா வேல் பிடித்த கரத்தால் எம்மையும் காத் தருள்வாய் அன்பு கொண்ட முருகா ஆணை இட்டுச் சொன்னாய் துன்பம் உனக்கு இல்லை துணை நான் என்று இன்பம் கண்டு கொண்டேன் இனிக்கும் வாழ்வை நீயென்று பின்பு என்ன பயம் பாதம் பணிந்தேன் பக்குவமாய்.

Read More

பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன் பரவசம் அடைந்தேன் முருகா வேர்த்து வேர்த்து நடந்தேன் வேண்டும் வரம் அடைந்தேன் கால நேரம் பார்த்து வணங்க வில்லை முருகா வேலவனை நினைக்க நேரம் ஒரு தடையா முருகா! பக்கத்தில் நீ இருந்தால் பாசத்துடன் நான் இருப்பேன் கக்கத்தில் இருக்கும் சேயாய் மகிழ்ந்து தான் இருப்பேன் சிக்கல் வந்தால் கூட சிரமம் இல்லை முருகா முக்கனி சாராய் வந்து தமிழ் சாறு கொடுப்பதனால்! வெட்டி வேலை இல்லை வேலவன் நிறைந்து இருக்க கட்டி காக்கும் வேலை கந்தன் புகழ் பாடுவதே தட்டிக் கழிக்க மாட்டேன் தடையைத் தகர்த்து எறிவேன் சுட்டிப் பெண்ணாய் வந்து சுனங்காமல் எழுத வந்தேன். பச்சை செடி கொடியில் பசுமை நீ முருகா நச்சு நாகப் பாம்பின் ரத்தினம் நீ முருகா பேச்சுத் தமிழ் நடையில் மூச்சு நீ முருகா ஆச்சு தரிசனம் அனைத்தும் ஆள்வது நீ முருகா! சுவடு தந்த முருகா சொர்க்கம்…

Read More

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். குன்று போல் உயர்ந்த எண்ணங்களைக் கொடுக்க வல்லவன் குமரக்கடவுள். கடல் போல் கருணையை வாரி வழங்குபவன் திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி. பகைவருக்கும் கருணை காட்டியவன் பாலசுப்பிரமணியன். ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிப்பதற்காகவே எடுக்கப்பட்டது. ராமன்- ராவணனையும் நரசிம்மன்- இரணியையும் கிருஷ்ணன்- கம்சனையும் அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால், சூரனை அழிப்பதற்காக அவதரித்த முருகன். சூரனோடு போரிட்டு, முருகனின் வேல் அவன் மேல் பாய்ந்தவுடன் சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறினான். மயிலை தனக்கு வாகனமாகவும், சேவலை கொடியாகவும் மாற்றிக் கொண்டு பகைவனுக்கும் அருளாசி வழங்கியவன் முருகன். அப்படிப்பட்ட முருகன் தோன்றிய வரலாற்றை சற்றுப் பார்ப்போம்….. சூரபத்மன் என்பவன் சிவபெருமானை நினைத்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் யாகங்கள் வளர்த்து, மனதை ஒரு முகப்படுத்தி தவம் செய்தபோது…. சூரபத்மனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் நேரில் தோன்றி வரம் அருளினார். அவ்வாறு வரம் கொடுக்கும் போது அழியாத…

Read More

3-ஓம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பாலசித்தருக்குசதுரக்கள்ளி பால்கொடுத்து தொண்டு செய்துவந்த அம்மவைக்கு குழந்தை இல்லையென்ற ஏக்கம் இருந்தது ஞானத்தால் அறிந்த பாலசித்தர் அருந்திய பாலின் மீதியை குடிக்கச் சொல்ல கருவாகி வளர்ந்த குழந்தை சிவஞான பாலய சுவாமி வாழ்ந்த காலத்தில் பால் உணவாகி விபூதி மருந்தாகப் பயன் படுத்தினார். முதியவரை இளமையாக்கி குழந்தை அருளினார் முதிர்ந்த நரை கருப்பாக்கி மனம்மகிழ வைத்தார் இழந்த நாட்டை மீட்டிக் கொடுத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு இவர்வாழ்ந்த காலம்.

Read More

தீபம் ஏற்றி திருவருள் பெற்றிடுவோம் தீமை அகற்றி கோபம் அழித்திடுவோம் பாவம் விலக்கி பயனில் கருத்தாவோம் பாதம் பணிந்து பண்பை வளர்த்திடுவோம். அறிவைப் பெருக்கி அறியாமை போக்கிடுவோம் அறிவியல் சாதனத்தை தேவைக்கு வாங்கிடுவோம் அல்லும் பகலும் உழைத்த உழைப்பிற்கு அகம் மகிழ பணம் வாங்கிடுவோம். ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடும் தீபாவளியை அனைவரும் கொண்டாட ஆண்டவனை வழிபடுவோம் ஆண்டியும் அரசனும் கொண்டாடும் தீபாவளியை ஆகாயம் போல அன்புடன் வரவேற்போம். ஆடை நெய்திடும் மக்கள் மகிழ ஆடை வாங்கி வறுமை போக்கிடுவோம் பிஞ்சு விரல்கள் தொழில் ஒழித்து பஞ்சு போல மகிழ வைப்போம். கோடி கோடியாய் சேர்க்கும் படத்தை கோடியில் இருப்பவர்க்கு உதவி மகிழ்வோம் தேடித் தேடி உதவும் சேவை வாடி நிற்கும் வறுமை போக்குமே!

Read More