பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வது குழந்தை சிறுபறை கொட்டுகின்ற பருவம்.

1- பனிரெண்டு ஆண்டு ஒரு
மாமாங்கம்
புனித நீராடுவது மகர விழா பனிரெண்டு ஆண்டு கும்ப நீராடல்
கோயில் குட முழுக்கு விழா பனிரெண்டு ஆண்டு வனவாசம் கானகத்தில்
ராம காவிய இலங்கைப் போர்
பனிரெண்டு ஆண்டுகள் அரண்மனை வாசம்
மணிகண்டனுக்கு
யெனசிறுபறை முழங்கீரோ செல்வா


2-பதினொட்டு அத்தியாயம் கிருஷ்ணரின் வாயிலிருந்து
கீதையாக போர் களத்தில் பிறந்தது
பதினெட்டு மெய் எழுத்துக்கள் தமிழ்
மொழியில் மெய் எழுத்தாகப் பிறந்தது
பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்த பூமியில்
முக்கனி தித்திப்பு உண்டு வளர்ந்தவன்
பதினொட்டுப் படியேறி அமரப் போவானென்று
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா

3-மஹிஷி முனியை சம்காரம் செய்ய
பூமியில் உதிர்த்த சுடர் ஒளியே
அகிலம் காக்க வந்த வரவே
சந்தனம் போல் மணக்கப் பிறந்தாய்
எகினன் படைப்பில் நீ அன்னம்
தீமையகற்றி நல்லதைச் செய்ய வந்தாய்
சகியாக்கி மஞ்ச மாதா வாக்கும்
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


4-வாபர் தாக்க வந்த போது
அன்பால் பாடம் புகட்டி
வழிகாட்டிய
பூபதி இந்திரனும் வான் தேவர்களும்
வணங்கும் பெயர் பெற்ற மணிகண்டா
ஆபத்து அறியா சிறு பிள்ளாய்
அமைச்சர் அன்னையால் வந்த போதும்
விபரீதம் அடையாமல் அன்பு காட்டிய
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


5-புலியாக வந்தான் இந்திரன் உனக்கு
பால் கொண்டு வருவதாகச் சொன்னவன்
பலியாகி வருவான் என்ற எண்ணம்
குறை ஆசையாய் போன போது
பலியம் போல் மலர்ந்து அருளியவன்
மன்னித்து மகிழ்ந்து மலை ஏறுவான்
கலியுகம் காக்கப் பிறந்தவன் என்று
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


6-ஐந்து கரனுக்கும் ஆறு முகனுக்கும்
தம்பியாய் பிறந்தவன் ஐயப்பன் ஆகி
நைந்து போன வாழ்வை வளமாக்க
மணிகண்டன் ஐயப்பன் ஆகப் போகிறான்
ஐந்து அடக்க புலன் அடக்கி
துளசிமாலை அணிந்து ஹரிமளமேடு எஹருமேலி
வந்து தர்மவான் சபரிமலை சுவாமி
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


7-சத்தியம் காக்கும் சபரி நாதா
சரண கோசம் பாடி வர புத்திர பாக்கியம் கொடுக்கும் நாதா
புத்தொளி வாழ்வில் பெற படியேறி
நித்திரை மறந்து பாடி வர
நித்தியம் செய்து வரும் பக்தர்
நித்தன் வணங்கி நிம்மதி கொள்ள
மணிகண்டனுக்கு சிருப்பறை முழங்கீரோ செல்வா


8-சலசலக்கும் நீரோடை பசுமை மரங்கள்
கல்லும் முள்ளும் கடந்து வந்து
பலப்படுத்தும் சூரிய ஒளிக்கதிர் கண்டு
ஏழு சுரங்களில் இசை பாடி கலகலக்கும் பக்தர் கூட்டம் ஒன்றாய்
வருவது கண்டு விலங்கும் வழிவிட
மலமலவென்று மலை
ஏறிவருவர் என்று
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


9-மலை ஏறி வந்தோம் ஐயா
மடு கடந்து வந்தோம் ஐயா தலைப் பக்கம் நெய் ஊற்றி
கட்டு கட்டி வந்தோம் ஐயா நிலை இல்லா வாழ்க்கை என்று
நிமலன் உன்னைக் காண வந்தோம்
இலை போல பயன் பெற்றோமென
மணிகண்டனுக்கு சிறுபறை முழங்கீரோ செல்வா


10-படிப் படியாய் ஏறி வந்தோம்
பரமன் மகன் காண வந்தோம்
அடிக் கரும்பாய் இனிக்கும் உந்தன்
அருள் தேடி அலைந்து வந்தோம்
நொடிப் பொழுதில் கண்டு கொண்டோம்
ஏற்றி விட்ட அருளைக் கண்டு படி ஏறி வந்தோம் என்று
மணிகண்டனுக்கு சிருப்பறை முழங்கீரோ செல்வா.

Share.

Leave A Reply