பதினைந்தாம் திங்களில் நிகழ்வது (வானத்தில் உள்ள நிலவை குழந்தையுடன் விளையாடுவதற்கு தாயார் அழைக்கும் பருவம்)
1- முழுநிலவின் ஒளி உலகுக்கு வெளிச்சம்
உன் வருகையும் உலகுக்கு வெளிச்சம்
புழு பூண்டு உயிர்கள் நிலவின்
குளிர்ச்சியில் கண்டு களிப்புற்று விளையாடும் கழுமணியே மணிகண்டா வெண்நிலவு தூய்மை
உள்ளம் கொண்ட அன்புக் குழந்தை
அழல் கண்டு முற்றத்தில் விளையாடும்
மணிகண்டனுடன் விளையாட அம்புளியே வாவா!
2-மேகத்தில் ஒளிந்து விளையாடும் நிலவே
உன்னைப் பிடித்து விளையாட மனம்
வேகமாக வானத்தில் வருகிறது குழந்தைக்கு
கரு மேகத்துடன் தொட்டு விளையாண்டு
அகலிடம் சுற்றும் நிலவே அம்புலியே
விரைந்து இங்கு ஓடி வா அகம் மகிழவைக்க ஒளியுடன் குளிர்ச்சியுடன்
மணிகண்டனுடன் விளையாட அம்புளியே வாவா!
3-வளர் பிறையாய் வளரும் நிலவே
உன் வருகையால் மகிழ்ச்சிப் பெற்றோம்
வளம் தரவே உலகைச் சுற்றுகிறாய்
நீ காணாத இடமுண்டா நிலவே
களம் மனைத்தும் காண வருவாய்
உருமாறும் நிலவே முழு நிலவே
குளம் தெளிந்த நீரில் வந்து மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
4-குறை நிலவாய் குறைந்த நிலவே
மெல்ல மெல்ல இருள் தருபவனே
பிறை காண வந்த குழந்தை
உன்மேல் அமர்ந்து உலகைக் காண
நிறைமதி ஆகி ஒளி வீசி
தென்றல் காற்றின் குளிர்ச்சி உடலில்
மறைமொழி ஓதி அழைக்கிறோம் நிலவே
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
5-விண்ணில் நட்சத்திரம் எண்ணி விளையாடி
மண்ணில் மின்விளக்கு எண்ணி விளையாடி வெண்ணிற ஒளி வீசும் நிலவே
விடியும் வரை தொடரும் விளையாட்டு
ஆண்டுகள் கடந்தாலும் புதிய வரவாய்
வளர்ந்தும் தேய்ந்தும் வானில் வரும்
வண்ண நிலவே பூமிக்கு வந்து
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா
6-அடுக்கு அடுக்காய் மேகக் கூட்டம்
சத்ய லோகம் சிவ லோகம் அடுத்து அடுத்து சென்று வருவதால்
நிழல் விஷ்ணு லோகம் செல்ல
கடுந் தவன்தான் நீ செய்தாயோ
அழகு நிலவே குளிர்ந்த தென்றலே
நீடு வாழும் நிலவே நீவந்து
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
7- ஏழு நிற சூரிய ஒளிப்பட்டு
வண்ணக்கீற்று உதயம் மறைவது கண்டு
ஏழு சுரம் ஒலிப்பது போல்
பறவைகளின் சங்கீதம் கேட்டுவரும் நிலவே
வாழும் மக்கள் ஓய்வு எடுக்க
அமைதி தரும் குளிர்ந்த நிலவே
தழும்புதல் இல்லா ஒளிச் சுடரே
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
8-நிலவில் கால் பதித்து கண்டார்
பூமியில் கால் பதித்த மணிகண்டன்
நிலத்தில் கண்டெடுத்தார் பந்தள மன்னன்
விண்ணும் மண்ணும் ஒளி வீச
உலகைச் சுற்றி வரும் நிலவே
உன் ஒளியை விட பிரகாசம் உலாவுதல் கண்டு விலகிச் செல்லாதே
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
9-மதியே வானத்து நிறம் மாறினாலும்
பூமியில் பிறந்த மணிகண்டன் நிறம்
நதியில் தெரியும் சூரிய தகதகப்பு
தங்க மேனி கண்டு கண்கூசும்
கதிர் வட்டம் கண்டு மறைகிறாய்
கடமை ஏற்க பிறந்த மணிகண்டன்
உதிப்பு கண்டு விரைந்து வா
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!
10-வானத்து நிலவே செல்லும் இடத்திற்கு
விரைந்து வருகிறாய் உன் குளிர்ச்சி
கானம் பாடும் இசையைத் தருகிறாய்
மேகத்தில் தவழ்ந்து இன்பத்தை தருகிறாய்
கூனல் போல் வளைந்த வானவில்
அருகில் சென்று விளையாடும் நிலவே
தானம் கொடுத்த தவப்பயனால் கிடைத்த
மணிகண்டனுடன் விளையாட அம்புலியே வாவா!