Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

உலாவும் நட்சத்திர வானில் உலாவி வந்த முருக நிலா வந்த போதும் உன்முக ஒளியில் மங்கியதோ பலாச் சுளை தித்திப்பு தமிழ் சுவையில் கண்டேன் குலாவும் குடும்ப வாழ்வில் தமிழ் பண்பு கண்டேன். முருகா என்ற மூன்றெழுத்தில் உயிர் மூச்சு இருக்குதப்பா தருவே கற்பக விருட்சமாய் காலம் எல்லாம் இருப்பாய் மருத நிலத்து மக்களுக்கு மலர்ச்சி நீ தருவாய் கருணி வாழ் முருகா காலம் எல்லாம் காப்பாய் தரணி காக்கும் முருகா தாமதம் இன்றி வாராய் குறத்தி வள்ளி முருகன் குமுறும் மக்களைப் பாராய் சரணம் சொல்லும் பக்தர் சங்கடம் போக்க வாராய் பரமன் மகனே முருகா பக்தர் குறையை தீராய் சக்தி வேலால் வென்றாய் சகதியில் விலாமல் காப்பாய் பக்தி கொண்ட மக்களை பாசம் கொண்டு காப்பாய் திக்கு தெரியாமல் இருப்பவருக்கு திசையை காட்டி காப்பாய் முக்தி வழி காட்டி மோட்ச தீபம் காட்டுவாய் மண்ணுலகம் காக்க வந்தவனே மானிடரை…

Read More

சிவ மைந்தன்சிவ மைந்தன் தோன்றினான்-சிவன் நெற்றிக் கண்ணில் தோன்றினான் காலம் காலமாய் போற்றிடலாம்- கண்ணால் கண்டு வணங்கிடலாம் வடிவேலனை.காவடி ஆடும் சாலையில்- மனம் சேவடி பாடி மகிழ்ந்திடும் பாவடி தரும் ஞானத்தில்- முருகன் காவடி தூக்கி ஆடிடுவோம்.ஆறுபடை வீட்டில் முருகன் -அன்பு வேறுபாடு இன்றி அருள்வான் மாறுபட்ட கருத்தை கொண்டதால் -அசுரன் கூறு பட்டுப் போனான்.திருச்செந்தூர் சூரன் சம்ஹார- விழா வரும்பக்தர் கூட்டம் கண்டால் கருணை கந்தன் மனம் -புரியும் தரு கற்பகமாய் வளரும்.அலை கடலும் வணங்கி- வரும் மலை மகளும் காட்சிதர தலை வணங்கி ஆசி -பெற உலைக் களமாய் மனமுருகும்.உமையவள் வேலால் வெற்றி -வரும் படைவீடு காத்து நிற்கும் தடைகள் எல்லாம் தகர்த்து- செல்லும் கொடை உள்ளம் காத்து நிற்கும். மலர் தூவி மனம் -மகிழும் வலம் வந்து வணங்கி நிற்கும் நலம் யாவும் உன்- அருளால் குலம் காக்கும் குடிகாக்கும் கார் மேகம் மழை- கொடுக்கும் மார்கழி…

Read More

2-ஓம் ஸ்ரீ சிவஞான பால சித்தர் சித்தம் தெளிந்தவன் சித்தன் செகமெலாஞ் சிவமென அறிந்தவன் சித்தன் அரிமா மஹிமா இலகிமா கரிமா ப்ராப்தி வசித்துவம் பிரகாமியம் ஈசத்துவம் எட்டு. சித்தர்களில் வல்லவராய் இருந்த பாலசித்தர் பிரம்மபுரத்து மக்களுக்கு அருளாசி வழங்கி மயூரம் பெருமுக்கல் மலையில் வழிகாட்டியவர் முருகனை குருவாகப் பெற்ற சிவஞானர். சதுரக்கள்ளிப் பாலையும் ஆவாரம் பூவையும் உணவாய் கொண்டு மூன்றாயிரம் ஆண்டுகள் பாலசித்தர் வாழ்ந்து மக்கள் இருள்நீக்கி முருகனருகில் மயிலத்தில் சமாதியில் வாழ்கிறார்.

Read More

புதுவை சித்தர் அறிவோம்புதுவை என்ற ஞான பூமியில் புத்துயிர் பெற்று இறை தரிசனம் ஆத்மஞானம் பெற்ற முப்பத்தி இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமான புண்ணிய பூமி.1- ஓம் ஸ்ரீ கழுவெளி சித்தரை பற்றி அறிவோம் கழுமரத்தில் ஏறினால் வழுக்கி விழுவர்கழுவெளி சித்தர் மகிமையறியா மன்னர் ஏளனம் செய்து வழுக்கி வீழ்ந்தார் மகாளீஸ்வரர் சிதறி வெளிச் சென்று ஒட்டி பாணம் செப்புப் பட்டையால் கட்டுண்டு இன்றும் இரும்பையில் இருக்கு தவம் களைத்த வள்ளி சமாதியாய் தவறுசெய்த மக்கள் விளைச்சலில்லா நிலத்தில் சிவதாண்டவத் தில்காலைத் தூக்கி ஆடியதால் சிவனைப் பிரிந்து சென்றாள் பார்வதி வள்ளி காலைத் தூக்கி ஆடியதாள் சித்தர் மகிமை உணர்த்தி மறைந்தார்.

Read More

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரர் வாதிட்டு எரித்தபோது வயதில்லை! தருமிக்கு பொற்கிழியும் நக்கீரருக்கு புகழும் தமிழ் புலமைக்கு அங்கு வயதில்லை! மாங்கனி கொடுத்து உணவிட்ட புனிதவதியை அம்மையே என்றழைத்த போது வயதில்லை !அறுபத்து மூன்றுநாயன் மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பாடலுக்கு வயதில்லை! கணபதியை வணங்கி கணநேரத்தில் முதுமை பெற்று தமிழுக்கு அர்ப்பணித்த ஔவைக்கு வயதில்லை! தானுண்டு வாழ்வதைவிட தமிழ் தழைக்க ஔவைக்கு நெல்லிக்கனி தந்தஅன்புக்கு வயதில்லை! காளியில் அருளால் காளிதாசர் ஆகி கவிதை பாடிய புலமைக்கு வயதில்லை! காலனை காலால் ஏட்டியுதைத்த பாரதி காலம் கடந்தும் வயதில்லா வளர்தமிழ்!காலம் காலமாய் கடந்த போதும் களமிறங்கிய புலமைக்கு வயதில்லாத போது தொன்மை மிகுந்த தமிழ் செம்மொழி வயதை தேடினேன் வயதில்லா வளர்தமிழ்.வளரும் தமிழ்! வாழும் தமிழ்! வயசுப் பிள்ளையாய் வளம்வரும் தமிழ்! வலிமை தனித்துவம் காட்டும் தமிழ் !வயதில்லா வளர்தமிழ் வாழ்க வாழ்கவே!

Read More

வட்டி கட்ட மாட்டேன் என்று வாள் எடுத்த கட்டபொம்மன் கொடியை கீழேபோட மாட்டேன் என்று கொடி காத்த திருப்பூர் குமரன். வீர சுதந்திரம் வேண்டி நின்றார்வீர உணர்வுகளைத் தூண்டி விட்டார்விடுதலை வேள்விக்கு கவிதை தூவிவிடுதலை கிளர்ச்சிக்கு பாசறை அமைத்தார். மணியாச்சி கொலை ஆஷ் துரை மாடசாமி அடைக்கலம் எலிக்குஞ்சு ஆறுமுகம் காக்கிச் சட்டைக்குள்ளும் கதர் சட்டை கதிர்வேலு அய்யாமுத்து நடேசன் என… காந்திய வழியில் கதர் இயக்க செயலாக்கம் வந்தே மாதரம் பாரததேவி மண்பொம்மை போராடி சேர்த்தார் உரியவரிடம் பாரதிதாசன் ஊருக்கு நல்லது செய்வோம் பாரதி.இப்படி சுதந்திர போராட்ட வீரர்கள் இதயத்தின் எழுச்சி காந்தி ஆறுமுகம் இந்திய உணர்வும் எழுச்சி விடியலும் இணைந்ததால் இன்று சுதந்திர இந்தியா.

Read More

பாஞ்சாலங் குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனை! பாஞ்சாலங் குறிச்சி பீரங்கிமேட்டு தூக்குகயிற்றை வீரவரலாறு ஆக்கிய அஞ்சா நெஞ்சனே! உன்பெயர் சொன்னால் சிறுவருக்கும் வீரம்வரும். சுதந்திர காற்றையே சுவாசித்து மாண்டதால்தான் அடிமைக் காற்று உன்மேல் படவேஇல்லை அடிமை சங்கிலி கட்டிய போது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டி… வெள்ளையன் வெளியேறப் போராட்டம் வெடித்தது செக்கிழுத்து சிறைப்பட்டு சிவந்தகாய புண்ணேற்று மண்டியிட மறுத்ததால் மாண்டவர் எத்தனை? மங்கா புகழ்பெற்றனர் சுதந்திர நாளில். நாட்டுப் பற்று ஏற்றோர் எல்லாம் நானிலம் போற்றும் தியாகிகள் அன்றோ! வீர பாண்டிய கட்ட பொம்மனே! வீரத்திற்கு தலை வணங்கிப் பணிக்கிறோம்.

Read More

விவசாய நிலத்தில் பெரிய கிணறு அதில் குதித்து நீச்சல் அடிப்பர் அவசியத்திற்கு ஏற்றம் பம்பு அமைத்து நீர்ப்பாய்ச்சி பயிர் செழிக்க வளர்ப்பர்கவசமாக இரும்பு மூடி போட்டு தரை மட்ட கிணறுகளும் உண்டு அவதூறு சொற்களுக்குப் பயந்து கவனமுடன் கடமை செய்த காலம் நற்காலம்.ஆழ்துளாய் கிணறு போட்டு நீரெடுக்க வீடு விவசாயம் நிலம் எல்லாம் ஆழ்துளைக் கிணறு பயன் பாட்டில் நீர் வராத நிலத்தில் வட்டமான புதைகுழி ஆழ்தல் சிறுவர் என்றால் வருத்தமே! மூடாமல் விடும் சிறு தவறால் மூழ்குதல் கவலையில் குடும்பமும் நாடும் வீட்டுத் தவறு நாட்டுத் தவறாகிறது.தம்கடமை தவறு வராமல் செய்தால் வீடும் நாடும்மகிழ வழி வகுக்கும் நம்தவறு சிறிது என்றாலும் வராது கவனம் சிதறாமல் செய்தல் வேண்டும் தம்தவரை தானே ஏற்றுக் கொண்டு தானும் வருந்தாது தன்பிறவி உணர்ந்து வம்பேதும் வருமுன் மூடி காத்து மழைநீர் சேமிப்பாய் மாற்றி அமைப்போம்.

Read More

வள்ளுவர் தந்த திருக்குறள் வாழ்க! வான் புகழ் கொண்டு வளர்க. வள்ளுவர் நெறி ஏற்று வாழ்க! பொது மறை நூலாக வளர்க. வள்ளுவர் குறள் அடி வாழ்க! குறுகிய சொல் அடி வளர்க. வள்ளுவர் மூன்று பால் வாழ்க! அறம் பொருள் இன்பம் வளர்க. கடுகு அணுவைத் துளைத்து வாழ்க! கடமை செய்தே வாழ்வில் வளர்க. குடும்பம் தழைக்க படித்து வாழ்க! கும்பிடும் பொது நூலாய் வளர்க. சேடு உடன் இளமையாய் வாழ்க! செதுக்கிய சிற்பமாய் என்றும் வளர்க. நெடு நீர் போல் வாழ்க! நெம்பு கோல் போல் வளர்க. உலகப் பொது மறையாய் வாழ்க! உலகக் கருத்தை கொண்டே வளர்க. கலச குடமாய் நிறைந்து வாழ்க! கலகம் செய்பவர் திருந்த வளர்க. நிலம் தாண்டி சிறக்க வாழ்க! என் நிலையிலும் சமரசமாய் வளர்க. பலப் படுத்தும் திருக்குறள் வாழ்க! பயம் இன்றி உயர வளர்க. பக்குவப் படுத்தும் திருக்குறள் வாழ்க!…

Read More

மண்ணில் உதிரும் சருகுகள் எல்லாம் மக்கி உரமாகி வீரியத்தை கொடுக்கும் மண்ணில் உறிஞ்சி எடுத்த நீரெல்லாம் மீண்டும் மழையாய் பலன் கொடுக்கும் மண்ணில் சிந்திய இரத்தம் எல்லாம் நெஞ்சு உரமாய் எழுச்சி கொடுக்கும் மண்ணில் விதைத்த விதை எல்லாம் முளைத்து நல் விருட்சம்ஆவதுபோல்….விதைத்தது மனித இரத்தமும் சதையும் சகோதர உணர்வம் தாய் பாசமும் புதைந்தது இலங்கை தமிழன் என்றாலும் எழுவது அவனதுஉணர்வின் சக்திசிதைத்தது தமிழர் இனம் என்றாலும் முளைத்தது உலக நாட்டு மண்ணில் வதைத்தது வெறித்தனம் என்று உணர தரும தேவதை வழி வகுப்பாள். புத்த தர்மம் உயிர்களைக் கொல்லாமை தமிழின உயிர்களைக் கொன்று குவித்து பித்து பிடிக்க வைப்பது தர்மமா? அன்பால் அகிலம் காப்பதே ஞானம் சித்திரவதை தான் மனித நேயமா? சிந்திக்கும் தருணம் வந்து விட்டது புத்துயிர் பெற்று தமிழ் இனம் புதைந்த குழியில் இருந்தே எழுவான்.

Read More