இருபத்தொன்றாம் திங்களில் நிகழ்வது குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதலைத் தெரிவிக்கும் பருவம்
1-விருப்பு வெறுப்பற்று இறை சிந்தனையுடன்
கடமை செய்ய காரியம் கைக்கூடும்
நெருக்கம் அதிகரிக்க இறை அன்பால்
நண்பனாய் பேசி அருகில் வருவான்
மருவலர் இல்லா வாழ்வு பெற்று
வளமை காணும் நற் சிந்தனையுடன்
வருவான் வருவான் மணிகண்டன் சின்னஞ் சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
2-சாந்தி தியானத்தின் ஒரு நிலை
சந்தனம் போல் மணம் இருந்தால்
காந்தி கண்ட சாந்தம் கிடைக்கும்
காமாரி காமுகன் கலந்த குழந்தை
மாந்தளிர் போன்று நன்மை செய்வான்
மாயன் கீதை உபதேசம் போல்
சாந்தம் கிடைக்க சரண் அடைந்தோம்
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
3-சக்கர சுழற்சி வாழ்க்கை முறை
நெறியுடன் வாழ ஆனந்தம் கிட்டும்
அக்கறை கொண்ட வாழ்வே நிலைக்கும்
அக்கன் அருள் கூட வளமாகும்
உக்கிரம் கொண்டு கோபம் கொண்டால்
உதவாமல் போகும் இல்லற வாழ்வு
முக்கியம் தெரிந்து தெளிந்து நடக்க
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
4-நெருப்பு இருந்தால் அடுப்பு எரியும்
விளக்குப் போல் பணிவாய் அணுக
கருத்து வேறுபாடு எங்கும் இருக்கும்
குற்றம் களைந்து அன்னமாய் இருக்க
பருந்து போல் பறந்து போனாலும்
பக்குவம் தரும் சரண கோசம்
நெருங்கி வருகிறோம் மணிகண்டா வந்து
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
5-தரிசனம் இறையானால் ஆனந்தம் கிட்டும்
தரம் கூடும் தரிசுகூட விளையும்
கரிசனம் கிட்டும் கரித்தநீர் இனிக்கும்
கடவுள் அருள் கைகூட கிடைத்தால்
சரியை நெறி உலகில் உயர்த்தும்
சர்ப்பம் கூட நட்பாய் மலரும் நெரிதல் பணிதலுடன் வருகிறோம் மணிகண்டா
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
6-வித்தை செய்யும் மாயன் கண்ணன்
பாத விந்த மலர் பணிந்தால் சித்தி பெற்று சிகரம் தொடலாம்
பக்தி கொண்டு பாதாளம் போகலாம்
பத்திமை கொண்டு படியேறி வந்து
காலைப் பற்றி சரணம் பாட
முத்திபெற்று முழுப்பயன் அடைய மணிகண்டா
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
7-உறுதி உள்ள மனிதன் தீர்மானம்
நம்பிக்கை ஆராய்ச்சி கட்டுப்பாட்டில் இருக்கும்
உறுப்பு அடக்கி செயல் புரிவான்
உறுதி கொண்டு வெற்றி கொள்வான்
அறுப்பு விளைவு அதிகம் ஆகும்
அறிவு ஞானம் போதனை பெற்று
மறுமை இல்லா வாழ்வு கிட்ட
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
8-கற்பக மரமே கால சுழற்சியே
கயவனுக்கு கூட கருணை செய்வாயே
சொற்பதம் குறைய காரியம் சிறக்கமே
சோகம் துக்கம் தூரப் போக்குமே
நற்பதம் கூடும் நல்லருள் கிட்டும்
நாளும் சிறக்கும் நலன்
பலகூடும்
பொற்பாதம் பற்ற புண்ணியம் செய்தோம்
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
9-சித்தர் சிறப்பு பெற்ற பக்தன்
சிந்தையை கடவுளுக்கு கொடுத்த புண்ணியன் பித்தனாகி உடல் பொருள்ஆவி அனைத்தும்
ஆண்டவனுக்கு சமர்ப்பணம் செய்த பக்தர்
மத்தம் தெளியா மயக்கம் கொண்டவன்
மரணம் இல்லாத வாழ்வு பெற்றவன்
உத்தமனின் உந்தல் உலக வளர்ச்சிக்கு
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்
10-பூமியின் இயக்கம் சூரிய சந்திர
ஒளிக் கதிர் மாறி வருவது சாமியின் அருள் இன்ப துன்ப
இரட்டை சூழலில் மாறி வருவது
காமினி மந்திரம் காயத்ரி ஆனால்
கால பயம் மறைந்து போகும்
சாமியே சரணம் என்று பணிந்தோம்
சிறுகையில் சிறுதேர் இழுத்து வாரீர்.