மார்கழி மாதம் ஆறாம் நாள் பிரம்மா வகுப்பிலே வர்ணமில்லை கலப்பில்லை பிரம்மா வாக்குத்தந்து வரம் தருபவனே பிரம்மா பகுத்தறிந்து பக்குவமாய் படைப்பவனே பிரம்மா பல்லாண்டு வாழ வாழ்த்துவாய் பிரம்மா தகுதிதந்து தடைகள் நீங்கி உயர தவம் செய்து வணங்குகிறோம் பிரம்மா வகுத்து வடிவமைத்து படைப்பவனே பிரம்மா வஞ்சமில்லா குழந்தைகள் வணங்குகிறோம் அருள்வாய் விஷ்ணு மாடு மேய்க்கும் ஆயர்பாடி கண்ணா மாட்டுப் பாலைக் குடித்தவனே கண்ணா வாடும் மக்கள் குறை கேட்பாய் வறுமை போக வழியும் சொல்வாய் காடு மலை தேடி அலைந்து தெய்வம் உன்னைக் காணாது வருந்திப் பாடும் குரல் கேட்டு வருவாய் பக்கத் துணையாய் இருக்க வருவாய் சிவன் உடம்பில் விபூதிபூசி கழுத்தில் மண்டை ஓடும் உடம்பைச் சுற்றி பாம்பும் படமெடுக்க இடப்புறத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து இடிபடாமல் வலப்புறத்தின் தலையில் கங்கைதாங்கி அடங்கல் முறை ஓத கேட்பவனே அடியவர்க்கு அருளும் சோதி வடிவே மடத்தில் தங்கும் முனிவர்க்கு அருள்பவனே…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
மார்கழி மாதம் ஐந்தாம் நாள் பிரம்மாசாதியில்லை மதமில்லை படைப்புத் தாயே சஞ்சனே உயர்வு தாழ்வில்லை படைப்பில் நிதித்யா சனத்தில் இருக்கும் பிரம்மாவே நித்திய சேவை செய்கிறோம் பணிந்து பாதிக்கும் குறைபாடு இல்லாமை தருவாய் பக்குவப் படுத்தி நிறைவாய் படைப்பாய் போதிக்கும் நான்முகனே நல்லறிவு தருவாய் பேதங்கள் பார்க்காமல் நல்லாசி தருவாய் விஷ்ணு மதுசூதனே மங்கையர் விரும்பும் கண்ணா மாயசெயல் செய்து மடியவைத்தாய் அசுரரை சூதுசெய்து பாண்டவரை ஏமாற்றிய போது சுனங்காமல் பாஞ்சாலிக்கு உதவிய கிருஷ்ணா பதுங்கும் கல்லாகி பாழ்பட்ட அகலிகை பாதம்பட்டு உயிர்பெறச் செய்த ராமா பிதுங்கும் கண்ணுடைய அரக்கியைக் கொன்று காத்தவனே கண்ணா எங்களையும் காப்பாற்று சிவன் பனிகள் சூழ்ந்து லிங்கமாக இருப்பவனே பனிலிங்கா கைலை நாதா சர்வேசா தனியாத ஆசையுடன் குளிர்தாங்கி வருகிறோம் தனிமையில் இருப்பவனே சிவனே சங்கரா கனி தருகிறோம் கற்கண்டாய் இனிப்பவனே கணிவு கொண்டவனே கருணை உள்ளவனே முனிவர்க்கு அருளும் சதாசிவா கயிலைநாதா முக்தி தருபவனே…
மார்கழி மாதம் நான்காம் நாள் பிரம்மா வான்கண் வருகைக்கு முன் எழுந்து வானவர் வணங்கும் பிரம்ம முகூர்த்தத்தில் கொன் பொழுதில் காலை கடன்முடித்து குளிர்ந்த நீரில்நீராடி தலை வாரி நான்கு வேத நான்முகனை நினைத்து நாண்மலர் பறித்து தொடுத்து சூட்டுகிறோம் மான்மகனே வேதப் பொருளைச் சொல்கிறோம் மக்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் விஷ்ணு ஆதிசேஷன் மேல் நர்த்தனமாடும் கண்ணா அயர்ந்து தூங்கும் பள்ளியறையும் அதுதானே ஊதியம் கருதி உயர்ந்து உலகளந்தவனே உனக்குள் உலகை அடக்கிக் கொண்டாயே ஓதிய மரம் ராமஜெயம் ஆனது ஒதுங்குகிறோம் உன் தாழ் பணிந்து கதியென சரண் புகுந்த பின்பு காக்க வல்லவர் நீதானே கண்ணா! சிவன் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனே புகழுக்கு ஆசை கொண்டவரை விரட்டியவனே சிட்டுக் குருவிபோல் துருதுருவென இயங்கி சிக்கித் தவித்த மக்களைக் காத்தவனே கட்டு விறகு சுமந்து களைத்து கவி பாடி தமிழிசை காத்தவனே தட்டுத் தடுமாறும் மக்கள் குறைபோக்கும்…
மார்கழி மாதம் மூன்றாம் நாள் பிரம்மா கறை கடமை செய்யும் சிற்பி பக்தியுடன் சிற்றுளி கொண்டு செதுக்க இறைவனே குருவே திருவடி வணங்கி இதயத்தை ஒரு நிலைப் படுத்தி கவனம் சிறைப்பட்டு சிலையை வடிக்கும் சிற்பியாய் சிதராத எண்ணம் கொண்டு தியானித்து மறைமொழி ஓதி மனதில் வேண்டுகிறோம் வேத நாயகனே பிரம்மாவே அருள்வாய் விஷ்ணு அசுரரை அழிப்பதற்கே கண்ணனாய் பிறந்தவனே அஞ்சாத சிறுபிள்ளை ஆயன் மாயன் பசுக்கூட்டம் மத்தியிலே தலைவனாய் இருப்பவனே பச்சைப் பால்பிரியன் புல்லாங்குழல் இசைப்பிரியன் சிசுவாக இருந்தாலும் சிறந்த பிள்ளை சிரமம் இல்லாமல் வெண்ணையுண்ணும் பிள்ளை வீசும் காற்றில் கடல்அலை தாலாட்ட வீற்றிருக்கும் எம்பெருமானே காப்பவனை வணங்குகிறோம் சிவன் சடைமுடி தரித்த சங்கரன் இருந்தாலும் சக்தியுடன் இணைந்த அண்ணாமலை ஈசனே படை சூழயிருக்கும் பூதத் தலைவனே பவனே பெண்மைக்கு சரிபாதி உடல்தந்தவனே கடைந்த போதுவந்த நஞ்சை உண்டவனே கடுகளவும் மக்களுக்கு தீங்கு வராமல் தடை செய்த ஈசனே சர்வேசனே…
மார்கழி மாதம் இரண்டாம் நாள் பிரம்மா நான்கு வேத நாயகனே நான்முகனே நல்லாசி தருவாய் நலம் கூட சான்றோர் கற்ற கல்வியின் நாயகனே சத்திய லோகத்தில் தியானத்தின் பிறப்பிடமே கான் தவம் கடுமையாக இருந்தால் காட்சி தந்து வரம் கொடுப்பவரே பான்மை பண்புடன் படைப்பை ஏற்று பயனறிந்து வணங்குகிறோம் வாழ்த்தி அருள்வாய் விஷ்ணு காலை எழுந்து நீராடி வணங்குகிறோம் கதிரவன் வருமுன் கோலமிட்டு வணங்குகிறோம் மாலை தொடுத்துப் பூச்சூடி வணங்குகிறோம் மனம் நிறைந்த கண்ணனை வணங்குகிறோம் சோலை மலரை அர்ச்சித்து வணங்குகிறோம் சோதனை வந்தாலும் தாங்கியே வணங்குகிறோம் பாலை கடைந்து வெண்ணைதந்து வணங்குகிறோம் பாலும் மோரும் குடிக்க தந்து வணங்குகிறோம் சிவன் தில்லைக் கூத்தனை சிதம்பரத்தில் பார்க்க திரிசூல நாயகன் நடனத்தைக் காண முல்லைப் பூத்தொடுத்து முக்கண்ணனை காண மூன்றாம் பிறைசூடிய நர்த்தகனை காண அல்லை நாதன் ஆதரவைப் பெற ஆதவன் உதிக்கும் முன்பே காண எல்லை இல்லா சோதியைக் காண…
மும்மூர்த்தி பாடல்கள் மார்கழி மாதம் முதல் நாள் பிரம்மாதாமரை மலரிலே அமர்ந்த நான்முகனே தளராத மனதுடன் நுணுக்கமாய் படைப்பவனே வாமம் படைப்பை அழகாக படைக்க விஷ்ணுவின் உந்தி கொடி உறவே காமாரி வளர்த்து தொழில் செய்ய கைவேலை ஐந்து படைத்த பிரம்மாவே பாமாலை சூட்டுகிறேன் படைத்த பிரம்மாவிற்கு பக்தி கொண்டு பாடுகிறேன் அருள்வாய். விஷ்ணு மாதவனே! கேசவனே! மனதார வணங்குகிறேன் மார்கழி மாதத்தில் மெய்மறந்து வணங்குகிறேன் மாதவாப் பயனாலே பரமனை வணங்குகிறேன் பாற்கடலில் பள்ளி கொண்டவனை வணங்குகிறேன் சாதகம் செய்து பாடியே வணங்குகிறேன் சாந்தி பெறவே சதா வணங்குகிறேன்சாதனமாய்பயன்படுத்தும் கேசவனை வணங்குகிறேன் சதா நினைத்து பெருமானே வணங்குகிறேன். சிவன் கைலாய நாதனே காளையில் அமர்பவனை காலையில் நீராடி சேவடி பணிகிறோம் நைத்தல் சாம்பல் பூசும் சங்கரா நெற்றியிலே திருநீர் பூசி வருகிறோம் மைவிழியாள் சிவகாமி பக்கத்தில் தானிருக்க மூடுபனி நேரத்தில் பக்தியுடன் வருகிறோம் பைமை தவப்பயனே பார்வதி வருகையாள் பூலோகத் திருமணம்…
சின்னஞ் சிறுமியாய் இருக்கும் போது சிறுவன் தோழன் நீ உன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்தேனா எண்ணிப் பார்க்கிறேன் இல்லை?இன்முகம் கொண்டு சிரிக்கும் சிரிப்பில் தோழமைக் கொண்டு விட்டேன் இன்னடி வந்தால் உன்னிடம் சொல்ல ஆறுதல் சொன்னவன் நீ! காலையில் கண் விழித்துப் பார்க்கையில் கண் எதிரில் உன்முகம் மாலையில் வணங்கி தூங்கும் போது பார்க்க சுவரில் உன்முகம் சாலையில் போகும் போது கோயிலைக் கண்டால் மனதில் உன்முகம் சோலையில் மலர் பூக்களைக் கண்டால் சூடிப் பார்க்கும் என்மனம். தேடித் தேடிப் போனேன் முருகா தோழன் உன்னைக் காண ஓடி ஓடி பார்த்தேன் முருகா காவடி பால் குடம் ஆடி ஆடி வந்த பக்தர் பக்தியை என்ன என்பேன் நாடி நாடி நல்லது செய்யும் நல்லவன் தாழ் பணிந்தேன். பருவ வயதை அடைந்த போதும் பக்கத் துணை நீதானே கரு சுமந்த பெண்ணான போதும் காத்து நின்றவன் நீதானே குருத்து போல கருத்தை…
சாவி கொடுத்த பொம்மை கைதட்டி ஆடும் போது தாவி வந்த சிறுவன் தன்கையில் எடுத்து மகிழ்வான் தேவி அருளால் முருகன் வேல் பிடித்த கைகள் புவி காத்து மக்கள் குறை போக்கி மகிழ்வான். மண்ணில் ஓடி விளையாடி ஒளிந்து மறைந்து பிடிப்பாய் விண்ணில் போர் செய்து விட்டுக் கொடுத்து பிடிப்பாய் கண்ணில் கண்ட பொருளைக் கேட்டு வாங்கும் வயதில் எண்ணத்தில் உயர்ந்து தனித்து நின்று அருளும் முருகா! உன் விளையாட்டு எல்லாம் திரு விளையாடல் தானே தன் தந்தைக்கு தப்பாத திரு மகன் தான் சின் மயமான முருகா சிந்தனையில் என்றும் நிற்பாய் நின் அருளைக் கொஞ்சம் விளையாட்டாகத் தருவாய் முருகா.
என்ன வேண்டும் முருகா! எனக்கு என்ன வேண்டும்? கன்னச் சிரிப்பில் கண்ட போது என்ன வேண்டும்? சின்னகையில் வேல்பிடித்து சிங்கார நடை நடந்து தின்மை அழிக்க வரும் போது என்ன வேண்டும்? வண்ண மயில் ஏறிவந்து வடிவழகை காட்டி நின்று திண்ணமாக நிற்கும் போது எனக்கு என்ன வேண்டும்? உண்ணும் உணவு தந்து உடுத்த உடையும் தந்து எண்ணும் நினைவில் எல்லாம் நல்ல எண்ணம் தந்து கொள்கை பிடிப்பு தந்து கொண்டவர் துணையும் தந்து துள்ளும் மழலை தந்து துடிப்பான பேச்சு தந்து கள்ளம் இல்லா மனம்தந்து கல்வி அறிவு தந்து உள்ளம் நிறையவைத்தபின் எனக்கு என்ன வேண்டும்? பக்தி நிறைந்த மருமகள் பக்கத்தில் மகளாய் இருக்க சக்தி தந்து எனக்கு சமூகப் பணிகள் செய்ய முக்தி கிடைக்கும் வரை மூச்சினில் உன்பெயர் சொல்ல பக்தி கொண்ட பின் எனக்கு என்ன வேண்டும்? குலக் கொடி தந்து குதூகல வாழ்வு தந்து…
5-ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்தந்தை குமாரசாமி தேசிகர் தவப்பயன் தலையில் மட்டும் அறிவில்லாமல் உடல் முழுவதும் அறிவும் தெய்வீகமும் பின்னிப்பிணைந்தவர் வெள்ளியம்பல சுவாமிகளை குருவாய் ஏற்றவர் குருவை இகழ்ந்த புலவரிடம் போட்டியிட்டு “யானைக்கண்” எனத்தொடங்கி”கன்றனேஞ்சே”எனமுடித்து முப்பதுபாடல் பாடி மமகாரம் அடைக்கினார் முருங்கை மரத்தில்முட்டிய தேரச்சு முறியச்செய்தார். மாங்கனிக்காக மடிபிடித்தவன் வீழ்ந்து மடிந்தான் வில்லியனூரில்சிவதரிசனம் கண்டு நுணாமர அடியில் தவம்செய்து முப்பத்தி இரண்டுவயதில் முப்பத்தி இரண்டு நூல்கள் தந்து சமாதியானார்.