எனக்கு பணம் கிடைத்திருந்தால் பணக்காரனாக
மாறி இருப்பேன்.
குரல் வளம் இருந்திருந்தால் பாடகன் ஆகி இருப்பேன்.
வாய்ப்பு கிடைத்திருந்தால் நடிகன் ஆகியிருப்பேன்.
ஓட்டு கிடைத்திருந்தால்
மந்திரி ஆகியிருப்பேன்.
நண்பர்கள் கிடைத்திருந்தால் நன்றாகச் சுற்றி இருப்பேன்.
விமானம் கிடைத்திருந்தால் விண்வெளிக்குப் போயிருப்பேன்
காதலி கிடைத்திருந்தால் வாழ்வை தொலைத்திருப்பேன்
உளி கிடைத்து இருந்தால் சிற்பி ஆகியிருப்பேன்.
தனிமை கிடைத்ததனால்
நான் கவிஞன்
ஆகியிருக்கிறேன்.