பறவைகள் கவிதை எழுதினால் தான் சுதந்திரத்தைப் பற்றி
சரியாக எழுத முடியும்.

மரங்கள் கவிதை எழுதினால் தான் பொறுமையைப் பற்றி சரியாக எழுத முடியும்.

மலர்கள் கவிதை எழுதினால் தான் உறுதியைப் பற்றி
சரியாக எழுத முடியும்.

வானம் கவிதை எழுதினால்தான்
பூமியைப் பற்றி சரியாக
எழுத முடியும்.

மேகம் கவிதை
எழுதினால் தான்
ஓவியத்தைப் பற்றி
சரியாக எழுத முடியும்.

மழை கவிதை எழுதினால்தான் தாகத்தை பற்றி சரியாக
எழுத முடியும்.

கடல் கவிதை எழுதினால்தான் ஆழத்தைப் பற்றி சரியாக
எழுத முடியும்.

மலை கவிதை
எழுதினால் தான்
உயரத்தைப் பற்றி சரியாக எழுத முடியும்.

எறும்பு கவிதை
எழுதினால் தான்
சுறுசுறுப்பை பற்றி சரியாக எழுத முடியும்.

நெருப்பு கவிதை
எழுதினால் தான்
வலிமையை பற்றி சரியாக எழுத முடியும்.

காற்று கவிதை
எழுதினால் தான்
சுவாசத்தைப் பற்றி சரியாக எழுத முடியும்.

இவர்கள் மொத்தமாய் படைத்த கவிதையின் தொகுப்பு தான் இயற்கை.

இந்தத் தொகுப்பை
புரட்டிப் பார்க்கிற
ஒவ்வொரு வரும்
கவிஞன் ஆகிறான்.

Share.

Leave A Reply