நான்!
செதுக்கப் பட்டுக்
கொண்டு இருக்கும்
சிலை!
என்னில்
உளி படுவதும்
வலி படுவதும்
பெரிதல்ல!
என்னில் இருந்து
உடைந்து சிதறுகிற
எதுவும் எனக்குத் தேவைஇல்லாதவையே!
என்னை கடவுளாக மாற்றத்தான்
இந்தக்
கல்லை கடவுளாக
மாற்றிக் கொண்டு
இருக்கிறது
இந்த உளியும்
வலியும் .
நான் கடவுளாக
மாறிக் கொண்டு
இருக்கும் கல்
என் மீது படுகிற
ஆயுதம் கூட
என்னை அழிக்க
அல்ல !
எனக்கு ஏற்படுகிற
காயங்கள் கூட
என்னை வருத்தப்
படுத்த அல்ல!
என்னை
உயர்த்தி விட
யாருக்கும்
திறன் இல்லை!
என் தூரம்
எத்தனை? என்
உயரம் அத்தனை!
என்னால்
மட்டும் தான்
முடியும் என்று…
எனக்குத்
தெரிந்ததால் தான்
நான்!
ஓடிக்கொண்டு இருக்கிறேன் என் இலக்கை அடையும் வரை.