சிகரத்தை அடைவது தான் எந்தன் சிந்தனையும் இலட்சியமும்
உயரத்தில் உச்சியினை நான் அடைய எவ்வளவு தூரம் உழைக்க வேண்டியிருக்கிறது?

நான் மேகமாக பிறந்து இருக்கக் கூடாதா ?
சிகரத்தின் உச்சியினை தொட்டுத் தொட்டு சென்றிருப்பேன்.

நான் மழையாக மாறி இருக்கக் கூடாதா சிகரத்தின் உச்சியில் பட்டுப் பட்டு விழுந்திருப்பேன்.

நான் காற்றாய் பிறந்து இருக்கக் கூடாதா?
சிகரத்தின் உச்சியில்
முட்டி …முட்டி
சென்றிருப்பேன்.

நான் கழுகாகப் பிறந்து
இருக்கக் கூடாதா?
சிகரத்தில் உச்சியினை
வட்டம் இட்டு பறந்து இருப்பேன்.

நான் வெயிலாகப் பிறந்திருக்கக் கூடாதா? சிகரத்தின் உச்சியில்
பளிச் சென்று
படித்திருப்பேன்.

நான் பனியாகப்
பிறந்திருக்கக் கூடாதா? சிகரத்தின் மேலே
சிகரமாய் வீற்றி
இருப்பேன்.

நான்!
மனிதனாய் பிறந்ததால் சிகரத்தை அடைய முயன்று கொண்டு இருக்கிறேன்.

Share.

Leave A Reply