Author: கவிமணி பாலா கிருஷ்ணன்

எதை எதிர்பார்த்தும் யாரும் வாழ்வதில்லை யாரிடம் போய் கேட்டாலும் எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய ஆசை இல்லை அவரவர் தகுதிக்கேற்ப சிறிது சிறிதாய் ஆசைகள் வைத்திருக்கிறார்கள்தவழ்ந்து செல்பவன் நடக்க வேண்டும் என நடந்து செல்பவன் விரைந்து போக விரைந்து செல்பவன் மிதந்து போக மிதந்து செல்பவன் பறந்து போக என அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆசைகள்.மற்றபடி யாரும் எதுவும்எதிர் பார்ப்பது இல்லை இவர்கள் கனவு காண கூட தகுதி வைத்திருக்கிறார்கள் மீறிக் கண்டால் உன் தகுதிக்கு இது தேவையா! எனக் குட்டிக் கொள்வார்கள் முதல் படிகளில் இருந்து இரண்டாம் படிக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இவர்கள் கனவு. இரண்டாம் படிக்குச் சென்ற பிறகு தான் மூன்றாம் படியைப் பற்றி சிந்திப்பார்கள் உச்சியை அடைய வேண்டும் என்ற பேராசையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. அடுத்த வீட்டுக்காரனை ஆச்சரியப்பட வைப்பது தான் இவர்கள் லட்சியம் இவர்கள் வாழ்க்கை சுழற்சி அட்டவணை இல்லாமல் அழகாய் வட்டமிடும். பொதுவாய்…

Read More

எல்லாம் மாறும் ஏற்றம் வரும் எதையும் எண்ணி நின்று விடாதே !உருவம் மாறும் உணர்வு மாறும் உச்சி சென்று லட்சியம் வெல்ல! முயற்சி செய்து முன்னேறி வா! பாதை மாறும் பருவம் மாறும். யாரும் வந்து எதனை தடுத்தாலும் நீ போக வேண்டிய பாதைக்கு… நீ சென்றே தான் தீர வேண்டும். எதைப் பற்றிய பயமும் இன்றி வெற்றியடைய விரைந்து வா!

Read More

எந்தச் சிதைவும் இன்றி யாரும் பிறப்பதில்லை சிதைவுகளைச் சேதமாக மட்டும் பாராதே நீ பாறையாகவே இருந்தால் சிதைவுகள் சேதம் தான் நீ எப்போது சிலை என்பதை உணர்கிறாயோ அப்போது தான் புரியும்…செதுக்கப் படுவதன்தத்துவம்.

Read More

விஷப் பாம்புகளும் வெறி நாய்களும் காட்டு விலங்குகளும் பூச்சிகளும் ஒவ்வொரு மிருகக்காட்சி சாலையிலும் தினமும் வருபவர்களைப் பார்த்து பார்த்து வியப்பு அடைந்து கொண்டே இருக்கிறது இந்த நாட்டில் நம்மை மட்டும் ஏன் கூண்டில் அடைத்து இருக்கிறார்கள்? என்று….

Read More

உடல் உறுதியோடு மன வலிமையோடு இயற்கை வளங்களோடு மகிழ்ச்சியோடு சிறந்த பண்பாட்டோடு சீர்குலையாத சமுதாயத்தோடு சுவையான உணர்வோடு சுத்தமான காற்றோடு சுகாதாரமான நிம்மதியோடு வருங்கால அறிவியலைப் பற்றி சமுதாய வளர்ச்சி பற்றி எண்ணி எண்ணி கனவு கண்டீர்களே…இன்று உங்கள் கனவுகள் எல்லாம் நினைவாகி விட்டது.இந்த நிஜத்திற்குள் நிம்மதி இன்றி உங்களை போல வாழ முடியாதே..என கனவு கண்டு கொண்டு இருக்கிறோம் நாங்கள்.

Read More

அவசியம் என்று எனக்கு எப்போதும் தோன்றியது இல்லை அலைகளுக்கு அது எப்போதும் தேவை இல்லை துவக்கத்தின் புள்ளி முதல் வெற்றியின் எல்லை வரை நில்லாது செல்லும் இந்த பயணத்தின் தடை வரலாம் நடக்கின்ற பயணத்தில்வரும் தடைகள் பெரிதல்ல வெற்றி அடையும் முன் மனதில் தடை உனக்கு வருவது ஏனோ! நேற்று நீர் தோற்றிருந்தால் நாளை வெற்றிடலாம் நாளை பசி எடுத்தால் மீண்டும் உண்றிடலாம்! நம்பிக்கை தடை பட்டால் எப்படி வென்றிடுவாய்? ஊரெல்லாம் அலை அலையாய் வேகத்தடை இருக்கும் உன்னை நிறுத்தி உயிர் காக்க தடை தாண்டி வெல்லும் உன் எண்ணம் இருக்கும் வரை எதுவும் பயம் இல்லை வாழ்க்கை என்னும் பயணத்தில் உனக்கு நீயே தடை செய்து உன் வேகத்தை குறைத்திடாதே!

Read More

தெளிவாய் பார் விளக்கமாய் கேள் மெதுவாய் யோசி சரியாய் முடிவெடு உறுதியாய் வெளியிடு செய்வதை யோசி செய்யும் போது நேசி செய்ததும் மறந்திடு உன்னைச் சுற்றி வட்டம் இடு அதில் யாரும் நுழையாதிருக்க அதன் விட்டத்தைமறைத்துவை அப்போது தான் நீ எப்போதும் நீயாக இருப்பாய் உன்னை நீயே பயிற்சி செய் உன்னை நீயே பிழை திருத்து உன்னை நீயே செதுக்கு உன்னை நீயே வண்ணம் தீட்டு உன்னை நீயே படித்து முடி உன்னை நீயே கோடிட்டு நிரப்பு உன்னை நீயே பரீட்சை செய் உன்னை நீயே உருமாற்று உன்னை நீயே உலகத்திற்கு அறிமுகம் செய் உன்னை நீயே உயர்த்திக் கொள்.

Read More

எப்போதும் வாழ்க்கை ஒன்று போல் இருப்பதில்லை எப்போதும் வாழ்க்கை ஒரே பக்கம் சுற்றுவதில்லை எல்லா நாளும் வானம் பௌர்ணமியாய் இருப்பதில்லை எப்போதும் நிலா முழுமையாய் இருந்தாலும் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் ஆனா பயணம் என்றும் முடிவதில்லை.நாம் என்றும் முழுமையடைவது இல்லை என்றாலும் எப்போதும் பௌர்ணமியாகவே நின்றுவிட ஆசைப்படுகிறோம்.நிலா வளரும் நாட்களிலும் தேயும் நாட்களிலும் மாற்றம் இல்லை ஆனால்,எப்போதும் நாம் அப்படி இருப்பது இல்லை வளர்பிறை நாள் கூட நமக்குத் தேவைஇல்லை பௌர்ணமியாய் மின்னுவது மட்டும்தான் நமது எண்ணம் வளர்பிறை நாட்களில் வாழ்ந்து வந்தவனுக்குத் தேய்பிறை நாட்களின் தேவை இருக்காது வளர்பிறை நாட்களில் வாழ்வைத் தொலைத்து விட்டு தேய்பிறை நாட்களில் தேடி அலைவது வீண் வளர்பிறை நாட்களின் சுகம் அறியாதவன் தேய்பிறை நாட்களின் வலி அறிய வேண்டும் வளர்பிறை நாட்களை ரசித்து அறியாதவன் தேய்பிறை நாட்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் வளர்பிறை நாட்களைப் பயன் படுத்தாதவன் தேய்பிறை நாட்களில் ஓய்வு எடுக்கக்கூட முடியாது. வளர்பிறை…

Read More

எப்படி பிறப்பெடுக்கும் என்று எவருக்கும் தெரியாது எப்படியும் உருவெடுக்கும் எல்லை கிடையாது.விதை என்று எதுவும் தேவை இல்லை உணவென்று எதுவும் பேதம் இல்லை உருவெடுத்துக் கொண்டே இருக்கும் .உயரம் காண முடியாதபடி எங்கோ பார்த்த ஏதோ ஒரு பார்வையில் யாரோ சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் எப்போதோ பிறந்திருக்கும் அது எதைப் பற்றியும் கவலைப் படாமல் எப்படியோ வளர்ந்திருக்கும் ஒவ்வொரு நாளும் உருமாறும் ஒவ்வொரு முறையும் நிறம் மாறும் இதுதான் எல்லை என்று கோடிட்டு சுவர் எழுப்பும். அங்கு போய் நின்றாலோ முடியாமல் அது நிலைக்கும் அழகாய் வலை விரிக்கும் இதுதான் பெரிதென்று இழுத்துப் போகும் அதைவிடப் பெரிதென்றை எடுத்துக் காட்டும் இருக்கும் பிரச்சனைக்கு எல்லாம் அதுவே வித்திடும். எதிலும் சிக்காமல் அழகாய் தப்பிடும் அழியாமல் ஆட்சி செய்யும் அணு அணுவாய் ஆட்டிப் படைக்கும் உனக்குள் இருக்கும் ஆசைத் தீ !ஆசைத் தீ அதனின் நீயும் எரிந்து விடாது உன்னைப் பாதுகாத்துக்…

Read More

வெற்றி அடைய வேண்டும் அதை எப்படி அடைவது என்று யாருக்குத்தான் தெரியும் ஒருவனிடம் போய் கேட்டேன் இப்படி செல்ல வேண்டும் என்றான் ஒருவன். அப்படி மட்டும் செல்லாதே என்றான் இன்னொருவன். எப்படியாவது சொல் என்றான் மற்றொருவன்.இப்படித்தான் செல்ல வேண்டும் என்றான் இன்னொருவன்.எப்படித்தான் செல்வது…! வெற்றியை அடைய என்ன தகுதியோடு செல்ல வேண்டும் இயற்கை நீதி ஒன்றை மட்டும் தெளிவாய் சொன்னது. ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் என்று அது என்ன தகுதி உலகில் வெற்றி பெற்ற அனைவரும் ஒரு பக்கம் தோல்வி அடைந்த அனைவரும் ஒரு பக்கம் தராசில் வைத்து நிறுத்துப் பார்ப்போம் பணக்காரனும் தோற்றிருக்கிறான் ஏழையும் வென்றிருக்கிறான்பணம் தடை இல்லை. படித்தவனும் தோற்று இருக்கிறான் பாமரனும் வென்றிருக்கிறான்படிப்பு தடை இல்லை.வீரனும் தோற்று இருக்கிறான் கோழையும் வென்றிருக்கிறான் பலம் தடையில்லை. புத்திசாலையும் தோற்று இருக்கிறான்முட்டாளும் வென்று இருக்கிறான் அறிவு தடை இல்லை. ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான் ஊனம் உடையோனும்…

Read More