அணை தாண்டும் நீர் போல அலைபாயும் எந்தன் மனம் உனை நாடி வர வேண்டும்
வழி காட்டி அழைத்துச் செல்
திசை மாறி பறந்து செல்லும் பறவையாய் நான் இருக்க
உன் மணியோசை கேட்டு உடன் வந்தேன் உன்னருகில் பொய் ஒன்றை எண்ணி எண்ணி பொய்த்து நான் போகிடாமல் மெய்யான உனை நாட கருணை செய் காத்திருப்பேன்.
எதற்காக நான் சிரித்தேன் எதை எண்ணி நான் அழுதேன் எனக்காக எதற்காக
இத்தனை இடர்பாடுகள் எல்லாமே நீதானே
என்னிலும் நீதானே எனக்கென்ன ஏமாற்றம்
எதற்கிந்த போராட்டம்
நீ இட்ட பிச்சையிலே வாழ்ந்திருக்க ஆசை கொண்டேன்.
ஏதேதோ என்னை வந்து சூழ்ந்திருக்க காரணம் ஏன்? எப்படி நான் வாழ்ந்தாலும் என்னோடு நீ இருந்தால் அப்படியே நான் இருக்க
அருள் செய் என் இறைவா!
தப்பேதும் செய்யாமல்
தடுத்து எனை நிறுத்த உத்தமனாய் வாழ்ந்திருக்க எனக்குள்ளும் இருந்துட்டாய்…! .