கடலைப் பார்க்காதவனுக்கு குட்டை கூட பெரியதாகத்தான் தெரியும்.

மலையைப் பார்க்காதவனுக்கு குன்று கூட பெரியதாகத்தான் தெரியும்.

சிகரத்தை அடையாதவனுக்கு தென்னை மர உச்சி கூட உயரமாகத்தான் தெரியும்.

இவர்கள் எதையுமே
அடைய விருப்பம் இல்லாமல் கண்மூடி கிடப்பதால் தான் சிறியது கூட இவர்களுக்குப் பெரியதாய் தெரிகிறது.

பெரியதாய் தெரிவதனால் சிறியதைக்கூட இவர்களால் தேட முடியாமல் தவிக்கிறார்கள்.

பக்குவம் இல்லாமல்
இவர்கள் ஏணியில் கூட
ஏற முடியாது என்பதை
ஏன் புரிந்து கொள்வதில்லை?

கசப்பான பாகற் காயையும் உண்டு பழகிவிட்டால்!
அது கூட……
ருசிக்கும் தானே!

கடலையே நீந்திக்
கடந்து விட்டால்
ஏரி குளம் எல்லாம் எம்மாத்திரம்.

கடினத்தை கடந்து விட்டால் எளிதெல்லாம் எம்மாத்திரம் கஷ்டத்தை கடந்து விட்டால் இஷ்டங்கள் உன்….
இரு கைகளில் இருக்கும் .

Share.

Leave A Reply