உனக்கென்று ஒரு கொள்கை வை அதற்கென்று ஒரு எல்லை வை எதற்கென்று மறைத்து வை நன்மைக்காக விதைத்து வை எல்லா உச்சிகளுக்கும் அடித்தளம் உண்டு எல்லா அடித்தளத்திற்கும் ஒரு உச்சி உண்டு முதலில் அடித்தளத்தை அமைத்துக் கொள் உச்சி வந்து அடைவது உறுதி.
Author: கவிமணி பாலா கிருஷ்ணன்
என் இருட்டு அறையில்என் மூடிய இமைக்குள் வெளிச்சம் கொடுத்தாயேஒரு உலகம் படைத்தாயே மகிழ்ச்சி நிறைத்தாயே என் மயக்கம் முடிந்த உடன் ஏன் ஓடுகிறாய்? ஏன் நிலைக்க மறுத்து என் நிம்மதியை வாட்டுகிறாய்! உன்னோட வாழ்ந்திருக்க எண்ணுகிறேன் நீ இல்லாமலே வாழக் கற்றுக் கொள்கிறேன்நீ முழுமையாய் வா! அல்லது நீ முழுமையாய் போ! வந்து வந்து போகாதே என் நிம்மதியை வாட்டாதே!/ அந்தக் கலைந்து போன கனவுகளை நினைவுகளால் கோர்க்க முடியவில்லை நிம்மதியை வாழ முடியவில்லை.கனவே நீ எனக்கு வேண்டாம் என்று தான் நான் உன்னை புறக்கணிக்க தூக்கத்தையும் துறக்க முயற்சிக்கிறேன்.
இளைஞனே நீ அமைதியாய் இருக்காதே! அமைதி என்றும் ஆழமானது என்றால் நீ ஆழத்தில் எதையோ தேடுகிறாய் நீ தேடுகிறாய் என்றால் எதையோ தொலைத் திருக்கிறாய் எதையோ தொலைத் திருக்கிறாய் என்றால் எதன் மீதோ ஆசைப்பட்டு இருக்கிறாய். கிடைக்காத ஒன்றை ஆசைப்பட்டு அடைய நினைத்து கிடைக்காமல் தேடிக்கொண்டு இருப்பதைவிட உன்னிடம் இருப்பது எதுவென்று அறிந்து அதைப் பற்றி உணர்ந்தால் நீ விரும்பியவை மட்டும் இன்றி விரும்பாததும் உன்னைத் தேடி வந்து சேரும்.
எத்தனை புயல் வந்தும் எத்தனை வெள்ளம் வந்தோம் எத்தனை தீ விபத்து ஏற்பட்டும் எத்தனை முன்னேற்றம் ஏற்பட்டும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும் எந்த தேசமும் இல்லாமல் இன்னும் அழிந்து விடாமல் எப்படியோ ஏனோ! இருந்து கொண்டு தான் இருக்கிறது குடிசைகள்.
நாம் எதையும் சரியாகப் புரிந்து கொள்வது இல்லை அப்படி புரிந்து கொள்ள தொடங்கினால் புரியாத விசயங்களும் புரியத் தொடங்கும். அர்த்தம் புரியும் சில விசயங்களுக்குள் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கும் ஒரு மண்ணிற்குள் ஒரு கடலுக்குள் இருக்கும் புதையலைப் போல… ஒரு பகவத் கீதை புத்தகம் இதை ஒரு பத்து வயது பையன் படிக்கிறான் அதே புத்தகத்தை இருபது வயது இளைஞன் படிக்கிறான். அதே புத்தகத்தை எண்பது வயது முதியவரும் படிக்கிறார் ஆனால் மூவருக்கும் சரியாக அந்தக் கருத்துக்கள் சென்று விடுமா? சிறுவனுக்குப் புரியாமலே இருக்கலாம் இளைஞனுக்குப் புரியலாம்.ஆனால் அனுபவம் இல்லாததால் அதை உணர மறுக்கலாம். முதியவருக்கோ புரிந்து அனுபவித்து அதை ஏற்றுக் கொள்கிறார் புத்தகம் ஒன்றுதான் ஆனால் அதை புரிந்து கொள்ள நமக்கு பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவத்தை எது தருகிறது என்றால் இதை நான் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்போது வருகிறதோ! அதைப்…
மாசுபட்டு இருக்கிறது அழுக்கு நிறைந்து இருக்கிறது நம் நாடு சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் குப்பைத் தொட்டி போல் இருக்கிறது நாடு பட்டைத் தீட்டப் படாத வைரங்கங்கள் எல்லாம் வெறும் கருப்பு கற்களாகவே கிடைக்கின்றன. அணிகலன் ஆகாத தங்கம் எல்லாம் இன்னும் அடி மண்ணோடு கலந்து கிடைக்கிறது.முத்தாக வேண்டிய மழைத் துளியெல்லாம் இன்னும் மேக மூட்டங்களாக இருக்கின்றன.பறக்க வேண்டிய பட்டம் எல்லாம் இன்னும் காகிதங்களாகவே இருக்கின்றன. வியக்க வேண்டியசிற்பம் எல்லாம் இன்னும் பாறைகளாகவே இருக்கின்றன. எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் ஏங்கிக் கொண்டே இருக்க படைக்கப்பட்ட படைப்புகள் எல்லாம் பத்திரமாய்….. பாதுகாத்துக் கொண்டு இருப்பதெல்லாம் யார் படிப்பதற்காக தமிழே படிக்கத் தெரியாத தமிழ் குழந்தைகளுக்காகவா? இவ்வளவு பெரிய சமுதாயம் இருந்தும் இவ்வளவு கோடி மக்கள் இருந்தும் ஏன் இன்னும் இப்படி இருந்து கொண்டு இருக்கிறோம். சிதறிக் கிடக்கிற கல்லை எல்லாம் ஒன்று சேர்த்தால் மலையையே உருவாக்கலாம். சிதறிக் கிடக்கிற நீரை எல்லாம் ஒன்று சேர்த்தல்…
இளைஞனே! எல்லா தவறுகளுக்கும் அனுபவம் இல்லாததும் பக்குவம் இல்லாததும் தான் காரணம்.அனுபவம் இருந்தால் எதை எப்படி செய்வது யார் என்ன செய்வார்கள் என்று தெரியும்.பக்குவம் இருந்தால்யாருக்கு எதை எப்படி செய்வது என்று புரியும். இவ்விரண்டும் இளமையில் இளைஞனுக்கு கிடைக்காத ஒன்று.எல்லா விசயங்களையும்நாம் நேரடியாக அனுபவித்து கற்றுக் கொண்டு இருந்தோம் என்றான் நம்மில் ஒரு நல்ல நிலைக்குச் செல்ல முடியாது.பிறருடைய அனுபவங்களைக் கேட்டு அதை நம் வாழ்வில் வருமுன் காத்துக்கொள்வது நன்மை தரும் .இளைஞனே! நீ செய்யும் காரியங்கள் சரியானவை என்று நீயே தீர்மானித்து செயல்களைச் செய். இளைஞனே! ஒவ்வொரு செயலிலும் உனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும்.அதை நீ! பாடமாக… கற்றுக்கொள். அனுபவங்களை அலட்சியப்படுத்தி விட்டால் அதைவிட ஒரு பெரிய அனுபவம் மீண்டும் நீ அனுபவிக்க நேரிடும்.அந்த முதல் அனுபவத்தை நீ அலட்சியப் படுத்தாமல் புரிந்து கொண்டிருந்தால்…. இந்த மிகப்பெரிய இரண்டாவது அனுபவம் உனக்கு புகழாகவோ! பணமாகவோ! வெற்றியாகவோ! மாற வாய்ப்புண்டு.
மிகப் பெரிய நதிகூட சிறு சிறு மழைத்துளிகளால் சேர்ந்தவை தான். ஆயிரம் மயில் நடந்தவன் கூட ஒவ்வொரு அடியாய் தான் சென்றிருப்பான்.மிகப்பெரிய அரண்மனை கூட சிறு சிறு கற்களால் தான் கட்டப்பட்டிருக்கும். மிகப்பெரிய முயற்சிகள் கூட சிறிது சிறிதாய் தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கும்.சிறிது சிறிதாய் துவங்கிய அனைத்தும் பெரிது பெரிதாய் முடியும்போது ஏன்?பெரிது பெரிதாய் நினைத்தும் சிறிய சிறிய விசயத்தைக் கூட அடைய முடியாமல் தவிக்கிறாய்! உன் பெரிய பெரிய இலட்சியங்கள் எல்லாம் சிறிது சிறிதாய் இன்றே துவங்கு அது உன்னை பெரிய பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்…!
சாயம் போவதில்லை என்றும் சாயங்கள் சாயம் போவது என்றும் சலவை துணிகள் தான் இருக்கின்ற வண்ணம் போதாமல் இன்னமும் வேண்டும் என்று ஒட்டாத வண்ணத்தை ஒட்டவைத்து விற்றதனால் ஒரே சலவையில் ஒட்டாமல் சாயம் போனது சலவைத் துணிகள்.சாயம் போனவை துணிகள் மட்டும்அல்ல நாமும் தான் சாயம் போனவர்களாய் வெளுத்துப் போனவர்களாய் மாறிக்கொண்டு இருக்கிறோம் கலாச்சார மாற்றத்தில் வெளிநாட்டு மோகத்தில் பண்பாட்டு மாற்றத்தில் இனம் மறந்து மொழி மறந்து பண்பாட்டை இழந்து கட்டுப்பாடு இல்லாமல் தனிமனித ஒழுக்கம் தெரியாமல் மனிதத்தையே இழந்து சாயம் போய் கொண்டு இருக்கிறோம் நாம் !தனித்தனியாக இருக்கும் வரை தான் வண்ணங்கள் அவை அனைத்தும் ஒன்றாய் இணைந்து விட்டால் கருப்பு தான் கடைசியில் மிஞ்சும். அதைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு அவை தனித்து நிற்கும் போது தான் ஜொலித்து நிற்கும்.அத்தனையும் ஒன்றிணைத்தால்மொத்தமும் கலந்து தன்மையை இழந்து நாற்றம்…
மரபுக் கவிதை செய்ய மாணவன் நான் ஆசைப்பட்டு எழுதுகோலை எடுத்துக் கொண்டு எதையெதையோ சிந்திக்க எதுவும் வராமல் மண்டையைக் குடைந்து சிந்தனை செய்தும் இரு வரி கூட ஒன்றும் இணையவில்லை என்ன செய்வது எப்படி வரும்? மரபுக் கவி பாறையை கையில் வைத்துக்கொண்டு உளியே இல்லாமல் சிற்பம் செதுக்க எண்ணினால் எப்படி சிலை உருவாகும் ?அப்படித்தான் நாங்களும் இன்று இருக்கிறோம். மரபுக் கவிதையை எங்களுக்கு கேட்கவே வாய்ப்பில்லை பார்த்து படித்தாலும் புரியவில்லை! அதை புரிய வைக்க இன்று சில ஆசிரியருக்கும் தெரியவில்லை இப்படி இருக்கநாங்கள்எப்படி மரபுக் கவிதை எழுதுவது….தமிழோ எங்களுக்கு உருமாறி இருக்கதமிழ் இலக்கணம் எங்களுக்கு…. தடுமாறி இருக்கிறது. பின் எப்படி தமிழில் தலை சிறந்த மரபுக் கவிதை எழுதுவது! இன்று தமிழில் மூன்று வரியில் ஒரு ஹைக்கூ எழுதினோர் தமிழ் சொற்களே இல்லாமல் இப்படித்தான் எங்கள் கவி பயணம் ஓடிக்கொண்டுஇருக்கிறது.இது காலமாற்றமா? கலாச்சாரம் மாற்றமா ?மொழி மாற்றமா?இல்லை ….தமிழிற்கே ஏற்பட்ட…