சாயம் போவதில்லை
என்றும் சாயங்கள்
சாயம் போவது என்றும்
சலவை துணிகள் தான்

இருக்கின்ற வண்ணம் போதாமல் இன்னமும் வேண்டும் என்று
ஒட்டாத வண்ணத்தை
ஒட்டவைத்து விற்றதனால்
ஒரே சலவையில்
ஒட்டாமல் சாயம்
போனது சலவைத்
துணிகள்.

சாயம் போனவை
துணிகள் மட்டும்
அல்ல
நாமும் தான்

சாயம் போனவர்களாய் வெளுத்துப் போனவர்களாய் மாறிக்கொண்டு இருக்கிறோம் கலாச்சார மாற்றத்தில் வெளிநாட்டு மோகத்தில் பண்பாட்டு மாற்றத்தில்

இனம் மறந்து
மொழி மறந்து
பண்பாட்டை இழந்து கட்டுப்பாடு இல்லாமல் தனிமனித ஒழுக்கம் தெரியாமல் மனிதத்தையே இழந்து சாயம் போய் கொண்டு இருக்கிறோம்
நாம் !

தனித்தனியாக இருக்கும்
வரை தான் வண்ணங்கள் அவை அனைத்தும் ஒன்றாய் இணைந்து விட்டால்
கருப்பு தான்
கடைசியில் மிஞ்சும்.

அதைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திற்கும்
ஒரு பண்பாடு உண்டு ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒரு கலாச்சாரம் உண்டு

அவை தனித்து நிற்கும்
போது தான் ஜொலித்து நிற்கும்.

அத்தனையும் ஒன்றிணைத்தால்
மொத்தமும் கலந்து தன்மையை இழந்து
நாற்றம் சேர்ந்து சாக்கடையாகிவிடும்

அதுதான் இங்கு நடந்து கொண்டிடு இருக்கிறது
நம் கலாச்சாரத்தை நாம் காப்பாற்றுவதும் இல்லை

மற்றவர் கலாச்சாரத்தை
நாம் கடைபிடிப்பது இல்லை எல்லாவற்றையும்
சேர்க்க எண்ணி
எதுவுமே இல்லாமல்
போய்க் கொண்டு இருக்கிறோம்.

பருத்தியின் வெண்மை
சாயம் போவதில்லை
கதராடையில் காவி
கரைந்து போவதில்லை

நாம் பண்பாடு கடையில் வாங்கிய சாயத்துணிகள் அல்ல!

அவைகள் நம் முன்னோர்களின் உழைப்பில் விளைந்த பருத்தி துணிகள்.

பண்பாட்டை கற்றுக் கொள்ளுங்கள்
கலாச்சாரத்தைப்
பெற்றுக் கொள்ளுங்கள்.

நம் நாட்டிற்கு
பருத்தியும் காவியம்
சிறந்தது என்று
கண்டிப்பாக
உணர்ந்து கொள்வோம்.

Share.

Leave A Reply