இளைஞனே! எல்லா தவறுகளுக்கும்
அனுபவம் இல்லாததும் பக்குவம் இல்லாததும்
தான் காரணம்.
அனுபவம் இருந்தால்
எதை எப்படி செய்வது
யார் என்ன செய்வார்கள் என்று தெரியும்.
பக்குவம் இருந்தால்
யாருக்கு எதை
எப்படி செய்வது
என்று புரியும்.
இவ்விரண்டும்
இளமையில்
இளைஞனுக்கு
கிடைக்காத ஒன்று.
எல்லா விசயங்களையும்
நாம் நேரடியாக
அனுபவித்து
கற்றுக் கொண்டு
இருந்தோம் என்றான்
நம்மில் ஒரு
நல்ல நிலைக்குச்
செல்ல முடியாது.
பிறருடைய அனுபவங்களைக் கேட்டு அதை
நம் வாழ்வில்
வருமுன் காத்துக்
கொள்வது
நன்மை தரும் .
இளைஞனே! நீ
செய்யும் காரியங்கள் சரியானவை என்று
நீயே தீர்மானித்து
செயல்களைச் செய்.
இளைஞனே!
ஒவ்வொரு செயலிலும் உனக்கு ஒரு
அனுபவம் கிடைக்கும்.
அதை நீ!
பாடமாக…
கற்றுக்கொள்.
அனுபவங்களை அலட்சியப்படுத்தி
விட்டால்
அதைவிட ஒரு
பெரிய அனுபவம்
மீண்டும் நீ
அனுபவிக்க நேரிடும்.
அந்த முதல் அனுபவத்தை நீ அலட்சியப் படுத்தாமல்
புரிந்து கொண்டிருந்தால்….
இந்த மிகப்பெரிய இரண்டாவது அனுபவம் உனக்கு புகழாகவோ! பணமாகவோ! வெற்றியாகவோ!
மாற வாய்ப்புண்டு.