அடிமை பெற்றிருந்த நம் முன்னோர்கள் அனைவருமே தேசபக்தி கொண்டு ஒற்றுமையாய் ஒன்றுபட்டு நின்றதனால் சுதந்திரம் அடைந்தோம். தேசபக்தி என்ற ஒருவரிச் சொல்லிற்கு அர்த்தம் அறிய அகராதியை புரட்டாதே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடும் இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இந்தியன் என்கிற உணர்வு உரைத்திருக்கும். ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் சுதந்திரக் காற்றை எதிர்பார்த்தேமூக்கு புடைத் திருக்கும். செயலும் உணர்வும் விடுதலை விடுதலை என்று ஓங்கி உரைத்திருக்கும். நம் நாடு நம் மக்கள் நம் உணர்வு நம்மொழி என்று ஒற்றுமை உணர்வில் தான் விடுதலை பெற்றிட ஒரு விதையை வித்திட்டோம்.சுதந்திரம் பெற்றது எதற்கு என்று புரியவில்லை! பெற்றது சுதந்திரம் தானே! என்று சரிவரத் தெரியவில்லை இதற்குத்தான் இந்த சுதந்திரம் என்று ஏங்க கூட யாரும் இல்லை! இத்தனை நாசத்திற்கு ஒரு காரணம் என்று சற்று சிந்தித்துப் பார்க்கயில்… தேசபக்தி இன்றில்லை தேசமே நன்றில்லை இன்றைய இளைஞரிடம் தேசபக்தி என்பதற்கு விளக்கம் கேட்டால்…
Author: கவிமணி பாலா கிருஷ்ணன்
ஒற்றையடிப் பாதையிலே நடந்து வரும் அந்த சுகம்நூறடி சாலையின் நெரிசலில் கிடைத்திடுமோ? பச்சை மரத்தடியில் படுத்துறங்கும் அந்த சுகம் மின் விளக்கு கம்பத்தடியில் எங்கேனும் கிடைத்திடுமோ? மண் வாசனை மழையோடு நனைந்து வரும் அந்த சுகம் நகரத்து வீதியினில் எங்கேயும் கிடைத்திடுமோ? சுத்தமான சுகக் காற்று சுவாசிக்கும் அந்த சுகம் வாகனப் புகை தாண்டி நமக்கென்று கிடைத்திடுமோ? ஊரே உறவென்று வாழுகின்ற அந்த சுகம் உறவே பகை போல இங்கிருக்க கிடைத்திடுமோ? மண்ணோடு விளையாடி உறவாடும் அந்த சுகம் பணம் கொண்ட நகரத்தில் கிடைத்திடுமோ? குளத்தில் கூட்டாக குளிக்கும் அந்த சுகம் நகரத்து நீச்சல் குளம் என்னாளும் தந்திடுமோ? அரட்டை அடிக்கின்ற இரவு நேரத் திண்ணை சுகம் அடுக்குமாடி குடியிருப்பின் இறுக்கத்தில் கிடைத்திடுமோ? பௌர்ணமி முழு நிலவின் வெளிச்சத்தைக் கண்ட சுகம் கண் பறிக்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் கிடைத்திடுமோ? தாவணிப் பெண் சிணுங்கி வெட்கப்படும் அந்த சுகம் சுடிதார் உடையணியும் பெண்ணிடம்…
என்னுயிர் தமிழ்த் தாயே உன்னில் நானும் ஒரு அணு தமிழனாய் பிறந்ததால் உன்னில் நானும் ஒரு அணு நான் பிறந்த போது என்னில் நோய் எதுவும் தாக்கி விடாமல் இருக்க தடுப்பு மருந்து தந்தார்கள். ஆனால் பிற மொழி ஏதும் தாக்காமல் இருக்க எதுவும் தரவில்லை பிறமொழி நோய் வந்து அணு அணுவாய் துருப்பிடித்துத் தானே உருவில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது அது இந்த அணுவிலும் நுழைந்தது தமிழே நானும் தமிழனாய் பிறந்த போதிலும் என்னைச் சுற்றி எல்லாம் பிற மொழிதான் இருக்கிறது புலமை செழிக்கும் பழமை மொழி என்று தான் எனக்கு அறிமுகம் ஆனது என் தாய்மொழி… எதுகை மோனை கவிதை நிறைந்த என் தமிழ் மொழி இன்று கொச்சை நிறைந்த பச்சை மொழியாய் தான் பார்க்க முடிகிறது காதல் நிறைந்த சண்டை மொழியாய் தான் பார்க்கப் படுகிறது உலகை வென்ற ராஜமொழி இன்று வேலைக்காரி பேசும் கூலிக்கார மொழியாய் தான்…
பசியில்லாமல் உண்ணும் உணவிற்கு ருசியில்லை களைப்பில்லாமல் எடுக்கும் ஓய்வு சுகம் இல்லை நோயில்லாமல் உண்ணும் மருந்து பயன் இல்லை வலியின்றி செய்யும் உடற்பயிற்சி வலிமையில்லை அழகில்லாத பேச்சு செவிக்கு இனிப்பதில்லை குணம் இல்லாத நட்பு மனதில் நிலைப்பதில்லை வெப்பம் இல்லாத போது குளிரும் தேவையில்லை பயிற்சி இல்லாத இசை மயக்குவதில்லை முயற்சி இல்லாமல் எதுவும் முடிவதில்லை துன்பம் இல்லாமல் இன்பம் கூட ருசிப்பதில்லை தோல்வி இல்லாமல் எந்த வெற்றியும் கிடைப்பதில்லை.
எ ன்புத்தம் புது உணர்ச்சியில் பூத்த பூக்கள் எல்லாம் என் லட்சியப் பயணத்தின் வழி நெடுககிடக்கின்றன சத்தம் இன்றி நான் செல்ல இந்த ஏற்பாடோ! சளைக்காமல் நான் செல்ல இந்த ஏற்பாடோ! அந்த நிலாவைப் போல சூரியனிடம் இருந்து பெற்ற ஒளி எல்லாம் இரவிலும் எனக்கு வழிகாட்டுகிறது என் சிகரத்தின் உச்சிகளை நோக்கி கவலையின்றி வருத்தமின்றி மகிழ்ச்சியோடு பயிற்சியோடு என் வெற்றிப் பயணத்தின் பாதை இது என்பதை நான் தொட்டுவிட்ட பிறகு தொடருபவர்கள் சொல்வார்கள் சரியான பாதை என்று.
எண்ணம் வளர்த்து திண்ணம் சிறந்து நாளும் கடந்து வானம் தொட செய்து கொண்டே இரு உன் கனவு எல்லையைத் தாண்டி செல்ல உன் லட்சியம் உச்சியில் கொடி நட உன் ஆசை கடலில் ஆழம் பார்க்க உன் உலகம் தாண்டி உயர்ந்து நிற்க செய்து கொண்டே இரு நாளை உலகம் உன்னைப் பணிய நாளும் உலகம் உன்னை உரைக்க காலம் கடந்து வாழ்ந்து இருக்க கடைசி வரை நீ நிலைக்க செய்து கொண்டே இரு செயல் பட்டுக் கொண்டே இரு எது உன் பணியோ அது உன் தொழிலோ எது உன் கனவோ எது உன் லட்சியமோ அதற்காக அதை செய்து கொண்டே இரு செயல்பட்டுக் கொண்டே இரு ஜெயிப்பதையே வாழ்வின் ஒரே லட்சியமாகக் கொண்டு உழைப்பவன் தான் ஜெயிக்க முடியும் செயல் பட்டுக் கொண்டே இரு உன் பார்வையில் உன் சிந்தனையில் உன் பேச்சில் உன் செயல்பாட்டில் உன் வெளிப்பாட்டில்…
எல்லாம் ஒரு நாள் முடிந்து விடும் என்றால் எதற்காக இத்தனை தொடக்கங்கள்- சரிதான் எல்லா முடிவிலும் ஒரு தொடக்கம் உண்டு அதை உணர்வதே நன்று. மொட்டின் முடிவில் பூக்கள் பிறக்கும் உளிதட்டின் முடிவில் சிலைகள்- சரிதான் நல்ல துவக்கத்திற்காக முடிவது சுபம் அதை உணர்வதே சுகம். துவக்கம் என்றும் மகிழ்ச்சிதான் முடிவது வருத்தம் அல்ல- சரிதான் எல்லாம் முடியும் துவக்கத்திற்காக தானே அதை உணர்வதே தேன். முடிவில்லாத ஒரு துவக்கத்தைத் துவங்குவோம் அது என்றும் முடியாது தொடருவோம் -சரிதான் ஒற்றுமை ஒருங்கிணைத்தல் என்றும் இல்லை முற்றும் அதை உணர்வதே பற்று.
செந்நிற கதிரொளி சேர்ந்து கூடவே வெண்நிற பனித்துளிகள் நுனியிலையில் அமர்ந்திருந்த பச்சை நிற பாதை வழி பார்த்து நடந்து சென்றேன் வண்ணம் நிறைந்த மொட்டு எல்லாம் பூவாய் மாறியது விரித்து நிறைந்த பூக்களோ வாசம் பரப்பியது காதிற்கோ விருந்தளிக்க குயில்கள் கூவியது கண்ணுக்கு விருந்தளிக்க பல மயில்கள் ஆடியது விழி எங்கு செல்வதென்று விழித்திருக்க! அன்னாந்துப் பார்க்க அழைத்துச் சென்றது கிளி மேகத்தைக் கிழித்துக் கொண்டு உயர்ந்து நின்றது மலை அங்கிருந்து இறங்கி வந்தது அருவி கொட்டியது மீன்கள் நீந்தின தவளை தாவியது மான் ஓடியது மரம் சிலிர்த்தது அணில் விளையாட மயில் ஆடியது இயற்கை சோலையிலே இன்புற்றிருந்த சமயத்தில் இதுவரை கண்டிராத வெண்ணொளி ஒன்று பிறந்து மயக்கும் இசையோடு மந்திர மனத்தோடு சிலை ஒன்று உயிர் பெற்று சிலிர்த்து வந்தது வெண்ணிற தாமரையில் ஏடுகள் கையில் ஏந்தி வீணையின் இசை மீட்டி மந்திரப் புன்னகையோடு காட்சி தந்த கலைவாணியைக் கண்டதுமே…
விழித்துப் பார் உலகம் தெரியும் சூரியன் ஒளிரும் விடியல் பிறக்கும் பூக்கள் மலரும் பறவைகள் பறக்கும் வாழ்க்கை புரியும் உழைக்கத் தூண்டும் பசியும் எடுக்கும் கனவுகள் நினைவாகும் நினைவுகள் நிஜமாகும் உழைப்பின் வழியில் பாதை தெரியும் நடந்து சென்றால் வியர்வை வரும் முட்கள் இருக்கும் பார்த்துச் செல் கற்கள் இருக்கும் தாண்டிச் செல் சாக்கடை வரும் மூக்கைப் பொத்திக் கொள் பாதை எல்லாம் பழுதடைந்து இருக்கும் பூச்சி, புழு வரும் பாம்பு, பல்லி வரும் அத்தனையும் தள்ளி விட்டு இலட்சியத்தை அடைய நேர்மையை நெஞ்சில் வைத்து உண்மையை உணர்வில் வைத்து விழிகளை விரித்து வைத்து காற்றைப் போல எல்லாவற்றையும் கடந்து செல் கடைசியில் புயலுக்குப் பின் பூகம்பத்திற்கு பின் சுனாமிக்குப் பின் சூறாவளிக்குப் பின் வருகின்ற அமைதியைப் போலநீ நினைத்த இலட்சியம் உன்னை வந்து அடையும்.
கனியில் இருந்து விதையாய் பிறந்து கீழே விழுந்து மண்ணில் புதைந்து நீரை உறிஞ்சி மண்ணைக் கிழித்து இலையாய் தழைத்து செடியாய் நீற்க எதையும் அறியாக் குழந்தையாக தாய் மரத்து நிழலிலேயே நுனி இலையோடு விளையாடும் வாழ்வே இது தானே!என்றென்றும் போதினிலே இளமரமாய் நான் வளர பூத்துக்குலுங்கி காய் விட்டு காய்த்து இளமரமாய் இருந்தபோது.,. இப்படியே இருந்து விட ஏங்கி நின்ற போதினிலே பெரிய மரமாக பெருமையுடன் நான் மாற என் தளை உண்டு.பசி யாரும் உயிரினம் என் நிழல் கொண்டு களைப்பாறும் மகிழ்ச்சியில் பிறருக்கு உதவியாக எப்போதும் நானிருக்க எப்போதும் இப்படியே இருந்து விட வேண்டும் என்று நட்ட இடத்திலேயே நின்று கொண்டு நன்மை செய்ய நான் நினைக்க வெட்ட வெளியில் நானே பட்ட மரமாய் மாறிவிட்டேன். பட்ட மரமான பின்னாலே மண்ணோடு நான் விழுந்தேன் அப்போது விதையாய் நான் இருந்த நினைவெல்லாம் கூடி வர இளம் பருவம் மீண்டும் வர…