மாசுபட்டு இருக்கிறது
அழுக்கு நிறைந்து
இருக்கிறது நம் நாடு

சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்
குப்பைத் தொட்டி போல் இருக்கிறது நாடு

பட்டைத் தீட்டப்
படாத வைரங்கங்கள்
எல்லாம் வெறும்
கருப்பு கற்களாகவே கிடைக்கின்றன.

அணிகலன் ஆகாத
தங்கம் எல்லாம்
இன்னும் அடி
மண்ணோடு
கலந்து கிடைக்கிறது.

முத்தாக வேண்டிய
மழைத் துளியெல்லாம் இன்னும்
மேக மூட்டங்களாக இருக்கின்றன.

பறக்க வேண்டிய
பட்டம் எல்லாம்
இன்னும் காகிதங்களாகவே இருக்கின்றன.

வியக்க வேண்டிய
சிற்பம் எல்லாம்
இன்னும் பாறைகளாகவே இருக்கின்றன.

எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் ஏங்கிக் கொண்டே இருக்க
படைக்கப்பட்ட படைப்புகள் எல்லாம் பத்திரமாய்…..

பாதுகாத்துக் கொண்டு இருப்பதெல்லாம்
யார் படிப்பதற்காக
தமிழே படிக்கத் தெரியாத
தமிழ் குழந்தைகளுக்காகவா?

இவ்வளவு பெரிய சமுதாயம் இருந்தும் இவ்வளவு
கோடி மக்கள் இருந்தும்
ஏன் இன்னும் இப்படி இருந்து கொண்டு இருக்கிறோம்.

சிதறிக் கிடக்கிற கல்லை எல்லாம் ஒன்று
சேர்த்தால்
மலையையே உருவாக்கலாம்.

சிதறிக் கிடக்கிற நீரை எல்லாம் ஒன்று சேர்த்தல் கடலையே உருவாக்கலாம்.

சிதைந்த கிடக்கிற மக்களை ஒன்று சேர்த்தால்….
மக்கள் மனங்களை
ஒன்று சேர்த்தால்…
மனதின் நோக்கங்களை
ஒன்று சேர்த்தல்..
அன்று!

கறைகள் சுத்தமாகும் அழுக்குகள் களையப்படும் குப்பைகள் எரிக்கப்படும் சாம்பல் கூட கரைந்து விடும் அன்று …

கருப்பும் நிறம் மாறும்
மண் பொன்னாகும் மழைத்துளி முத்தாகும்
காகிதம் பட்டமாகும்
பாறைகள் சிற்பமாகும் வண்ணங்கள் ஓவியமாகும்

கவிதைகள் காவியமாகும் படைப்புகள் பாராட்டப்படும் அன்று என்றோ
அன்றே
நாடு நலம் பெறும்.

Share.

Leave A Reply