என் இருட்டு அறையில்
என் மூடிய இமைக்குள் வெளிச்சம் கொடுத்தாயே
ஒரு உலகம் படைத்தாயே மகிழ்ச்சி நிறைத்தாயே

என் மயக்கம் முடிந்த
உடன் ஏன் ஓடுகிறாய்?
ஏன் நிலைக்க மறுத்து
என் நிம்மதியை வாட்டுகிறாய்!

உன்னோட வாழ்ந்திருக்க எண்ணுகிறேன்
நீ இல்லாமலே வாழக் கற்றுக் கொள்கிறேன்
நீ முழுமையாய் வா! அல்லது
நீ முழுமையாய் போ! வந்து வந்து போகாதே
என் நிம்மதியை வாட்டாதே!/

அந்தக் கலைந்து போன கனவுகளை
நினைவுகளால் கோர்க்க முடியவில்லை
நிம்மதியை வாழ முடியவில்லை.

கனவே நீ எனக்கு வேண்டாம் என்று தான் நான் உன்னை புறக்கணிக்க தூக்கத்தையும் துறக்க முயற்சிக்கிறேன்.

Share.

Leave A Reply