மரபுக் கவிதை செய்ய மாணவன் நான் ஆசைப்பட்டு எழுதுகோலை எடுத்துக் கொண்டு எதையெதையோ சிந்திக்க

எதுவும் வராமல்
மண்டையைக் குடைந்து சிந்தனை செய்தும்
இரு வரி கூட
ஒன்றும் இணையவில்லை

என்ன செய்வது
எப்படி வரும்?

மரபுக் கவி பாறையை
கையில் வைத்துக்
கொண்டு உளியே
இல்லாமல்
சிற்பம் செதுக்க
எண்ணினால்
எப்படி சிலை
உருவாகும் ?

அப்படித்தான்
நாங்களும் இன்று இருக்கிறோம்.

மரபுக் கவிதையை
எங்களுக்கு
கேட்கவே வாய்ப்பில்லை

பார்த்து படித்தாலும் புரியவில்லை!
அதை புரிய வைக்க

இன்று சில
ஆசிரியருக்கும் தெரியவில்லை

இப்படி இருக்க
நாங்கள்
எப்படி மரபுக்
கவிதை
எழுதுவது….

தமிழோ எங்களுக்கு
உருமாறி இருக்க
தமிழ் இலக்கணம்
எங்களுக்கு….
தடுமாறி இருக்கிறது.

பின் எப்படி
தமிழில் தலை
சிறந்த மரபுக்
கவிதை எழுதுவது!

இன்று தமிழில்
மூன்று வரியில் ஒரு
ஹைக்கூ எழுதினோர்
தமிழ் சொற்களே
இல்லாமல்

இப்படித்தான்
எங்கள் கவி
பயணம்
ஓடிக்கொண்டு
இருக்கிறது.

இது காலமாற்றமா? கலாச்சாரம் மாற்றமா ?
மொழி மாற்றமா?

இல்லை ….

தமிழிற்கே ஏற்பட்ட தடுமாற்றமா?

மரபுக் கவிதைகள்
எங்களுக்கு எட்டாத
பொருள் அல்ல !

லேசாக தொட்டுப்
பார்த்தால்….

காவியங்கள்
எங்களை கட்டிக்கொள்ளும்!

மரபுக் கவிதையை மறக்கவில்லை நாங்கள்

மனம் இருக்கிறது
மொழி இருக்கிறது
மரபுக் கவி படைக்க
வாய்ப்பு தேடிக்
கொண்டு….
இருக்கிறோம்.

Share.

Leave A Reply