எல்லாம் ஒரு நாள் முடிந்து விடும் என்றால்
எதற்காக இத்தனை தொடக்கங்கள்- சரிதான் எல்லா முடிவிலும் ஒரு தொடக்கம் உண்டு
அதை உணர்வதே நன்று.

மொட்டின் முடிவில் பூக்கள் பிறக்கும்
உளிதட்டின் முடிவில் சிலைகள்- சரிதான்
நல்ல துவக்கத்திற்காக முடிவது சுபம்
அதை உணர்வதே சுகம்.

துவக்கம் என்றும் மகிழ்ச்சிதான்
முடிவது வருத்தம் அல்ல- சரிதான்
எல்லாம் முடியும் துவக்கத்திற்காக தானே
அதை உணர்வதே தேன்.

முடிவில்லாத ஒரு துவக்கத்தைத் துவங்குவோம் அது என்றும் முடியாது தொடருவோம் -சரிதான் ஒற்றுமை ஒருங்கிணைத்தல் என்றும் இல்லை முற்றும் அதை உணர்வதே பற்று.

Share.

Leave A Reply