பசியில்லாமல் உண்ணும் உணவிற்கு ருசியில்லை

களைப்பில்லாமல் எடுக்கும் ஓய்வு சுகம் இல்லை

நோயில்லாமல் உண்ணும் மருந்து பயன் இல்லை

வலியின்றி செய்யும் உடற்பயிற்சி வலிமையில்லை

அழகில்லாத பேச்சு
செவிக்கு இனிப்பதில்லை

குணம் இல்லாத நட்பு
மனதில் நிலைப்பதில்லை

வெப்பம் இல்லாத போது குளிரும் தேவையில்லை

பயிற்சி இல்லாத
இசை மயக்குவதில்லை

முயற்சி இல்லாமல்
எதுவும் முடிவதில்லை

துன்பம் இல்லாமல்
இன்பம் கூட ருசிப்பதில்லை

தோல்வி இல்லாமல்
எந்த வெற்றியும் கிடைப்பதில்லை.

Share.

Leave A Reply