கனியில் இருந்து விதையாய் பிறந்து
கீழே விழுந்து மண்ணில் புதைந்து
நீரை உறிஞ்சி மண்ணைக் கிழித்து
இலையாய் தழைத்து செடியாய் நீற்க

எதையும் அறியாக் குழந்தையாக
தாய் மரத்து நிழலிலேயே
நுனி இலையோடு விளையாடும் வாழ்வே
இது தானே!

என்றென்றும் போதினிலே இளமரமாய் நான் வளர பூத்துக்குலுங்கி காய் விட்டு காய்த்து
இளமரமாய் இருந்தபோது.,.

இப்படியே இருந்து விட
ஏங்கி நின்ற போதினிலே பெரிய மரமாக
பெருமையுடன் நான் மாற
என் தளை உண்டு.

பசி யாரும் உயிரினம்
என் நிழல் கொண்டு களைப்பாறும் மகிழ்ச்சியில்

பிறருக்கு உதவியாக எப்போதும் நானிருக்க எப்போதும் இப்படியே
இருந்து விட வேண்டும் என்று நட்ட இடத்திலேயே நின்று கொண்டு
நன்மை செய்ய நான் நினைக்க வெட்ட வெளியில் நானே
பட்ட மரமாய் மாறிவிட்டேன்.

பட்ட மரமான
பின்னாலே மண்ணோடு
நான் விழுந்தேன் அப்போது விதையாய் நான் இருந்த நினைவெல்லாம் கூடி வர

இளம் பருவம் மீண்டும் வர வாழ்க்கை சுழற்சியினை சுற்றிப் பார்த்து கண்டு கொண்டேன்
வாழ்க்கையும் அவ்விதமே சுழற்சியினை ஏற்று சுகமாய் பயணிப்போம்.

Share.

Leave A Reply