எண்ணம் வளர்த்து
திண்ணம் சிறந்து
நாளும் கடந்து
வானம் தொட
செய்து கொண்டே
இரு
உன் கனவு
எல்லையைத்
தாண்டி செல்ல
உன் லட்சியம்
உச்சியில்
கொடி நட
உன் ஆசை கடலில்
ஆழம் பார்க்க
உன் உலகம்
தாண்டி
உயர்ந்து நிற்க
செய்து கொண்டே
இரு
நாளை உலகம்
உன்னைப் பணிய
நாளும் உலகம்
உன்னை உரைக்க
காலம் கடந்து
வாழ்ந்து இருக்க
கடைசி வரை
நீ நிலைக்க
செய்து கொண்டே
இரு
செயல் பட்டுக்
கொண்டே இரு
எது உன் பணியோ
அது உன் தொழிலோ
எது உன் கனவோ
எது உன் லட்சியமோ
அதற்காக
அதை செய்து
கொண்டே இரு
செயல்பட்டுக்
கொண்டே இரு
ஜெயிப்பதையே
வாழ்வின்
ஒரே லட்சியமாகக்
கொண்டு
உழைப்பவன் தான்
ஜெயிக்க முடியும்
செயல் பட்டுக்
கொண்டே இரு
உன் பார்வையில்
உன் சிந்தனையில்
உன் பேச்சில்
உன் செயல்பாட்டில்
உன் வெளிப்பாட்டில்
உன் உயர்வை
நோக்கியே
உன் வெற்றியை
தியானித்தே
உன் லட்சியத்தைச்
சுவாசித்தே
அணு அணுவாய்
அசை அசைவாய்
நகர்ந்து கொண்டே இரு
செயல்பட்டுக்
கொண்டே இரு
ஓய்வின்றி
நம்பிக்கையோடு
செயல்பட்டுக்
கொண்டு இரு
ஜெயித்து விடலாம்.