அடிமை பெற்றிருந்த
நம் முன்னோர்கள் அனைவருமே
தேசபக்தி கொண்டு ஒற்றுமையாய் ஒன்றுபட்டு நின்றதனால்
சுதந்திரம் அடைந்தோம்.
தேசபக்தி என்ற ஒருவரிச் சொல்லிற்கு அர்த்தம் அறிய அகராதியை புரட்டாதே
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ஓடும் இரத்தத்தின்
ஒவ்வொரு துளியும்
இந்தியன் என்கிற
உணர்வு உரைத்திருக்கும்.
ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதும்
சுதந்திரக் காற்றை எதிர்பார்த்தே
மூக்கு புடைத் திருக்கும்.
செயலும் உணர்வும்
விடுதலை விடுதலை
என்று ஓங்கி
உரைத்திருக்கும்.
நம் நாடு நம் மக்கள்
நம் உணர்வு நம்மொழி
என்று ஒற்றுமை
உணர்வில் தான்
விடுதலை பெற்றிட
ஒரு விதையை
வித்திட்டோம்.
சுதந்திரம்
பெற்றது எதற்கு
என்று புரியவில்லை!
பெற்றது சுதந்திரம் தானே! என்று சரிவரத்
தெரியவில்லை இதற்குத்தான் இந்த சுதந்திரம் என்று
ஏங்க கூட யாரும் இல்லை!
இத்தனை நாசத்திற்கு ஒரு காரணம் என்று சற்று சிந்தித்துப் பார்க்கயில்…
தேசபக்தி இன்றில்லை
தேசமே நன்றில்லை
இன்றைய இளைஞரிடம் தேசபக்தி என்பதற்கு
விளக்கம் கேட்டால் வார்த்தையே புரியவில்லையாம்
ஆனால்,
மூன்று வயது சிறுவனிடம் காதலைப் பற்றி கேட்டால் முக்கால் மணி நேரம்
எனக்குப் பாடம்
எடுக்கிறேன் என்கிறான்.
சுதந்திர தினம் கொண்டாடுவதே
அவசியம் தானா என்கிறான் இன்றைய குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது முக்கியமல்ல நாடு நலம் பெற
உரம் இட்டு நீர் பாச்சினாலும் வெறும் மண் விளையாது.
தேசபக்தி என்ற விதையிட்டு வளர்த்தால்….
வீடும் நாடும் நலம் பெறும்.