விழித்துப் பார்
உலகம் தெரியும்
சூரியன் ஒளிரும்
விடியல் பிறக்கும்

பூக்கள் மலரும்
பறவைகள் பறக்கும்
வாழ்க்கை புரியும்
உழைக்கத் தூண்டும்

பசியும் எடுக்கும்
கனவுகள் நினைவாகும் நினைவுகள் நிஜமாகும் உழைப்பின் வழியில்
பாதை தெரியும்

நடந்து சென்றால்
வியர்வை வரும்
முட்கள் இருக்கும்
பார்த்துச் செல்

கற்கள் இருக்கும்
தாண்டிச் செல்
சாக்கடை வரும்
மூக்கைப் பொத்திக் கொள்

பாதை எல்லாம்
பழுதடைந்து இருக்கும்
பூச்சி, புழு வரும்
பாம்பு, பல்லி வரும்

அத்தனையும்
தள்ளி விட்டு
இலட்சியத்தை அடைய நேர்மையை
நெஞ்சில் வைத்து உண்மையை
உணர்வில் வைத்து

விழிகளை
விரித்து வைத்து
காற்றைப் போல எல்லாவற்றையும் கடந்து செல்

கடைசியில்
புயலுக்குப் பின்
பூகம்பத்திற்கு பின்
சுனாமிக்குப் பின்
சூறாவளிக்குப் பின்
வருகின்ற
அமைதியைப் போல

நீ நினைத்த
இலட்சியம்
உன்னை வந்து
அடையும்.

Share.

Leave A Reply