எ ன்புத்தம் புது
உணர்ச்சியில்
பூத்த பூக்கள் எல்லாம்
என் லட்சியப்
பயணத்தின்
வழி நெடுக
கிடக்கின்றன
சத்தம் இன்றி
நான் செல்ல
இந்த ஏற்பாடோ!
சளைக்காமல்
நான் செல்ல
இந்த ஏற்பாடோ!
அந்த நிலாவைப்
போல சூரியனிடம்
இருந்து பெற்ற
ஒளி எல்லாம்
இரவிலும் எனக்கு வழிகாட்டுகிறது
என் சிகரத்தின்
உச்சிகளை நோக்கி கவலையின்றி
வருத்தமின்றி
மகிழ்ச்சியோடு
பயிற்சியோடு
என் வெற்றிப் பயணத்தின் பாதை இது என்பதை
நான் தொட்டுவிட்ட
பிறகு
தொடருபவர்கள்
சொல்வார்கள்
சரியான
பாதை என்று.