421.அறிவற்றங்காக்குங்கருவிசெறுவார்க்கும் உள்ளழிக்கலாகாஅரண். மனம் துன்பத்தில் சேர்ந்து இருந்தால் அதில் இருந்து காக்கக் கூடிய கருவியாக அறிவு இருக்கும் . பகையாக இருக்கும் உள்ளத்தை பக்குவப்படுத்தும் அரணாக அறிவு இருக்கும். 422.சென்றஇடத்தால்செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பஅறிவு . மனம் சென்ற இடமம் எல்லாம் ஆசைப்பட்டு அலைய விடாமல் , தீமை ஆனது , நெருப்பு போல் சுட்டு நம்மை வருத்தும் என்று சுட்டிக் காட்டி அறவழியில் அழைத்துச் செல்வது அறிவு . 423.எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. பலர் பேசும் போது நாம் கேட்கும் கேள்வி ஞானப் பொருளை உள்வாங்கிக் கொண்டு, உண்மையானப் பொருளை கண்டு அறிந்து பயன் அடைவது அறிவு . 424.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. சொல்ல வரும் எண்ணத்தை எளிமையாக உண்மை தத்துவம் மாறாமல் தெளிந்த நீர்போல் சொல்ல வேண்டும். பிறர் பேசும் போது கேட்டு அவர் சொல்லும் நுட்பமான…
Author: இதழ் ஆசிரியர் சந்திரன்
“‘அம்மா…எப்பம்மா அப்பா வருவாங்க என தனது மழலைச் சொல்லால் கேட்டாள் பிரியா . ”குட்டிச் செல்லத்தைப் பார்க்காம அப்பாவுக்கு வேலையே ஓடாதாம் . இன்று இரவு அப்பா வந்திடுவாராம்” எனப் பிரியாவை கொஞ்சிய படி கூறினாள் சாந்தி . வியாபார விசயமாக வெளியூர் செல்வது சங்கரின் அலுவலக வேலைகளில் ஒன்று. அப்படித்தான் இன்றும் போயிருக்கிறான். அவன் வருகையை எதிர் பார்த்துத்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். எட்டுமணி ஆகியும் வராததால் குழந்தைக்கு பசிக்குமே என எண்ணிய சாந்தி… ”பிரியா / சாப்பிடுகிறாயா ?” என்றாள்.”சரிம்மா…’ என கண்ணைக் கசக்கிக் கொண்டே கூறினாள் பிரியா . தூக்கத்திற்கு அறிகுறி இன்னும் சிறிது நேரம் விட்டால் சாப்பிடாமலே தூங்கி விடுவாள் . எழுந்தாள் சாந்தி , சமையல் அறைக்குச் சென்றவள் தோசை வார்த்து தேங்காய் சட்னியுடன் ஊட்டினாள் பிரியாவிற்கு… அப்பா .வருவார் …வருவர்…
நீரில் வரும் மின்சாரம் நிலக்கரியில் வரும் மின்சாரம் அணு சக்தியில் மின்சாரம் ஆக்க சக்தியாய் மின்சாரம் கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் கம்பியில் வரும் மின்சாரம் நீரும் , இரும்பும் ஈர்க்கும் ரப்பர், கட்டை விலக்கும் மின்சாரம் தாக்கிய மனிதரை கையால் தொடக் கூடாது ஆபத்து என்று அறிந்தால் கட்டையை தூக்கி எறியணும் மின்சாரம் எங்கும் மின்சாரம் எதிலும் எங்கும் மின்சாரம் வாழ்விற்கு அவசியம் மின்சாரம் வளர் தொழிலாய் மின்சாரம்
மலைக்கோயில் மர்மம் 53 முன்கதை சுருக்கம் கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு வரும் இராஜா , ரகு ஆகியோர் அங்குள்ள ஒருமலை பற்றி அறிந்து வியப்புற்று அந்த மலை மீது ஏறிப்பார்க்க செல்கிறார்கள். மலை மீது இருக்கும் ஒரு கோவிலின் உள் பகுதியில் இருக்கும் சுவாமி சிலையின் பின்புறம் சில வினோதமான படங்கள் வரையப்பட்டிருக்கின்றன . அதைப்பற்றி அறிந்து கொள்வதற்காக அவற்றைப் பார்த்து இராஜா வரைந்து எடுத்துக்கொண்டு மலை மீது ஏறிய நண்பர்களுடன் அனைவரும் கீழே இறங்கி வந்து விடுகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தை அடைய மறுநாள் செல்ல முடிவு செய்கிறார்கள் . மலை மீது ஏறிச்சென்ற மாரியப்பன், அமாவாசை, மற்றும் கிராமத்து நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்புகின்றனர். கிராமத்து சிறுவர்களுக்கு இதுபற்றி ஒன்றும் புரியவில்லை . மாரியப்பன் உடல் அளவில் பலசாலிதான் .ஆனால் அவருக்கும் இந்த படங்கள் பற்றி ஒன்றும் விளங்கவில்லை . ஆனால் ஆடு மேய்க்கும் அமாவாசைக்கு மட்டும்…
கோவை காளப்பட்டி சக்திநகரில் உள்ள மீனாட்சி அரங்கில் ஔவையார் மா மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா ,இணைய தளத்தில் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழா ,எழுத்தாளர் ச. மல்லிகாவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மலர் வெளியீடு ஆகிய விழாக்கள் நடந்தன . இசைக்கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன் புல்லாங்குழல் இசையுடன் விழா தொடங்கியது . விழாவுக்கு ஒடிசா தமிழ்ச் சங்க தலைவரும், கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் தலைவருமான செ. துரைசாமி தலைமை தாங்கினார் .பேராசிரியர் வே..இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார் அனைவரையும் சோம. சந்திரன் வரவேற்றார்.. சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஓய்வு பெற்ற தமிழ்ச் சிற்பி க. தேவதாசு கலந்து கொண்டு சிறப்பித்தார் . விழாவில் வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் தமிழருவி கோவை கோகுலன் கலந்து கொண்டு ஔவையார் .பற்றிய சிறப்பு கருத்துரை வழங்கிப் பேசினார். விழாவில் பாரத தமிழ்த் தாமரை இதழ் ஆசிரியர்…
கறிவேப்பிலை -49 கறிவேப்பிலை என இதற்கு ஏன் பெயர் வந்தது எனப்பார்ப்போம் . கறி- கறிசமைக்க உதவுவது வேம்பு- வேப்பமரம் இலை- வேப்ப இலை வேப்பிலை சமைக்க முடியாது . கறிவேப்பிலை கறி சமைக்க பயன்படுத்துவது . இது இல்லாமல் சமைக்க முடியாது . கறிவேப்பிலையில் இரும்புச்சத்து உள்ளது. கறிவேப்பிலை போட்டு தாளிக்காமல் சமையல் செய்ய மாட்டோம். அப்படி தாளிக்கும் போது கறிவேப்பிலையில் உள்ள ஸ்டார்ச்சத்து அதாவது பச்சையம் எல்லாமே உணவில் சேர்ந்து விடுகிறது . கறிவேப்பிலையை நாள்தோறும் பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம் . சீரணசக்தியை கொடுக்கவல்லது நாம் உண்ணும் உணவு நன்கு சீரணிப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது .நன்கு பசியை தூண்டுகிறது . மனித உடலின் எதிரி என்றால் பித்தம், வாயு , கபம் இம்மூன்றும் தான் பித்தம் வந்தால் தலை சுற்றல், வாந்தி, சோர்வு இப்படி பல தொல்லைகள் வரும். வாயு வந்தால்…
இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா தொடங்கி தெருவிழாவாக நடந்து வருகிறது .இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருகுடிமகனும் இப்போது ஆரவாரத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் மூழ்கி கிடக்கிறார்கள்.. இந்தியாவை அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகிறவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். பல கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இந்த இதழ் வெளிவரும் போது பல இடங்களில் ஓட்டுப்பதிவு கூட நடந்து முடிந்து இருக்கும் . இந்தியாவைப் பொறுத்த மட்டில் பலவிதமான மொழிகள், , மதங்கள் உள்ள நாடு இது . அவரவர் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இயந்து வருகிறவர்களுக்கு தங்கள் வாக்குகளைப்பதிவு செய்யும் உரிமை பெற்றவர்கள் நம் மக்கள் . இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறக்குறை72 ஆண்டுகள் ஓடிவிட்டன .உலக மக்களின் பார்வைக்கு நாம் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். ஆனாலும்… பல மக்கள் இன்னும் நம் நாட்டில் எந்த வாழ்க்கை வசதியையும் அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதேபோல் கல்வி அறிவிலும் பல மைல் பின்…
உலகை காப்பதில் முன்னிலையில் இருப்பது ஐந்து பஞ்ச பூதங்கள் .நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு . இவைகள் தவிர்க்கமுடியாதது, இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் உலகம் செயல்பட முடியாது . தர்மத்தை காக்க பஞ்ச பாண்டவர்கள் தர்மயுத்தம் செய்தார்கள் .அதில் அவர்கள் வெற்றிக்கண்டுஇந்த உலகத்தில் தர்மத்தை நிலைநிறுத்தினார்கள். ஐந்து ஆண்டு தொடக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐசுவரியம் இதழ் சிறப்பான தமிழ் மொழியை மக்களிடையே கொண்டு செல்வதில் இதுவரை வெற்றியடைந்து வந்துள்ளது. ஸ்ரீ ஐசுவரியம் இதழ் . இனியும் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்லும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கி நான்கு ஆண்டுகள் முற்றுப்பெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். Fireworks ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கியதின் நோக்கம் -தமிழை நேசிக்கும் அனைவரிடமும் சென்று சேர்க்கும் எங்களது பணி மன நிறைவாகவே நிகழந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை . ஸ்ரீ ஐசுவரியம் வருங்காலத்தில் எப்படி…
ஜம்மு காஷ்மீரில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களைப் பிரிந்து வாடும் குடும்ப மகளிர்கள் அத்துயரில் இருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்தனை செய்து அந்த மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் . மார்ச் எட்டாம் தேதி மகளீர் தினம் தமிழ் மாதத்தில் மாசியில் வருகிறது. மாசி அதை சற்று ஆய்வு செய்து பார்த்தால்.. மார்ச் – மா +ர்ச் மாசி – மா+ சி மா – தாய் (அம்மா ) சி – பெண்மையின் ஒரு பகுதி பாற்கடலை கடையும் போது வந்த ஆலகால விஷத்தை சிவன் அருந்த விஷம் கழுத்துப் பகுதிவரை வரும்போது சக்தியான பார்வதி சிவனின் கழுத்துப் பகுதியை இருகரம் கொண்டு இறுக்கிப் பிடிக்க விஷம் கீழே இறங்காமல் நீல நிறமாகிவிட ….. அன்று இரவு முழுவதும் விஷம் உடலில் பரவாமல் இருக்க எல்லோரும் கண்விழித்து பூஜை…
முன்கதை சுருக்கம் கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு வந்துள்ள இராஜா, ரகு அங்குள்ள கிராமிய சூழ்நிலையில் பல இடங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் சுற்றி பார்த்து மகிழ்கிறார்கள் . கிராமங்களில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த பல இடங்களையும் பார்த்து வருகின்றனர். அப்போது அங்குள்ள மலை பற்றி கேட்டு அறிந்து அங்கு சென்று பார்க்க முயல்கிறார்கள் . அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள ஆடு மேய்க்கும் வயதான அமாவாசை என்பவர் நான் உங்களுக்கு மலை மீது ஏறுவதற்கான வழியைக் காட்டுகிறேன் என்று கூறினார் . ஆனால் நீங்கள் மலை மீது ஏறுவதற்கு உங்களுக்கு உறுதுணையாக நல்ல திடகாத்திரமான ஒருவர் தேவை. அப்படிப்பட்டவர் உங்களுடன் இருக்கிறாரா ? என்று அமாவாசை கேட்க, ” ஆம் இருக்கிறார் என்று இராஜா கூறி , மாரியப்பன் பற்றி அவரிடம் கூறினான் . அப்படியானால் சரி , ‘ இனி இன்று மலை மீதெல்லாம்…