இந்தியா  முழுவதும்  தேர்தல் திருவிழா தொடங்கி  தெருவிழாவாக  நடந்து வருகிறது .இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருகுடிமகனும் இப்போது ஆரவாரத்திலும் ஆர்ப்பாட்டத்திலும்  மூழ்கி  கிடக்கிறார்கள்..

இந்தியாவை  அடுத்து  ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகிறவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.  பல கட்டங்களாக நடந்து வரும் தேர்தல்  இந்த இதழ் வெளிவரும் போது பல இடங்களில் ஓட்டுப்பதிவு கூட  நடந்து  முடிந்து இருக்கும் .

இந்தியாவைப் பொறுத்த மட்டில் பலவிதமான மொழிகள், , மதங்கள் உள்ள நாடு இது . அவரவர் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இயந்து  வருகிறவர்களுக்கு  தங்கள் வாக்குகளைப்பதிவு செய்யும் உரிமை பெற்றவர்கள்  நம் மக்கள் .

இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறக்குறை72 ஆண்டுகள் ஓடிவிட்டன .உலக மக்களின் பார்வைக்கு  நாம் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம்.

ஆனாலும்…

 பல மக்கள் இன்னும் நம் நாட்டில் எந்த வாழ்க்கை வசதியையும்  அறியாதவர்களாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதேபோல்  கல்வி அறிவிலும் பல மைல் பின் தங்கிய மக்கள் இந்த தேசத்தில் தான் உள்ளார்கள் மறுப்பதற்கு இல்லை .  

வறுமையும் ,பசியும் கண்ணை மறைக்கும் போது எதைஎதையோ  விற்கும் மக்கள்  தங்களது வாக்குகளையும் விற்பதற்கு  தயங்குவதில்லை .வெட்கப்படுவதும் இல்லை.

கசங்காத பணக்கட்டுகள் கட்டுகட்டாக பலரிடம் குவிந்துகிடக்கும் நாட்டில் அதிக மதிப்பில் உள்ள ருபாய்  நோட்டுகளை இன்னும் முழுமையாக பார்க்காத மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை அரசியல் வாதிகள் யாரும் மறுக்க மாட்டார்கள் என்பது  நிதர்சனமான உண்மை.

மக்கள் தங்களுக்கு பிடித்தவர்கள், தங்கள் அபிமான கட்சியைச் சார்ந்தவர்கள்,  பதவிக்காக  இடம் மாறும் மனிதர்கள் , பணத்துக்காக , பொருளுக்காக  அனைவருமே ஓட்டளித்து விட்டார்கள்.

அத்துடன் இந்த பொதுத் தேர்தலில் ஒரு கோடிக்கும் மேல் புதிய வாக்காளர்கள்  தங்கள் வாக்குகளை முதல் முறையாக  எந்திரங்களில் பதிவிட்டுள்ளனர். ஒருவேளை புதிய வாக்காளர்களின்  எண்ணம் கூட பல வேட்பாளர்களின்  வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடியவைகளாக  இருக்கும்.

இப்போது நாடாளுமன்றத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் 2 கட்டமாக ஓட்டுப்பதிவுநடக்க உள்ளது. மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய தயாராக காத்திருக்கும் மக்கள் , தமிழகத்திலும் தொடர்ந்து யார் ஆட்சிக் கட்டிலில் இருக்க வேண்டும் என்பதையும்  இந்த 22 தொகுதிகளும்  தீர்மானிக்கும் நிலையில் உள்ளன  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

ஒரு கோழி முட்டையிட்டு  குறிப்பிட்ட நாட்கள் அடைக்காத்த பின்னர்தான்  குஞ்சு வெளிவருகிறது. அதே போல் தான்  நாடெங்கும் நடைபெற்றுள்ள  ஓட்டுபதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன .

வருகிற மே மாதம் 23 ந் தேதி  ஓட்டுகள் எண்ணப்படுகின்றன . அன்றைய தினம் மாலையே நாட்டைப்  ஆளப்போகிறவர்கள்   யார் என்பது  முடிவாகிவிடும்.

மக்கள்  ஒரு தீர்க்கமான நிலையான ஆட்சி அமைக்க  வழி வகுக்கும் வகையில் ஓட்டுகளை  பதிவிட்டு  உலகத்தில்  நிலையான இடத்தில்   இந்தியாவை  தலைநிமிரச் செய்ய முயலவேண்டும் .

இந்தியாவின் வெற்றிக்கும் , சரியான , தீர்க்கமான  திட்டங்களை செயபடுத்துவதற்கும்  நாட்டை சிறப்பாக வழி நடத்திச்  செல்லும் தலைவர்களை ஒருமித்த கருத்துடன் தேர்ந்து எடுப்போமாக .

Share.

Leave A Reply