முன்கதை சுருக்கம். நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்கள் இராஜா, ரகு, கிராமத்தில் ஆகியோருடன் தங்கி கிராமத்தில் இருந்த போது அங்குள்ள ஒரு மலைக்கு செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாக சொல்கிறார்கள் . அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள் அதை தெரிந்து கொள்ளும் அவர்கள் . அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். மலையில் புதையல் வைப்பதற்காக மலையைக் குடைந்து உள்ளே பல பொருட்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு உள்ளே செல்வதற்கான வழியை அவர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். . . உடனடியாக முத்துச்சாமி ஆட்டுக்கார அமாவாசை அனைவரும் அங்கு வந்து உள்ளே பார்த்தனர். பாதை கொஞ்சம் குறுகலாகவே இருந்தது. உடனே ஒரு ஆள் நுழைவதற்கும் பொருட்களை தூக்கிச் செல்வதற்கும் போதுமான அளவே இருந்தது.பல ஆண்டுகளாக அந்த குகை போன்ற இடம் மூடிக்கிடந்ததால் ஒரு விதமான வெப்பக்காற்று வெளிவந்தது…
Author: இதழ் ஆசிரியர் சந்திரன்
கட்டுரை ‘ ‘புலியை முறத்தால் விரட்டியவர்கள்” நம் சங்க கால பெண்கள். வாள் எடுத்து போர் தொடுத்து நாட்டைக் காத்தவர்கள் அரச குடும்ப பெண்கள் . ”கொக்கென்று நினைத்தாயோ” என்று முனிவரையே எதிர்த்துப்பெசியவள் பத்தினிப் பெண் .கெளரவர் சபையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தட்டிக் கேட்க ஒரு ஆடவரும் இல்லையா என கொதித்து எழுந்து கேட்டவள் பாஞ்சாலி . தனது கணவன் கொலையுண்டதைக் கண்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுடன் வாதாடி மதுரையை எரித்தவள் கண்ணகி . தனது கணவர் உயிரை எடுத்துச் சென்ற எமனிடமே வாதாடி தனது உயிரை மீட்டி வந்தவள் சாவித்திரி .இப்படி தைரியமான பெண்கள் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை.”மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்தோம் ” பேதை , பொதும்பை, மங்கை, மடந்தை ,அரிவை,தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களிலும் பெண்ணைப் போற்றி கொண்டாடுவதே தமிழர் கலாச்சாரம் .”அடுப்பூதும்” பெண்களுக்கு படிப்பு எதற்கு ”என்ற…
48.வலியறிதல் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல் .செய்யும் செயலின் வலிமையையும் , தன்னுடைய பலத்தின் வலிமையையும் , பகைவர் வலிமையையும், துணையாக இருப்பவர் வலிமையையும் அறிந்து தொழில் செய்ய வேண்டும். 472.ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்.சொல்பவரின் குறிப்பு அறிந்து தன் செயல்களை விழிப்புடன் மூங்கில் போல் வளைந்து கொடுத்து வலிமையுடன் செய்பவர்க்கு முடியாமல் போகும் காரியம் இல்லை . 473.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரித்தார் பலர்.தோற்றலின் வலிமை உண்மை அறியாமல் குறிக்கோள் இல்லாமல் செயல்பட்டு இடையில் முயற்சி இல்லாமல் விட்டு விடுபவர் பலர் உள்ளனர் . 474.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும் .தகுதியால் மனம் நிறைந்து சிறக்கும். மழு நிறைந்த அளவு அறிபவர் போல் தன்னை அறியாமல் வியந்து கர்வம் கொண்டால் விரைந்து அவன் பெயர் கெட்டுவிடும் . 475.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.மயில் இறகுகளை ஏற்றியவண்டி ஆனாலும்,…
தேங்காய்பூதேங்காய் பூ பல அற்புத நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கையின் பரிசு. தேங்காய்பூ என்பது நன்கு முற்றிய தேங்காயின் இருந்து உண்டாகிய தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ. நாம் பொதுவாக தேங்காயின் பூவில் அப்படி என்ன இருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம்? தேங்காய் , தேங்காய் தண்ணீர் , இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ அதை விட பலமடங்கு அதிகமாக தேங்காய் பூவில் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. தேங்காய்பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டது. இந்த தேங்காய்ப்பூ பருவகால நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மன அழுத்தம் , அஜீரணக் கோளாறு , நீரிழிவு, இதய நோய், தைராய்டு, புற்றுநோய் , உடல்…
முத்துக்கருப்பன் முன்கதை சுருக்கம். நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்கள் இராஜா, ரகு, ஆகியோருடன் தங்கி கிராமத்தில் இருந்த போது அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள் . அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள் அதை தெரிந்து கொள்ளும் அவர்கள் . அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியின் போது, கிராமத்தில் அனுபவம் வாய்ந்த சிலருடன் மலைப்பகுதிக்கு வந்து மலையில் புதையல் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்கிறார்கள்.. கிராமத்தில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி இருந்தனர்..அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை செய்தனர் .இருந்தாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி வரகு வைக்கோல் , மற்றும் மூலிகை செடிகளின் காய்ந்த கொடிகளைக்கொண்டு மலைப்பகுதியின் கீறல் போன்ற இடங்களில் உள்ளே வைக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.கல்மூக்கன் , கொல்ல ஆறுமுகம் இருவரும் சற்று தள்ளி…
முடக்கத்தான் கீரைஎலும்புகளுக்கு வலு சேர்க்க கூடிய மிக முக்கியமான சத்துக்கள் நிறைந்த கீரை இந்த முடக்கத்தான் கீரை. எனவே எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள். எலும்பு தேய்மானம் அடைந்தவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கொடியாக வளரக்கூடிய தாவரம் இதன் விதைகளை எடுத்து தூவினாலே எளிமையாக வளரக்கூடிய ஒரு கொடி வகையாகும். இந்த கீரையை மற்ற கீரையோடு சேர்த்து கூட்டு கீரையாக பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்தலாம். இதில் கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் நன்றாக நெய்விட்டு வதக்கி பயன்படுத்தினால் கசப்புத் தன்மை குறையும். இதை அடிக்கடி சாப்பிட்டு பழகினால் கசப்புத்தன்மை அறவே தெரியாது. இந்த முடக்கத்தான் இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக உண்டு வருவதால் இதன் பயன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை இந்தக்கீரையை நான்கு பல் பூண்டு நான்கு சிறு வெங்காயம் மிளகு சிறிது உப்பு எல்லாம் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதை அரைத்து தோசை…
முன்கதை சுருக்கம்.நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்களுடன் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். சரவணன் மகன்கள் இராஜா, ரகு, கிராமத்தில் தங்கி கிராமத்து சிறுவர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு இருக்கும்போது அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாகச் சொல்வதைக் கேட்டு அந்த மலைக்குச் சென்று பார்க்கிறார்கள். பலவிதமான கேள்விகளுக்கு அந்த மலையில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கிறார்கள். அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை சில அடையாளங்களைவைத்து தெரிந்து கொள்ளும் அவர்கள் அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள் .அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? என்பதை பார்க்கலாம். கல் மூக்கன் தன்னுடன் இருந்த கருப்பனிடம் கொல்ல ஆறுமுகம் பேயை ஒட்டிய கதையைச் சொல்லி முடித்தார்.. ஐயா ‘ கொல்லஆறுமுகம் ஐயாவும் நம்மோடு இருப்பது ரெம்ப நல்லது தான்” என்று கூறியபடி தலையாட்டினான் கருப்பன் . கல்மூக்கன் மறுநாளைக்கு மலையடிவாரம் செல்வதற்கான ஏற்பாடுகளைச்…
செந்தமிழ்வாணி ச. மல்லிகா எம்.ஏ.,46..சிற்றினம் சேராமை451.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.கீழோர் சேர்க்கைக்கு பயப்படுபவர் பெருமை மிக்க சான்றோர் .சிறுமை குணம் கொண்டவர்கள் உறவாய் சேர்த்து சுற்றுவர் . நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு .நிலத்தின் இயல்பு மண்ணில் நீர் அலைந்து அந்த மண்ணின் தன்மையைப்பெற்று இருக்கும்.அதுபோல மக்கள் கூட்டம் வாழும் சுற்றம், நட்பின் இயல்பால் அமையும் அவர்கள் அறிவு .453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னாள் எனப்படுஞ் சொல்மக்களின் இடம்,இசை, கொடைத் தன்மை எல்லாம் மனத்தால் ஏற்படும்.அவர் மேன்மை மக்கள் இன்னார் எனப் பேசும்படி நடப்பதில் இருக்கிறது .454.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவுமனத்தின் களைகளை களைந்து மற்றவர்கள் எடுத்துக் காட்டிச் சொல்லும் அளவிற்கு மணம்புரிந்து வாழ்ந்து காட்டுவதே அறிவாகும்.455.மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்மனதின் பரிசுத்தம் , செய்யும் செயலின் தூய்மை இவை இரண்டும் குலம் வாழும் சுற்றத்தாரை பொறுத்து மழை வருவது…
வான மெனும் வீதியில்வெள்ளிப் பூ பூத்ததுவெள்ளை நிற தேவதைவான் உலாவ வந்தது தங்க மேனி சூரியன்மினு மினுத்து வந்ததுவெள்ளைக் கதிர் ஒளியால்வாரிக் கொடுத்து நின்றது மாரி காலம் வந்ததும்மேகக் கூட்டம் கருத்ததுமின்னல் ஒளி தந்துகண் சிமிட்டிச் சென்றது பட படக்கும் பட்டாசாய்இடி இடித்துச் சென்றதுமழையும் பூமியில் விழுந்தது உழவன் வாழ்வும் செழித்தது
கபம் என்பது மனித உடலில் உள்ள தேவையற்ற நீரைக் குறிக்கிறது. இந்த நீரை வெளியேற்றுவதன் மூலம் உடலில் பல உபாதைகள் உருவாகாமல் தடுத்துக்கொள்ள முடியும்.கொரோனா என்னும் தோற்று உலக அளவில் மருந்து இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கையில் இதற்கான தீர்வினை நமது சித்த மருத்துவத்தில் அன்றே உணர்ந்து அறிந்து எழுதி வைத்து உள்ளனர் என்றால் அது மிகையில்லை.இந்த கபசுரக் குடிநீர் பருகுவதன் மூலம் அதை அழிக்கும் வல்லமை நம் உடல் பெறுகிறது. இது 19 மூலிகைகளின் கலவை அவை ” சுக்கு , மிளகு , திப்பிலி , கிராம்பு , நீர் முள்ளி வேர் , அக்ரகாரம், சிறுகாஞ்சொறி வேர் , ஆடாதோடை , கடுக்காய் தோல் , கோண்டாம் , சீந்தில் கொடி , சிறுதேக்கு , நிலவேம்பு , வட்டத்திருப்பி வேர் , கோரைக்கிழங்கு , சிற்றுரத்தை , கற்பூரவள்ளி இலை , அதிமதுரம்…