கறிவேப்பிலை –49
கறிவேப்பிலை என இதற்கு ஏன் பெயர் வந்தது எனப்பார்ப்போம் .
கறி- கறிசமைக்க உதவுவது
வேம்பு- வேப்பமரம்
இலை- வேப்ப இலை
வேப்பிலை சமைக்க முடியாது .
கறிவேப்பிலை கறி சமைக்க பயன்படுத்துவது . இது இல்லாமல் சமைக்க முடியாது .
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து உள்ளது. கறிவேப்பிலை போட்டு தாளிக்காமல் சமையல் செய்ய மாட்டோம். அப்படி தாளிக்கும் போது கறிவேப்பிலையில் உள்ள ஸ்டார்ச்சத்து அதாவது பச்சையம் எல்லாமே உணவில் சேர்ந்து விடுகிறது .
கறிவேப்பிலையை நாள்தோறும் பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம் .
சீரணசக்தியை கொடுக்கவல்லது நாம் உண்ணும் உணவு நன்கு சீரணிப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது .நன்கு பசியை தூண்டுகிறது .
மனித உடலின் எதிரி என்றால் பித்தம், வாயு , கபம் இம்மூன்றும் தான் பித்தம் வந்தால் தலை சுற்றல், வாந்தி, சோர்வு இப்படி பல தொல்லைகள் வரும்.
வாயு வந்தால் ஏப்பம், வலி .குத்து, மூச்சுத்திணறல் இப்படி தொல்லை தரும் .
கபம், சளி பிடித்தால் தலைவலி மூச்சு திணறல் இருமல் இப்படி பல நோய்கள் வந்து தொல்லை செய்யும். இந்த தொல்லைகளில் இருந்து விடுபட கறிவேப்பிலை நமக்கு மிகவும் பயன்படுகிறது.அதனால் தான் நாம் கறிவேப்பிலை இல்லாமல் சமைப்பது இல்லை .
கறிவேப்பிலையை ஒதுக்கி வைத்தாலும், அதன் சத்துக்கள் வேகும்போது உணவுடன் கலந்து விடுவதால் அதன் மணமும் .குணமும் உணவுடன் சேர்ந்து சென்று விடுகிறது.சத்து இல்லாத இலையைத் தான் ஒதுக்கி வைக்கிறோம் .
கறிவேப்பிலையை முழுமையாகப் பயன்படுத்த கறிவேப்பிலையை பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் அப்படியே உணவில் கலந்து விடும். ஒதுக்க தேவையில்லை .
இட்லி பொடியுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசைக்கு கறிவேப்பிலை சட்னி செய்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலை துவையல் அரைத்து தயிர் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் செய்யும் போதுசெய்து சாப்பிட்டால் சுவையும் கூடும், சீரணமும் நன்கு ஆகும் .
கறிவேப்பிலையை சுத்தம் செய்து அரைத்து சிறு வில்லையாக உருட்டி காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக வளரும் .முடி உதிர்வது நிற்கும். நரை தோன்றாது. நரை இருந்தால் மெல்ல மறைந்து போகும் .நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்பது இந்த சிறு கறிவேப்பிலை விசயத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது .
சிறிய கறிவேப்பிலையின் மருத்துவத்தை தெரிந்து கொண்டு கறிவேப்பிலை போட்டால் தான் சமையலில் மணம் வரும்.என்று கூறி நம் உடலுக்கு தேவையான மருத்துவ சக்தியை எப்படி கொடுக்க பயன்படுத்தி இருக்கிறார்கள் .இப்போது புரிந்திருக்கும் நமது மூதாதைகளின் பெருமை கறிவேப்பிலையும் ஒதுக்க வேண்டாம். மூதாதையர்களையும் ஒதுக்க வேண்டாம், என்று இப்போது புரிந்து விட்டடது தானே , இருவரையும் நமது இருகண்களாகப் பாவிப்போம் , பயன் அடைவோம்.

கறிவேப்பிலை துவையல் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வளர்ச்சி, கண்பார்வை தெளிவடையும், தாது விருத்தியடையும்.
கறிவேப்பிலை கொழுந்து இலையை பறித்து மென்றால் சளி, வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் .
வாய்ப்புண் உள்ளவர்கள் ஒரு டம்ளர் மோரில் கறிவேப்பிலை இல்லை சிறிது போட்டு அடித்து குடிக்க குணமாகும்.
விஷக்கடிக்கு கறிவேப்பிலை நல்ல மருந்தாகும், கறிவேப்பிலையை சிறிது பால் ஊற்றி அரைத்து கடித்த இடத்தில் தடவிவிட்டு, கறிவேப்பிலையை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் விஷம் முறியும்.
கறிவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி வளரும்.
50.வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் கொடி வகையைச் சேர்ந்தது கோடைக்கு உரியகாய்.கோடையில் ஏற்படும் வெப்பத்தையும், தாகத்தையும் தணிக்கக் கூடிய தண்ணீர் சத்து நிறைந்த காய் .
வெள்ளரிபிஞ்சு , சாப்பிட்டால் தண்ணீர் தாகம் குறையும்.வெள்ளரிக்காய் ,புட்டுப்பழம் ,வெள்ளரிப்பழம் இவை எல்லாம் வெப்பத்தை குறைக்கக் கூடியவை. கோடை வெயிலுக்கு நடந்து கொண்டே சாப்பிட பயணத்தில் சாப்பிட எளிமையானது வெள்ளரிப் பிஞ்சு .
வெள்ளரிக்காயில் சோடியம் சத்து இருப்பதால் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியைத் தருகிறது .
பித்தம், வாதம், உடல் சூடு வராமல் தடுக்கிறது. வெள்ளரிக்காய் சாப்பிடும்போது , வெள்ளரிக்காயில் உப்பு, மிளகாய்த்தூள் , சிறிது எலுமிச்சை சாறு விட்டும் சாப்பிடலாம் .
கோடை வெப்பத்திற்கு வரும் சொறி, சிரங்கு, அரிப்பு போன்றவை வெள்ளரிக்காய் சாப்பிடும்போது வராமல் தடுக்கப்படுகிறது .
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்ணின் மேல் வைத்தால் கண்ணின் கருவளையம் மறையும், கண்புத்துணர்வு பெரும்.
வெள்ளரிக்காயை வெட்டி, முகத்தில் தேய்த்து கழுவி வருவதால் வெப்பத்தால் ஏற்படும் மரு வராமல் தடுப்பதுடன் முகம்பளபளப்பாக இருக்கும்

வெள்ளரிக்காய் சிறுநீர்க் கோளாறு நீக்க பயன்படும். வெள்ளரிக்காய் கொடியில் காய்க்கக் கூடியது. கோடைக்கு ஏற்றகாய் வெள்ளரிப்பிஞ்சு நாவின் வறட்சியைப் போக்கி குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மை உடையது .
வெப்பத்தால் உடல் வேர்த்து, உடலும் நாவும் வறட்சியாக காணப்படும் போது வெள்ளரிப்பிஞ்சு , குளிர்ச்சி தருவதுடன் வெயில் தாக்கத்தையும் குறைக்கும் .
வெள்ளரிப்பழம் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியை தரக்கூடியது .
சிறுநீர் அடைப்பு ஏற்பட்டால் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாகவே விலகிவிடும், நீர் நன்றாக போகும்.
முலாம் பழம் சாப்பிட்டாலும் சிறு நீர் கோளாறுகள் நீங்கும் .’
அருகம்புல் ஒருகைப்பிடி எடுத்து நீர் விட்டு சுத்தம் செய்து கொண்டு, தண்ணீரில் வேகவைத்து அந்த நீருடன் பால்,சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை உறுதியாகும் .
சுரைக்காய் சாறு எடுத்து அதனுடன் எழுமிச்சைப்பலத்தை கலந்து குடித்தால் சிறுநீர் வியாதிகள் நீங்கும். மேலும் கீழா நெல்லி இலைகளை பறித்து சுத்தம் செய்து கல்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் சிறு நீர் கோளாறுகள் நீங்கும் .
நெரிஞ்சி முள்ளை எடுத்து தட்டி அரை லிட்டர் நீரில் கலந்து குடிக்க சிறுநீர் கற்கள் கரையும்.
வெள்ளரி இலைகளை சீரகத்துடன் வறுத்து போடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கோடை வெயிலுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் . எந்த வெப்பநோயும் தாக்காது .
வெள்ளரிக்காய் கோடை காலத்தில் சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியையும், தோளுக்கு பளபளப்பையும் தரும்.