கோவை காளப்பட்டி சக்திநகரில் உள்ள மீனாட்சி அரங்கில் ஔவையார் மா மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா ,இணைய தளத்தில் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழா ,எழுத்தாளர் ச. மல்லிகாவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மலர் வெளியீடு ஆகிய விழாக்கள் நடந்தன .

இசைக்கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன் புல்லாங்குழல் இசையுடன் விழா தொடங்கியது . விழாவுக்கு ஒடிசா தமிழ்ச் சங்க தலைவரும், கோயம்புத்தூர்  தமிழ்ச் சங்கமம்  தலைவருமான செ. துரைசாமி  தலைமை தாங்கினார் .பேராசிரியர் வே..இராமச்சந்திரன்  முன்னிலை வகித்தார் அனைவரையும்  சோம. சந்திரன் வரவேற்றார்..

சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஓய்வு பெற்ற தமிழ்ச் சிற்பி க. தேவதாசு கலந்து கொண்டு சிறப்பித்தார் . விழாவில் வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் தமிழருவி கோவை கோகுலன் கலந்து கொண்டு ஔவையார் .பற்றிய  சிறப்பு கருத்துரை வழங்கிப் பேசினார்.

விழாவில் பாரத தமிழ்த் தாமரை இதழ் ஆசிரியர் முனைவர் காசி.அரங்கநாதன் எழுத்தாளர் செந்தமிழ் வாணி ச.மல்லிகாவின் வெள்ளி  விழா மலரை வெளியிட  விக்னேஷ் ஜுவல்லர்ஸ் அதிபர் கே.பி. பாலன் பெற்றுக் கொண்டார்..விழாவில் கலந்து கொண்டவர்களும்  நூலினைப் பெற்றுக் கொண்டார்கள்.

துடியலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கா. ப. கலையரசன், மனோசக்தி மாசிலாமணி , முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கோவை கூல வாணிகர் இரா.சொ.இராமசாமி ,தொல்காப்பிய மன்றத் தலைவர் புலவர் ஆ. காளியப்பன் ,வசந்தவாசல் கவிமன்றத் தலைவர் ,நம்பிக்கை நாகராசன், புலவர் பொன்முடி,கவிதாயினிகள் பொன்.கெளசல்யா,தனுசு இராமச்சந்திரன் ,தாரணி ,மைதிலி யோகராஜ் ,ஆசிரியை கவிதா ,    ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்

வெள்ளி விழா  மலர் குறித்து புதினத் தென்றல் எழுத்தாளர்  முகில் தினகரன்  திறனாய்வு செய்து பேசினார். விழாவையொட்டி 15 கவிஞர்கள்,  பிற துறைகளில்  சிறந்து விளங்கிய 10 பெண்கள் என மொத்தம் 25 பெண்களுக்கு விருதுகள்  வழங்கி , அவர்களுக்கு பாரதியாரின் புதுமைப் பெண்கள் எனப்  பாரதியார் தலைப்பாகை அணிவித்து ஔவையார் விருது, வெள்ளி விழா  மலர்  வழங்கப்பட்டது , .விழாவில் பார்வையற்ற  மாற்றுத் திறனாளி,கவிஞர் சத்திய வேந்தனுக்கு  சிறப்புச் செய்யப்பட்டது

எழுத்தாளர் செந்தமிழ்வாணி  ச.மல்லிகா  ஏற்புரை நிகழ்த்தினார்.அப்போது அவர் பேசும் போது.”திருக்குறள் , பாரதியார் ,பாரதிதாசன்  பாடல்கள் விரும்பிப் படித்ததனால் பாரதியாரின்,”

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப  தில்லையே,

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப  தில்லையே”

என்ற வரிகள் தாரக மந்திரம் ஆனதால் இன்று வரை நிற்க முடிகிறது .’

பாரதியாரின் பற்றால் புதுவை மண்ணை மிதித்த போது பரசவம் ஆகி  உடல் சிலிர்த்தது  மறக்க முடியாதது. என்று பேசினார் .  நிகழ்ச்சிகளை  கோவை கோகுலன் தொகுத்து வழங்கினார். முடிவில் ச. பாலகணேசன் நன்றி கூறினார்.

Share.

Leave A Reply