ஜம்மு காஷ்மீரில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களைப் பிரிந்து வாடும் குடும்ப மகளிர்கள் அத்துயரில் இருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்தனை செய்து அந்த மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் .
மார்ச் எட்டாம் தேதி மகளீர் தினம் தமிழ் மாதத்தில் மாசியில் வருகிறது. மாசி அதை சற்று ஆய்வு செய்து பார்த்தால்..

மார்ச் – மா +ர்ச்
மாசி – மா+ சி
மா – தாய் (அம்மா )
சி – பெண்மையின் ஒரு பகுதி

பாற்கடலை கடையும் போது வந்த ஆலகால விஷத்தை சிவன் அருந்த விஷம் கழுத்துப் பகுதிவரை வரும்போது சக்தியான பார்வதி சிவனின் கழுத்துப் பகுதியை இருகரம் கொண்டு இறுக்கிப் பிடிக்க விஷம் கீழே இறங்காமல் நீல நிறமாகிவிட …..

அன்று இரவு முழுவதும் விஷம் உடலில் பரவாமல் இருக்க எல்லோரும் கண்விழித்து பூஜை செய்து சிவனை காப்பாற்றிய நாளே சிவன் இராத்திரி . தன்னை காப்பாற்றிய பார்வதிக்கு தனது உடலில் ஒருபகுதியைக் கொடுத்து மகிழ்ந்தார் சிவன். அந்த நாளை சிவன் இராத்திரியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். சிவன் தனது உடலில் பாதிப் பகுதியைக் கொடுத்ததால் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது அதை கண்டு பிடித்து செயல் பட்டால் வெற்றி அடையலாம் .

பாரதியார் சொல்கிறார் …

கனவு மெய்ப்பட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும் – என பராசக்தியிடம் வேண்டுகிறார் பாரதி .

பாரதியின் கனவு இன்று நினைவாகி விட்டது. காரியத்தில் உறுதியாகச் செய்பவள் பெண் என்ற பாரதியின் கனவுப் பெண்களை கும்மிப் பாட்டில் கூறுகிறார் ,,
‘
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு நினைவாகி ..

மண்ணுக்கு சீதை , விண்ணுக்கு கல்பனா சாவ்லா ,இசைக்கு எம்.எஸ் சுப்புலெட்சுமி, மருத்துவத்திற்கு மேரிகியூரி, காவல் துறைக்கு டி.எஸ்.பி. கிரண் பேடி , சேமிப்புக்கு சின்னப்பிள்ளை ,யோகாவிற்கு ஞானம்மா, இராணுவ மந்திரியாக நிர்மலா சீதாராமன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

அடுத்து பாரதி தாசன் என்ன சொல்கிறார் என்றால் ”குடும்ப விளக்கில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை…
‘
கொண்டவர்க் கெதுபி டிக்கும்
குழந்தைகள் எதைவி ரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன’ …என எண்ணுபவள்

‘அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்ப தல்லால்

இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?’ எனக் குடும்ப விளக்கில் கேட்கும் பெண்ணாய் படைத்தவர் …

ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதை ”இருண்ட வீடு ” படைப்பில் விளக்கி உள்ளார் .எனவே பெண்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி வெற்றி அடைய வேண்டும். மகளிர் தின வாழ்த்துக்கள்.

Share.

Leave A Reply