உலகை காப்பதில்  முன்னிலையில் இருப்பது  ஐந்து  பஞ்ச பூதங்கள் .நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு . இவைகள் தவிர்க்கமுடியாதது, இவற்றில் ஒன்று இல்லையென்றாலும்  உலகம் செயல்பட முடியாது .

தர்மத்தை காக்க பஞ்ச பாண்டவர்கள் தர்மயுத்தம் செய்தார்கள் .அதில் அவர்கள் வெற்றிக்கண்டுஇந்த  உலகத்தில் தர்மத்தை நிலைநிறுத்தினார்கள்.

ஐந்து ஆண்டு தொடக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐசுவரியம் இதழ் சிறப்பான தமிழ் மொழியை மக்களிடையே கொண்டு செல்வதில் இதுவரை வெற்றியடைந்து வந்துள்ளது. ஸ்ரீ ஐசுவரியம் இதழ் . இனியும் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்லும்  என்பதை வாசகர்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கி  நான்கு ஆண்டுகள் முற்றுப்பெற்று  ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததுள்ளது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Fireworks

ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கியதின் நோக்கம் -தமிழை நேசிக்கும் அனைவரிடமும் சென்று சேர்க்கும்  எங்களது பணி மன நிறைவாகவே நிகழந்திருக்கிறது  என்பதை மறுப்பதற்கில்லை .

ஸ்ரீ ஐசுவரியம் வருங்காலத்தில்  எப்படி இருக்க வேண்டும்  என்று எங்களது  பயணத்தில் நாங்கள் கவனமாகவே அடியெடுத்து வைத்து இருக்கிறோம்.

இப்போது இணைய தளத்தில் ‘ஸ்ரீ ஐசுவரியம் ‘ இதழைப் படிக்க  உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்கள், அன்பர்கள்  இணைந்து படித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

என்றைக்கும் நிலையாக  நிலைத்திருக்கும்படி ஸ்ரீ ஐசுவரியம் ‘இதழை இணையதளத்தில்  இணைத்திருக்கிறோம். நல்ல விஷயங்களை இணையதளத்தில் தேடிப் படிக்கும் வாசகர்களுக்கு  எங்கள்நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் தொடர்ந்து  ஸ்ரீ ஐசுவரியம் இதழைப்  படிக்க  ‘http;//sreeaishwariyam .com ‘  என்ற இணைய தளத்தில் எப்போதும் அனைவரையும் கவரும் வகையில்  இருக்கும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.அனைவருக்கும்   தமிழ் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்

Share.

Leave A Reply