421.அறிவற்றங்காக்குங்கருவிசெறுவார்க்கும் 

உள்ளழிக்கலாகாஅரண்.

மனம்  துன்பத்தில் சேர்ந்து இருந்தால் அதில் இருந்து காக்கக் கூடிய  கருவியாக  அறிவு இருக்கும் . பகையாக இருக்கும் உள்ளத்தை பக்குவப்படுத்தும் அரணாக அறிவு இருக்கும்.

422.சென்றஇடத்தால்செலவிடா  தீதொரீஇ

நன்றின்பால்  உய்ப்பஅறிவு .

மனம்  சென்ற இடமம் எல்லாம் ஆசைப்பட்டு அலைய விடாமல் , தீமை ஆனது , நெருப்பு போல் சுட்டு நம்மை வருத்தும் என்று சுட்டிக் காட்டி அறவழியில் அழைத்துச் செல்வது அறிவு .

423.எப்பொருள்யார்யார்வாய்க்  கேட்பினும்அப்பொருள் 

மெய்பொருள்  காண்ப  தறிவு.

பலர் பேசும் போது நாம் கேட்கும் கேள்வி ஞானப் பொருளை உள்வாங்கிக் கொண்டு, உண்மையானப் பொருளை கண்டு அறிந்து பயன் அடைவது அறிவு .

424.எண்பொருள  வாகச்  செலச்சொல்லித்   தான்பிறர்வாய் 

நுண்பொருள்   காண்ப  தறிவு.

 சொல்ல வரும்  எண்ணத்தை  எளிமையாக உண்மை தத்துவம் மாறாமல் தெளிந்த நீர்போல் சொல்ல வேண்டும். பிறர் பேசும் போது கேட்டு அவர் சொல்லும் நுட்பமான கருத்துக்களைப் புரிந்து கொள்வது அறிவுத் தன்மையாகும்.

425.உலகம்  தழீஇய   தொட்பம்  மலர்தலும் 

கூம்பலும்இல்ல  தறிவு .

உலகத்தில் உயர்ந்தவர்களை நட்பாக வைத்துக் கொள்வது அறிவுடையார் செயல்.முதலில் மிகுதியாக அன்பு செலுத்தி பின் பொறாமை கொண்டு விலாகாது இருப்பதே அறிவுடையோர் செயலாகும்.

426.எவ்வதுறைவது  உலகம்  உலகத்தோடு 

அவ்வதுறைவதுஅறிவு.

குற்றமற்ற தலைவனாக உலகத்தை காக்கின்றவன் ஒருவன். அதுபோல ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைமை உண்டு.குற்றம் புரியாது அவ்வாறு ஒழுகுதல்  அறிவுடையார் செயல் .

427 . அறிவுடையார்  ஆவ  தறிவார்  அறிவிலார் 

அ.’.தறி  கல்லா  தவர் .

அறிவுடையார் எதிர்காலத்தை எண்ணி செயல்படுவர் .அறிவற்றவர் அவ்வாறு எண்ணி செயல்படாது காலத்தை கழிப்பர் .

428.அஞ்சுவ  தஞ்சாமைபேதைமைஅஞ்சுவது 

அஞ்சல்  அறிவார்  தொழில்.

பயப்பட வேண்டிய  தீய செயல்களுக்குப் பயப்படாமல் இருப்பது அறிவிலார் செயல். பயப்பட வேண்டியதற்கு அஞ்சி திறம்பட வேலை செய்வர் அறிவுடையர்.

429.எதிரதாக்  காக்கும்  அறிவினார்க்  கில்லை

அதிரவருவதோர்  நோய் .

தனக்கு வரப்போகும் எதிர்ப்புகளை முன் தெரிந்து காத்துக் கொள்ளும் அறிவுடையார்க்கு அவர்கள் நடுங்கும்படியான துன்பம் வராது .

430.அறிவுடையார்எல்லாம்உடையார்அறிவிலார் 

என்னுடைய    ரேனும்     இலர்.

கல்வி கற்ற அறிவுடையார் எல்லா வளமும் உடையவர் ஆவர்.கல்வி இல்லா செல்வந்தர் அதை செலவு செய்யும் முறைமை தெரியாது  இல்லாதவர் போல் பொருள் சேர்த்து இருப்பார்.

Share.

Leave A Reply