முன்கதை சுருக்கம்

கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு வந்துள்ள இராஜா, ரகு அங்குள்ள கிராமிய சூழ்நிலையில் பல இடங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் சுற்றி பார்த்து மகிழ்கிறார்கள் . கிராமங்களில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த பல இடங்களையும் பார்த்து வருகின்றனர். அப்போது அங்குள்ள மலை பற்றி கேட்டு அறிந்து அங்கு சென்று பார்க்க முயல்கிறார்கள் . அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அங்குள்ள ஆடு மேய்க்கும் வயதான அமாவாசை என்பவர் நான் உங்களுக்கு மலை மீது ஏறுவதற்கான வழியைக் காட்டுகிறேன் என்று கூறினார் .

ஆனால் நீங்கள் மலை மீது ஏறுவதற்கு உங்களுக்கு உறுதுணையாக நல்ல திடகாத்திரமான ஒருவர் தேவை. அப்படிப்பட்டவர் உங்களுடன் இருக்கிறாரா ? என்று அமாவாசை கேட்க, ” ஆம் இருக்கிறார் என்று இராஜா கூறி , மாரியப்பன் பற்றி அவரிடம் கூறினான் .

அப்படியானால் சரி , ‘ இனி இன்று மலை மீதெல்லாம் ஏறமுடியாது. நீங்கள் மாரியப்பனைக் கூட்டிக்கொண்டு இன்னொரு நாள் வாருங்கள். அப்போது மலை மீது ஏறிப்பார்க்கலாம். என்றார்.

”சரி” அய்யா, என்றதுடன் இந்த மலையில் ஏறுவதற்கு ஏதும் தனிவழி இருக்கிறதா?என்று கேட்டான் இராஜா.

“”ஆம்”’ இருக்கிறது., இப்போது போய் பார்க்க முடியாது . எந்தப்பக்கம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறேன் என்றார் அமாவாசை.

இப்போது நாம் மலையின் கிழக்குப்பகுதியில் நின்று கொண்டு இருக்கிறோம்.. அப்படியே மலை அடிவாரத்தில் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து வடக்குப்பக்கமாக சென்றால் , அந்தப்பகுதியில் அடர்ந்த காடுகளும், சிறு சிறு மலைக்குன்றுகளும் அங்கு இருக்கின்றன. எனவே அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது.

பொதுவாக மலையின் கிழக்குப்பகுதியில் தெற்கு , மேற்கு பகுதியில் ஆட்கள் செல்வார்கள். வடக்குப்பகுதிக்கு செல்ல மாட்டார்கள்..அந்தபகுதிக்கு நாம் சென்றால் அங்கிருந்து மலை மீது ஏறும் விதமாக ஒரு வழி தெரியும்.

மலைமீது பெய்யும் கடும் மழை நீர் எல்லாம் ஒரே வழியில் ஓடி வரும் அந்த வழியில் உள்ள ஒரு சில பெரிய கற்கள் தவிர தண்ணீர் ஓடி…. ஓடி அருமையான ஒரு வழித்தடம் தெரியும் அதில் ஏறுவது மிக எளிது . அந்த வழியாக மேலே ஏறினால் மிக எளிதாக மலையின் உச்சிக்குச் சென்று விடலாம்.

மலை மீது ஏறுவதற்கான வழி நெடுக குறுகலான நீர் வழித்தடத்தை பின்பற்றியே செல்ல வேண்டும். இடையிடையே வழியை அடைத்துக்கொண்டு பாறைகளும்,மரங்களும் இருக்கும் , அதற்குதான் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டும் என்று கூறினேன் என்றார்.

அத்துடன் மலை மீதும் பல ஆபத்துக்கள் இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள்.. அங்கே மிக ஆழமான நீர்ச்சுனையும், வழுக்குப் பாறையும் உண்டு .மலையின் நடுப்பகுதியில் ஒரு சிறிய கட்டிடம் உள்ளது. அங்கே சென்று விட்டால் ஆபத்தில்லை.

ஆனால் அந்தக்கட்டிடமும் இப்போது பாழடைந்த நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். அது எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் இருக்கிறதாம். எனவே அங்கு செல்வதில் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன. என்று கூறினார்.

இதற்குள் அங்கு இருட்டு சூழத் தொடங்கி விட்டது. இனிமேலும் நாம் வீட்டுக்கு செல்லாவிட்டால் கிராமத்தில் இருந்து நம்மை தேடிவந்து விடுவார்கள். எனவே நாம் அனைவரும் உடனே கிராமத்துக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும்.என்றான் இராஜா

இதற்குள் மழை பெய்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு சுத்தமாக துடைத்து விட்டது போல் மலை அடிவாரம் காணப்பட்டது. மண் தரையில் தண்ணீர் முற்றிலும் காணாமல் போய் விட்டது.

இராஜா மற்றும் அவனுடன் சென்ற மற்ற ஊர் நண்பர்கள் அனைவரும் கிராமத்திற்கு கிளம்பினார்கள். வழிநெடுக ஆடிக்கொண்டும், கத்திக்கொண்டு கிராம இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

ஒரு சிறுவன் இருந்தாலே அவனை அடக்க முடியாது , ஐந்தாறு பேர் இருந்தால் அவர்களது ரகளைக்கு கேட்கவும் வேண்டுமா ? இந்த செயல்கள் அனைத்தும் இராஜா, ரகுவுக்கு மிகுந்தமகிழ்ச்சியை கொடுத்தது. அவர்களும் கிராமத்து சிறுவர்களாகவே இப்போது மாறி விட்டார்கள், .கத்துவதிலும், கல்லெறிந்து பழகுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாக இருட்டுவதற்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். வீட்டில் அப்பத்தா மட்டும் இருந்ததால் , கொஞ்சம் கேள்விகளோடு , பதில் எதிர்பார்க்காமல் இராஜா, ரகுவிற்கு தின்பண்டங்கள் கொடுப்பதிலும், காபி, கொடுப்பதிலும் கவனத்தை செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.

இது ராஜா, ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. ”தாத்தா ”இருந்து இருந்தால் , எங்கே போனீர்கள் , ஏன் இவ்வளவு நேரம் எங்கெங்கு சென்றீர்கள் என்றெல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பார்.தாத்தா அவரது வயதையொட்டிய நண்பர்களுடன் பேசிக்கொண்டு வெளியே சென்றதால் இவர்கள் இன்றைக்கு தப்பித்தார்கள்.

அப்போது , மாரியப்பன் வைக்கோல் கட்டுக்களை மாடுகளுக்கு வைப்பதற்கு வீட்டின் பின் பக்கம் செல்வது தெரிந்தது. உடனே இராஜா வேகமாக ஓடிச்சென்று , ‘மாரியப்பனிடம் , தாங்கள் மலைப்பகுதிக்குச் சென்று வந்ததையும் , மீண்டும் செல்ல இருப்பதையும் கூறினான்.

”ராஜா நாளைக்கு பெரிய ஐயா அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று வரும் படி கூறி இருக்கிறார்கள். நான் அதிகாலையிலே சென்று விடுவேன். அதன் பின்னர் அடுத்த நாள் இதுவரை வேலை ஒன்றும் சொல்லவில்லை . பெரிய ஐயாவிடம் சொல்லிவிட்டு அன்றைய தினம் நாம் மலைப்பக்கம் செல்லலாம்”.. என்று கூறினான் மாரியப்பன்.

தொடரும்

Share.

Leave A Reply