ஒரு குறிக்கோள் எடுத்துகொள் * உன் வாழ்க்கையை அந்தக் குறிக்கோளாக ஆக்கிக் கொள் * அந்தக் குறிக்கோளைப் பற்றி யோசி * கனவு கான் அந்தக் குறிக்கோளாகவே வாழ் *மூளை , நரம்பு, தசை உடம்பின் எல்லாப் பகுதிகளையும் அந்தக் குறிக் கோளாகவே நிரப்பிக் கொள் *மற்ற எல்லா குறிக்கோளையும் விட்டு விடு – இதுதான் வெற்றிக்கு வழி
Author: இதழ் ஆசிரியர் சந்திரன்
45. புளி புளியமரம் நிழல் கொடுப்பதுடன் புளியங்காய், புளியம்பழம் கொடுத்து உதவுகிறது .புளியம் பூ சிறியதாக அழகாக இருக்கும். இதை சாப்பிட்டால் புளிப்பு சுவை இருக்கும். புளியம்பிஞ்சு அளவான புளிப்பில் இருப்பதால் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தது . புளியங்காய் கல் எடுத்து எறிந்து பறிப்பதும், மரத்தில் ஏறி பறித்து உண்பதும் சிறுவர்களுக்கு விளையாட்டும் சந்தோசமும் கூட. இது அவர்களது உடற்பயிற்சிக்குக்கூட காரணமாகிறது. புளியங்காயுடன் உப்பு, மிளகாய்த்தூள் வைத்து சாப்பிடுவார்கள் .பழமாக மாறும்போது சேருபழம் என்பார்கள்.அது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும் . மேல்தோல் கூடுபோல் முதிர்ந்து உள்ளே பழம் தனியாக இருக்கும் புளியம்பழம் தோல் நீக்கி விட்டு , புளியிலுள்ள கொட்டையை நீக்கி விட்டு பயன்படுத்துவார்கள் .புதுப்புளி இனிப்பாக இருக்கும். நாள்பட நாள்பட புளிப்பு சுவை கூடி விடும் . புளி இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. உப்பு, புளி, காரம் சேர்ந்தால்தான் குழம்பின் சுவை கூடும் . சிலருக்கு…
பொருளாதாரப் பாதிப்பு உலக நாடுகளிடம் , வேலைப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஒன்று அல்ல இரண்டு அல்ல …பல கம்பெனிகள் சம்பளம் கொடுக்க முடியாமல் கணக்கை முடித்துக் கொடுத்தார்கள். இருந்த வேலை போய் விட்டது.அடுத்த வேலை தேடிக் கொள்ளலாம் என நினைக்கும் முன்பே கையில் மொத்தப் பணமும் வந்து திக்கு…முக்காட வைத்தது. பத்தாயிரத்தை முழுமையாகப் பார்த்து அறியாத தொழிலாளர்கள் ,தகுதி வாரியாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் எனக் கொடுத்து கணக்கு முடிக்கப்பட்டு இருந்தது.அதில் ராமுவும் ஒருவன். கையில் பணம் வரவும் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது.தன் நிலை எது என்பதை மறந்து உயரத்தில் பறக்கும் பலூன் போல் பறக்க ஆரம்பித்து விட்டான் ராமு. தனக்குத் தெரிந்த தொழில் செய்ய முற்படாமல், தனக்குத் தெரியாத உயர் பதவி வேலைகள் செய்வது தான் தனக்கு கவுரவம் என எண்ண ஆரம்பித்து விட்டான் ராமு. உயரத்தில் பறக்கும் பலூன் காற்று அடிக்கும்…
தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகவும் அடையாளமாகவும் கொண்டாடப்படுவது பொங்கல் விழாவாகும். வாழ்வின் வழி நெறியாகவும்,உயிர் வாழ்வதற்கான முக்கியத் தொடக்கமாக விளங்குவது பொங்கல் திருநாள் என்றால் மிகையில்லை தமிழர்கள் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட இத்திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வீட்டில் வைக்கப்படும் பூளைப்பூ (அல்லது ) வேப்பிலை ,மாவிலை வைத்து காப்புக்கட்டுதல் மூலம் விழா தொடங்குகிறது. போகிப் பண்டிகை என்பது ‘பழையன கழிந்து புதியன புகும்’ நாளாக இது கொண்டாடப்படுகிறது. தேவையற்ற ,பழையபொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். இதே போல நமது மனதில் உள்ள தீய எண்ணங்களையும் எரித்து நல் எண்ணங்களை,சிந்தனைகளை உருவாக்கி கொள்ளும் தொடக்க நாளாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். பொங்கலை கிராமங்களில் தான் இன்னும் சீரும் சிறப்பும் பெருமையும் மிகுந்த விழாவாகக் கொண்டாடுகிறார்கள் .ஆடி ஓடி களைத்த நேரத்தில் அறுவடை முடிந்ததும் பொங்கல் விழாவாவுக்காக புதுப்பானையில் அழகான கோலமிட்டு ,வீட்டு வாசல் முன்பு சூரியதேவனை நோக்கி புத்தரிசி புது…
தமிழர்களின் வீரத்திற்கும் , பாரம் பரியத்திற்கும் நாடெங்கும் தலைநிமிரச் செய்த -செய்கின்ற ஒரு விழாவாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையில்லை . கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் மட்டுமே மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடிக்கொண்டிருந்த இந்த ஜல்லிக்கட்டு விழா இப்போது நகரப் பகுதிகளிலும் விளையாட வேண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வேட்கையை கிளப்பி இருக்கிறது என்றால் அது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதுதான். நாம் எல்லோரும் கிராமங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடியேறியவர்கள் தான். நமது வருகையால் கிராமம் பெரிய நகரமாக உருவெடுத்து உள்ளது. ஆனால் கிராம விளையாட்டுக்களை நாம் நகரங்களில் கொண்டாட முடிவதில்லை அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மேல் ஒரு அழுத்தத்தை கொடுத்து அதை அமுக்கி விடலாம் என்று எண்ணம் ஏற்பட்டது தான் அது அடக்குமுறையில் இருந்து மீண்டும் வீறுகொண்டு எழுந்து இப்போது எல்லோர் மனதிலும் நிறைந்து…
மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நீராடி வாசலில் கோலம் பூவைத்து கார்மேக கருக்களில் பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலுக்குச் சென்று திருமஞ்சனம் கண்டு பார்புகழும் திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பஜனை பாடி இறைவனை வணங்கி சார்பு பற்று நீங்க வலம் வந்து அருள் பெறுவது மங்கையர் நோன்பு கன்னிப் பெண்கள் முதல் முதியவர் வரை நோன்பு இருப்பது குடும்ப நலனுக்கே தன்னலம் கருதாது வழிபாடும் போது மனமும் உடலும் ஆரோக்கியம் பெரும் சன்மார்க்க நெறியால் நன்மைகள் விளையும் சக்கரச் சுழற்சியில் சகலமும் நலமாகும் திண்மை விலகும் தீரம் உருவாகும் திடமான நம்பிக்கையே மங்கையர் நோன்பு இல்லத்தை தூய்மை செய்து பொலிவுடன் போகி அன்று காப்புக் கட்டி நல்ல நேரத்தில் கதிரவனுக்குப் பொங்கலிட்டு குலவை போட்டு மஞ்சள் கரும்பு வைத்து இல்லறம் நல்லறமாக இறைவனை வணங்கி இன்ப பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி வெல்லப் பொங்கல் பகிர்ந்து உண்டு வள்ளுவர்வழியில் வாழ்வதுவே மங்கையர் பொங்கல்
இராமநாதபுரம் கம்பன் கழக 19 -ஆம் ஆண்டுவிழா இரண்டு நாட்கள் இராமநாதபுரம் காசுக்கடை ஆயிரவைசிய வியாபாரிகள்சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது , முதல் நாள் நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவர் அரிமா எம்..ஏ.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கம்பன் கழக செயலாளர் கு.விவேகானந்தன் வரவேற்றார். விழாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன . இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அரிமா எம்.ஏ.சுந்தர்ராஜன் தலைமை தாங்க, டாக்டர் பரணிகுமார், மற்றும் கவிதா கதிரேசன் முன்னிலை வகித்தனர். பாடகர் அரியமுத்து அவர்களின் இறைப்பாடலுடன் விழா தொடங்கியது .கம்பன் பாடலை தனுஷ்யா மோகன்ராஜ் பாட, பரமேஸ்வரி தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது .கவிதைகள் சுவையுடன் ரசிக்கும்படி இருந்தது .கவியரங்கத்தை தொடர்ந்து கம்பன் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் கம்பன் விருதுகளை வழங்கினார்.…
கிருஷ்ணரின் கீதை கவிஞர் ச.மல்லிகா ஞான யோகம் -தொடர்ச்சி ————– கேசவா , பற்று அழியாமல் ,புலன்கள் அடங்காமல் இருந்தால் என்ன கேடு விளையும் என்பதை விளக்குங்களேன் என கேட்கிறான் அர்ஜுனன் . ”அர்ஜுனா ” மனிதனுக்கு போகங்களில் பற்று உள்ளவரை, அதன் காரணமாக அவனுடைய புலன்கள், அவனைப் பலவந்தமாக போகங்களில் ஈடுபடுத்துகிறது . அதனால், அவனுடைய மனத்துடன் சேர்ந்த புத்தி பரமாத்மாவின் நினைவில் திடமாக இருக்க முடிவதில்லை. புத்தியோகியாக விரும்புகிறவன் , முதலில் பற்றை அறவே ஒழிக்க வேண்டும்.பிறகு புலன்களைத் தன் வசத்தில் வைத்துக் கொள்ளத் தீவிர முயற்சி செய்ய வேண்டும். பின்பு, எல்லாப் புலன்களையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டு மனிதன் மனதை அடக்கி என்னையே பற்றிக் கொண்டு தியானத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என விவரிக்கிறார் கிருஷ்ணன். மேலும் கூறுகிறார் அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒரு முகப்படுத்த சித்தமுடையவன் என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும்.…
குறள் சுவை அறிவோம் ————————————— 12.நடுவு நிலைமை 111.தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். ஒருவரின் தகுதி, வாழும் பகுதி மக்களுடன் நல்ல முறையில் நடப்பதே, நடுநிலை பெருமையாகும். 112.செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து . நடுநிலையுடன் வாழ்பவர் செல்வம் உயர்வான செயலுக்கு பயன்படுவதால் அழியாமல் மிச்சமாகி மக்களுக்கும் பாதுகாப்பாக உதவும். 113.நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் . நலம் தந்தாலும் நடுநிலைமை கெட்டால் வரும்செல்வம் என்றால் அன்றே தவிர்க்க வேண்டும்.. 114.தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் . தர்மம் செய்பவர், நடுநிலைமை இல்லாதவர் என்று சொல்வர் அவர் அவருடைய பிள்ளைகளின் செயல் பாட்டால் தெரிந்து கொள்ளலாம். 115.கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. வறுமையும், செல்வாக்கும் எல்லோர் வாழ்விலும் நடக்கும்.மன அமைதி தருவது நடுநிலைமை தவறாது ஒழுக்கத்துடன் வாழ்வதே பெருமை தரும்…
செந்தமிழ் வாணி ச.மல்லிகா எம்.ஏ., பழமொழிக் கதை ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ கஞ்சன் ,கருமி, ஈயாதவன் இப்படி எப்படி சொன்னாலும் ஒரு புன்னகையை மட்டும் காட்டுவாரே அன்றி கோபமோ, ரோசமோ வராது. உயிர் போகும் நிலையில் கூட உதவுவாரா என்றால்…..போகும் உயிர் போகட்டுமே இருந்து என்ன ஆகப்போகிறது என்பார். இரக்க குணம் கடுகு அளவு கூட இல்லை. அடுத்தவர்களுக்குத் தான் கொடுக்க மனமில்லை தானாவது அனுபவிப்பாரா என்றால் அதுவும் இல்லை . சந்தை முடியப் போகும் சமயத்தில் போவார், விற்றது போக சொத்தை கழிவான காய்கறியை மலிவாக வாங்கி பையில் நிறைத்துக் கொண்டு வருவார். காப்பித்தூள் நிறம் மாறுவதற்காக சிறிது பால் ஊற்றி காப்பி போடச் சொல்வார் . இவர் மனைவியோ தாராளமாகச் செய்பவள்.இவருக்கு கழுத்தை நீட்டிய நாளில் இருந்து அவரைப் போல இருக்க பழகிக் கொண்டு இருந்தாள் .இல்லை என்றால் குடும்ப வண்டி ஓடாதே என்பதற்காக. காய்ச்சல்…