Author: இதழ் ஆசிரியர் சந்திரன்

அழகுக் குறிப்பு அரிசி நீரின் பயன்கள் கிண்ணத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக்கொள்ளுங்கள் . பின் அதனை நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இதனால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை உண்டாக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு முகம் பொலிவோடு காணப்படும்.எளிய பயிற்சி செய்து பார்க்கவும் – பிரேமா பாலகிருஷ்ணன் பழமொழி”ஆறு கெட நாணல் விடு,ஊரு கெட நூலை விடு”நாம் அறிந்த விளக்கம் :-நேரடியாய் பழமொழியை பொருள் கொள்ள பார்த்தோமானால் ஆற்றை பழகுவதற்கு நாணல் விட்டும். ஊரை கெட்டுப்போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும் ஆனால் இந்த விளக்கம் உண்மை அல்ல.உண்மையான விளக்கம் :-நூல் விட்ட ஊரும் நாணலாற்ற ஆற்றங்கரையிம் பழுதாகி போகும். என்பதை அர்த்தம் கொள்ளவேண்டும். அதாவது படிப்பறிவில்லாத படிப்பதற்கு ஆர்வம் காட்டாத…

Read More

முன்கதை சுருக்கம் விடுமுறையில் தாத்தா வசிக்கும் கிராமத்திற்கு வரும் இராஜா, ரகு ஆகியோர் அங்குகிராமத்தில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி பொழுதை களிக்கிறார்கள். ஒரு சமயம் அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலைபற்றி அங்குள்ள மக்கள் பலவிதமானச் செய்திகளைக் கதைகதையாகச் சொல்கிறார்கள்.. இவர்களும் அந்த மலையின் உச்சிக்குச் சென்று பார்க்கும்போது அங்குள்ள மக்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. தொடர்ந்து மலை பற்றி ஆராய்ந்து சில உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார்கள். மலையின் அடிவாரத்தில் கற்பாறைகளை நகர்த்தினால் புதையல் கிடைக்கலாம் என்று அங்குள்ள பெரியவர்களின் மூலம்.தெரிந்துகொண்டு முயற்சிக்கிறார்கள் ‘வெள்ளையா என்ன அதற்குள் விடிந்து விட்டதா?’ என்றபடி கொல்ல ஆறுமுகம் எழுந்து துண்டை உதறி தோளில் போட்டபடி வந்தார். கொல்ல ஆறுமுகம் ஆறடி உயரம் இருப்பார். எப்போதும் அள்ளி முடிந்த பாகவதர் முடி ,இடுப்பில் ஒரு நாலுமுழம் வேட்டி மட்டும் உடுத்தியிருப்பார். ஒரு துண்டு இது தான் அவரின் உடைகள் . ஆனால்…

Read More

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒருதோண்டி மெத்தக்கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி-எழுதியவர் கடுவளிச் சித்தர் .இதன் பொருள்பிரம்மா – குயவனாக உவமிக்கப்பட்டும்உயிர் – ஆண்டியாகவும்கருப்பையில் உடல் வளர்வது -தோண்டியாகவும்பத்துமாதம் – உலகத்தை பார்க்காமல் வளரும் கருதோண்டி உடைவது- நீர்க்குடம் உடைந்து குழந்தை பிறப்பது .இந்தக்கருத்தை மையமாகக் கொண்டே இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது .இப்பாடலின் அர்த்தம் புரியாமல் பாடி மகிழ்பவர்களும் உண்டு, பலர் கேட்டு சிரிப்பவர்களும் உண்டு .பிரம்மன் படைப்பையும் , பத்துமாத கரு பந்தத்தையும் உள் அடக்கிய கடுவளிச் சித்தர் பாடல் என்பது தெரிந்து பாடி மகிழலாம் .

Read More

திருமூலர் எழுதிய திருமந்திரம் என்றார் நூல் ,தமிழர்களின் பழங்கால நூல்களில் ஒன்று. தமிழர்களின் வாழ்க்கைக்கு நல் வழிப்படுத்தும் விசயங்கள் அனைத்தையும் மந்திரங்களாக வடிவைமைத்து உள்ளார். இந்த திருமந்திர கருத்துக்களை ஸ்ரீ ஐசுவரியம் இணையதள வாசகர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர் எழுதிய பாடல்களையும் அதில் உள்ள கருத்துக்களையும் எளிய முறையில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. புதிதாக இப்பகுதி வருகிறது படித்து பயன் பெறுங்கள்- கவிஞர் ச. மல்லிகா .பாடல் -4இருள் அழித்த ஒளிச் சோதியான்அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத்து என்தனைப் போதவிட் டானைப்பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்திஇகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனேபொருள் அனைத்துலகம் மெய்ப்பொருளை உலகுக்கு எல்லாம் உயிராய் உண்மைப் பொருளாய் இருக்கிறவன் இறைவன் . உலகத் தோற்றத்திற்கு மூல காரணமான வித்து ,விதை, மூலப் பொருளை மறைத்து வைத்துள்ளவன், என் உடலை வைத்த இடத்திலிருந்து மறையச் செய்து என்னை இந்த உலகில் வாழவிட்ட…

Read More

45. பெரியாரைத் துணைக் கோடல் 441.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல் .தர்மநெறி தெரிந்த பெரியோர் போதனைகள் நன்மை பயக்கும் .எனவே , அவர்களுடன் நட்பு கொண்டு மேன்மை அடையும் வகை அறிந்து வாழவேண்டும் . 442.உற்றநோய் நோக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல் .தனக்கு வரும் துன்பநோய் போக்கி இனி துன்பம் வராமல்காத்துக் கொள்வது எப்படி என சிந்தித்து செயல் படுபவர் பெருமையைப் போற்றி அவருடன் நட்புக் கொள்ள வேண்டும் .443.அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமாரக் கொளல் .அரிதாக கிடைப்பதில் அரியது சான்றோர்களைப் மதித்துப் போற்றி தனக்கு சுற்றமாக்கிக் கொள்வதாகும் . 444.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை .தம்மை விட அறிவில் சிறந்தவரை தமக்குச் சுற்றமாக்கி நல்வழியில் நடப்பது வலிமைகளில் எல்லாம் தலைசிறந்ததாகும் . 445.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் .மக்களுக்கு நல்ல வழிகளை ஆய்ந்து கூறும் அமைச்சர் நடத்தை அறிந்து…

Read More

ஸ்ரீ ஐசுவரியம் இதழ் தொடங்கி இப்போது ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ ஐசுவரியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சோதனைகளைத் தாண்டி அனைவர் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்த ஒரு இதழாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதில்எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொடக்கத்தில் இருந்து எங்கள் இதழைப் படித்து மகிழ்ந்து எங்களுக்கு ஊக்கம் தந்து கொண்டிருப்பவர்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்.எங்கள் இதயம் கனிந்த நன்றியினை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஓராண்டாக ஐசுவரியம் இதழ் தொடர்ந்து இணையதளத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இணைய தள இதழை உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி வாசகர்கள் -குறிப்பாக தமிழ் இதயங்கள் படித்து இன்புற்று வருகின்றனர்.. தொடக்கத்தில் ஒரு சிறிய வட்டத்தில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஐசுவரியம் இதழின் செயல்பாடுகள் இப்போது உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. நல்ல…

Read More

இன்றைய வாழ்க்கை சூழ் நிலையில் கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமி கை குலுக்கும் போது, இருமும் போதும், தும்மும் போதும் மற்றவர்க்கு பரவி ,பரவுவது தெரியாமலே தொற்றி சளி, காய்ச்சலில் தொடங்கி பல உயிர்களைக் கொன்ற பின்பு தான் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ‘கொரோனா வைரஸ்’ என கண்டு பிடிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியோர்கள் தான் அதிகமாக உயிர் இழந்துள்ளனர்.கொரோனா சீன நாட்டில் ஊகான் நகரில் தொடங்கி உலக நாடுகளில் இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ,பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து , தென்கொரியா ,பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி பயப்பட வைக்கும் அசுரனாய் நிற்கிறது. இதை அழிக்கும் சக்தியே தமிழ்ப் பண்பாட்டுக் கவசம். கை நீட்டி கை குலுக்கிய நாட்டினர் கைமடக்கி வணக்கம் சொல்வது நம் பண்பாடு , நெஞ்சுக்கு நேராக வணங்குவது நட்பு, உறவுக்கு, குரு, சான்றோர்களுக்கு முகத்துக்கு நேராக…

Read More

நாடு வளர நாடு விரிவுபடுத்தஅண்டை நாட்டை அடக்க அணுகுண்டுவீடு வளர வெளிநாடு செல்லஅன்னிய மொழி கற்று பயணம்ஈடு தாங்கி தகுதி வளர்த்துதனிமைப் பட்டு அன்னிய நாட்டில்ஈன்றாள் பிரிந்து இன்னல் பொறுத்துஇல்லாள் நினைவில்; வேலை செய்ய சீனாவில் பரவிய கொரோனா வைரஸ்கொன்றது பல உயர்களை அசுரவேகத்தில்தீனம் தொட்ட கரங்களில் பரவிதொற்று நோயாய் பரவியது உலகில்வினயம் செய்ததோ சீனா தன்செயல்தன்னை சுட்டு பிறரையும் சுடுகிறதுமீட்டுதல் இந்த தருணத்தில் கடமைபரவாது தடுக்க அவசர நடவடிக்கை சித்தர்கள் செய்த மருத்துவ மகிமைசிறந்த தோர் தடுப்பு மருந்துமத்தித்தல் முறையில் வேப்பிலை பயன்படும்உடலில் வேப்பெண்ணை தேய்த்து தடவநித்தம் அழிவை நித்தன் காப்பான்தமிழர் பண்பாடு வணக்கம் சொல்தல்சித்தன் முருகன் சிவன் வணங்க காக்கும் சக்த மாரி அருள்வாள்

Read More

மலைக்கோயில் மர்மம்  55 முன்கதை சுருக்கம் கோடை விடுமுறையில்  கிராமத்தில்  இருக்கும் இராஜா, ரகு ஆகியோர் அங்குள்ள ஒரு மலை மீது ஏறிப்பார்க்கச் செல்கிறார்கள்  அங்கு பல அதிசயங்கள் புதைத்து கிடப்பதை காணுகிறார்கள். அவற்றை  தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .எனவே அந்த இடத்திற்கு தக்க துணையுடன் செல்கிறார்கள். ஆனால் மலையின் எந்த  பகுதியிலும் வழியைக் காண முடியவில்லை .ஒருவழியாக பாறை படிவங்களில் உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு உள்ளே செல்வதற்கு வழி தெரிகின்றதா என்று உற்று பார்க்கிறார்கள். இந்த நேரத்தில்  சில ஆட்களுடன் மலை அடிவாரத்திற்கு செல்கிறார் முத்துச்சாமி  மலை  அடிவாரப்பகுதியில் குறிப்பிடட்ட இடத்தில் சுற்றி சுற்றிப்பார்த்த  அவர்கள் உள்ளே எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாறைகளைக் கொண்டு செயற்கையாக மூடி வைத்துள்ளதை யூகிக்க முடிகிறது. இருந்த போதிலும் மலையின் அடிப்பகுதிக்குள் சென்றால்தான்  அங்கு என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அங்கே மறைவிடமாக பயன்படுத்தி பொருட்களை…

Read More

திருமூலர் எழுதிய திருமந்திரம் என்றார் நூல் ,தமிழர்களின் பழங்கால நூல்களில் ஒன்று. தமிழர்களின் வாழ்க்கைக்கு நல் வழிப்படுத்தும் விசயங்கள் அனைத்தையும் மந்திரங்களாக வடிவைமைத்து உள்ளார். இந்த திருமந்திர கருத்துக்களை ஸ்ரீ ஐசுவரியம் இணையதள வாசகர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர் எழுதிய பாடல்களையும் அதில் உள்ள கருத்துக்களையும் எளிய முறையில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. புதிதாக இப்பகுதி வருகிறது படித்து பயன் பெறுங்கள்- கவிஞர் ச. மல்லிகா . பாடல் -2 காலனை வென்ற கால காலன் போற்றிஇசைத்துஇன்னுயிர்மண்ணும்புனிதனை நாற்றிசைக்கும்நல்லமாதுக்குநாதனை மேற்றிசைக்குள்தென் திசைக்கொருவேந்தனையும் கூற்று உதைத் தானையான்கூறுகின் றேனே. பொருள் வாழ்த்தி வணங்கி வழிபட்டு , உலகத்து உயிர்கள் எல்லாம் கொண்டாடும் பெருமைக்குரியவன் பரம்பொருள் . அவன் திசை நான்கிற்கும் , ஆதி சக்தி நாயகிக்கும் தலைவன். அவனே கிழக்கு, மேற்கு, தெற்கு , வடக்கு , தென்கிழக்கு, தென்மேற்கு , வடமேற்கு, வடகிழக்கு,…

Read More