வான மெனும் வீதியில்
வெள்ளிப் பூ பூத்தது
வெள்ளை நிற தேவதை
வான் உலாவ வந்தது
தங்க மேனி சூரியன்
மினு மினுத்து வந்தது
வெள்ளைக் கதிர் ஒளியால்
வாரிக் கொடுத்து நின்றது
மாரி காலம் வந்ததும்
மேகக் கூட்டம் கருத்தது
மின்னல் ஒளி தந்து
கண் சிமிட்டிச் சென்றது
பட படக்கும் பட்டாசாய்
இடி இடித்துச் சென்றது
மழையும் பூமியில் விழுந்தது
உழவன் வாழ்வும் செழித்தது