
48.வலியறிதல்
- வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் .
செய்யும் செயலின் வலிமையையும் , தன்னுடைய பலத்தின் வலிமையையும் , பகைவர் வலிமையையும், துணையாக இருப்பவர் வலிமையையும் அறிந்து தொழில் செய்ய வேண்டும்.
472.ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
சொல்பவரின் குறிப்பு அறிந்து தன் செயல்களை விழிப்புடன் மூங்கில் போல் வளைந்து கொடுத்து வலிமையுடன் செய்பவர்க்கு முடியாமல் போகும் காரியம் இல்லை .
473.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரித்தார் பலர்.
தோற்றலின் வலிமை உண்மை அறியாமல் குறிக்கோள் இல்லாமல் செயல்பட்டு இடையில் முயற்சி இல்லாமல் விட்டு விடுபவர் பலர் உள்ளனர் .
474.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் .
தகுதியால் மனம் நிறைந்து சிறக்கும். மழு நிறைந்த அளவு அறிபவர் போல் தன்னை அறியாமல் வியந்து கர்வம் கொண்டால் விரைந்து அவன் பெயர் கெட்டுவிடும் .
475.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயில் இறகுகளை ஏற்றியவண்டி ஆனாலும், அளவுக்கு மேல் ஏற்றினால் வண்டியின் அச்சுமுறிந்து விடும். அதுபோல பொருளோ, நிதியோ,அளவுக்கு மேல் இருக்கும் போது அதுவே நம்மை அழித்து விடும் .
476.நுனிக்கொம்பர் ஏறினார் அ.’.திறந் தூக்கின்
உயர்க்கிறுதி யாகி விடும் .
ஒரு மரத்தின் நுனிக் கிளையில் ஏறினாள் தொடர்ந்து ஏறமுடியாது உயிருக்கே ஆபத்தாகும் .ஆனால் புத்தகச் சுவடியை நுனியில் இருந்து படித்தால் வாழ்க்கைக்கு உயர்வாகிய மேன்மை கிடைக்கும்.
477.ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
நம்மிடம் உள்ள செல்வத்தை உழைத்து அதன் மதிப்பு அறிந்து அறம் செய்ய வேண்டும் .அவ்வாறு செய்வதே செல்வத்தைப் போற்றி அறம்செய்யும் நெறியாகும் .
478.ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
.பொருள் வரும் வழி சிறியதாக இருந்தாலும் , அளவு அறிந்து செலவு செய்தால் கெடுதல் வராது.பொருட் செலவு அதிகமாகாமல் எல்லை வகுத்துக்கொள்ள வேண்டும்.
479.அளவறிந்து வாழாதான்வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் .
தன்னிடம் உள்ள பொருள் அறிந்து அதற்குத் தகுந்தபடி வாழாதவன் வாழ்க்கை சிறப்புடையது போல் தோன்றி பின்னர் அழிந்து போய் விடும் .
480.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும் .