கபம் என்பது மனித உடலில் உள்ள தேவையற்ற நீரைக் குறிக்கிறது. இந்த நீரை வெளியேற்றுவதன் மூலம் உடலில் பல உபாதைகள் உருவாகாமல் தடுத்துக்கொள்ள முடியும்.
கொரோனா என்னும் தோற்று உலக அளவில் மருந்து இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கையில் இதற்கான தீர்வினை நமது சித்த மருத்துவத்தில் அன்றே உணர்ந்து அறிந்து எழுதி வைத்து உள்ளனர் என்றால் அது மிகையில்லை.
இந்த கபசுரக் குடிநீர் பருகுவதன் மூலம் அதை அழிக்கும் வல்லமை நம் உடல் பெறுகிறது. இது 19 மூலிகைகளின் கலவை அவை ” சுக்கு , மிளகு , திப்பிலி , கிராம்பு , நீர் முள்ளி வேர் , அக்ரகாரம், சிறுகாஞ்சொறி வேர் , ஆடாதோடை , கடுக்காய் தோல் , கோண்டாம் , சீந்தில் கொடி , சிறுதேக்கு , நிலவேம்பு , வட்டத்திருப்பி வேர் , கோரைக்கிழங்கு , சிற்றுரத்தை , கற்பூரவள்ளி இலை , அதிமதுரம் , தாளிசப்பத்திரி .
இந்த பத்தொண்பது கலவைகள் சேர்த்து சரி விகிதங்களில் கலந்து தயாரிக்கப்படுகிறது, சில இடங்களில் 15 மூலிகைகள் கொண்டும் கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.
இதை குடிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் சளி , இருமல் , காய்ச்சல் போன்ற உபாதைகள் கட்டுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது .
இதை 5 கிராம் எடுத்து 250 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க விட்டு பின்பு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவேண்டும். இதனை 2 வயது முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5ml அளவிற்கும் , 5 முதல் 10 வயது வரை உள்ளவர்கள் 10ml அளவிற்கும் , 8 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 20ml அளவிற்கும் , 12 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் 30 எம்எல் அளவிற்கும் , 15 வயது முதல் மேற்பட்டவர்கள் 50ml அளவிற்கும் எடுத்துக்கொள்ளவேண்டும் . கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவரின் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளுவது நல்லது.
நமது தமிழ் சித்த மருத்துவத்தின் மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மக்களிடம் பழக்கத்தில் இருந்து வந்துள்ளதை திருக்குறள் தொல்காப்பியம் போன்ற பல நூல்களின் வாயிலாக நாம் உணர முடிகிறது. அத்தகைய பழம்பெரும் மருத்துவத்தின் அற்புதத்தை இன்றும் நாம் பயன்படுத்தி நம் அன்றாட வாழ்வில் நோய் நொடியின்றி நலமுடன் வாழவேண்டும்.
.
.
– ச.ம. பாலகிருஷ்ணன்.சென்னைi

Share.

Leave A Reply